முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல்



வெளியிடப்பட்டது.


இதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதற்காக பல காரணங்கள் சொல்லப்பட்டது. 

சரியான முகவரியில் இருந்தவர்களைத் தவிர, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்கள், ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?நீக்கப்பட்டதா? என்பதை எப்படிச் சரிபார்ப்பது என்பதைப் பார்க்கலாம். 

முதலில் voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

பிறகு உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிடலாம்.3. இதன் பின்னர் 'தேடல்' பொத்தானை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களைக் காணலாம்.

இதில் உங்கள் பெயர் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை நீங்கள் உறுதிசெய்துகொள்ளலாம் .



வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லையா? நீங்கள் செய்ய வேண்டியது என்ன?  இருப்பினும், இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி மாதம் 18-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.

இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி மாதம் 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் சேர்த்து 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

5.44 கோடி ஓட்டுக்கள் மட்டுமே தற்போது தமிழ்நாட்டில் உள்ளது!

தற்போதைய வரைவு பட்டியலில் 2.66 கோடி பெண்களும் 2.77 கோடி ஆண்களும் என மொத்தம் 5,43,76,755 வாக்காளர்கள் உள்ளனர் என்று TN CEO அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். SIRக்கு முன், தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தோராயமாக 6.41 கோடியாக இருந்தது. இந்த திருத்தத்தின் விளைவாக மாநிலம் முழுவதும் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்குதல்களின் முறிவு:

இறப்பு: 26.94 லட்சம்  

நிரந்தரமாக மாற்றப்பட்டவர்கள்/இடம்பெயர்ந்தவர்கள்:66.44 லட்சம் (அவர்களில் 66,44,881 பேர் பதிவு செய்யப்பட்ட முகவரியில் வசிக்கவில்லை என மூன்று சுற்றுகள் வீடு வீடாகச் சரிபார்த்த பிறகு கண்டறியப்பட்டது). நகல் உள்ளீடுகள் (பல இடங்களில் பதிவு செய்யப்பட்டவை): 3,39,278சென்னையில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முன்பு 40,04,694 பேர் இருந்த நிலையில் தற்போது 25,79,676 பேர் உள்ளனர். மொத்தம் 35.58% சதவீதம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியான விவரங்களில் சென்னையில் அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு .காரணம் வெளியூர் பிழைப்பு வாதிகள் வாக்கு சோழிங்கநல்லூரில் 2,18,444 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 25.2% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 7,01,871 வாக்காளர்கள்.

 திருப்பூர், கோயம்பத்தூர் காஞ்சிபுரத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்


கோயமுத்தூரில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கோயம்பத்தூர் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 32,25,198. இதில் 6,50,590 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட கோயம்பத்தூர் மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை - 25 இலட்சத்து 74 ஆயிரத்து 608 பேர் ( 25,74,608 )

இறந்த வாக்காளர் எண்ணிக்கை - 1,19,489

முகவரியில் இல்லாதவர்கள் - 1,08,360

நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் - 3,99,159

இரட்டைப் பதிவுகள் - 23,202

இதர காரணங்கள் - 380 பேர்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 பேர் நீக்கம். (முன்பு 12,85,432 பேர் இருந்த நிலையில் தற்போது 12,03,917 பேர் உள்ளனர்)

கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்கள் நீக்கம். (முன்பு - 8,98,362, தற்போது - 8,18,672)

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு வாக்காளர்கள் எண்ணிக்கை - 23,68,967, நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை - 3,31,787, தற்போதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை - 20,37,180.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3,24,894 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 19,34,447 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 16,09,553 வாக்காளர்கள் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 3,62,429 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 26,68,108 பேர் இருந்த நிலையில் தற்போது 23,05,679 பேர் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 1,93,706 வாக்காளர்கள் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 14,66,650, எஸ்ஐஆருக்குப் பின்பு 12,72,954.

விழுப்புரம் மாவட்டத்தில் 17,27,490 பேர் இருந்த நிலையில் 1,82,865 பேர் நீக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,74,549 பேர் நீக்கம். (முன்பு - 16,80,626, தற்போது - 15,06,077 வாக்காளர்கள்)

ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 10,57,700 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 9,12,543 வாக்காளர்கள் உள்ளனர்.

நாகப்பட்டினத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 5,67,730 வாக்காளர்கள். தற்போது 5,10,392 வாக்காளர்கள்.

செங்கல்பட்டில் 7,01,871 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்பு 27,87,362 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 20,85,491 பேர் உள்ளனர்.

திருப்பூரில் 5,63,785 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 24,44,929. தற்போது - 18,81,144.

திருவண்ணாமலையில் 2,51,162 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 21,21,902 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 18,70,740 வாக்காளர்கள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் 84,329 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 11,60,607. தற்போது - 10,76,278.

மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 27,40,631 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 23,60,157 பேர் உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் 2,74,274 வாக்காளர்கள் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 14,01,198. தற்போது - 11,26,924.

அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 5,30,890. தற்போது - 5,06,522.

கடலூரில் 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முன்பு 21,93,577 வாக்காளர்கள், தற்போது 19,46,759 வாக்காளர்கள்.

புதுக்கோட்டையில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 13,94,112 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 12,54,525 பேர் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நீக்கப்பட்டவர்கள் - 3,25,429. முன்பு - 19,97,189, தற்போது - 16,71,760.

கன்னியாகுமரியில் 1,53,373 வாக்காளர்கள் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 15,92,872. தற்போது - 14,39,499.

சிவகங்கையில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,50,828. எஸ்ஐஆருக்கு முன்பு 12,29,933 வாக்காளர்கள். தற்போது 10,79,105 வாக்காளர்கள்.

தூத்துக்குடியில் 1,62,527 பேர் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 13,28,152. தற்போது - 11,65,631.

தென்காசியில் 1,51,902 வாக்காளர்கள் நீக்கம். தற்போது 12,25,297 வாக்காளர்கள் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 1,25,739 பேர் நீக்கம். முன்பு 11,30,303 வாக்காளர்கள். தற்போது 10,04,564 வாக்காளர்கள்

தஞ்சாவூரில் 2,06,503 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்பு 20,98,561 வாக்காளர்கள். தற்போது 18,92,058 வாக்காளர்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 16,26,485 வாக்காளர்கள். தற்போது 14,36,521 வாக்காளர்கள்.

திருநெல்வேலியில் 2,14,957 பேர் நீக்கம். இறந்தவர்கள்: 83,309 பேர், இடம் பெயர்ந்தவர்கள்: 1,17,359 பேர், ஏற்கனவே பதிவில் உள்ளவர்கள்- 12,000 பேர், ஊரில் இல்லாதவர்கள்: 2,260 பேர், இதர காரணங்கள்: 29 பேர்.

விழுப்புரத்தில் 1,82,865 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 17,27,490, தற்போது - 15,44,625.

திருவள்ளூரில் 6,19,777 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 35,82,226 வாக்காளர்கள். தற்போது 29,62,449 வாக்காளர்கள்.

இராமநாதபுரத்தில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கம். முன்பு 12,08,690 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 10,91,326 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பத்தூரில் 1,16,739 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 9,99,411. தற்போது - 8,82,672.

மயிலாடுதுறையில் 75,378 வாக்காளர்கள் நீக்கம். முன்பு - 7,83,500. தற்போது - 7,08,122

வேலூர் மாவட்டத்தில் 2,15,025 லட்சம் வாக்காளர்கள் நீக்கம். தற்போது 10,88,005 பேர் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 பேர் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 5,90,490. தற்போது - 5,40,942.

நீலகிரியில் 56,091 வாக்காளர்கள் நீக்கம். எஸ்ஐஆருக்கு முன்பு - 5,89,167. தற்போது - 5,33,076.

திருவாரூரில் 1,29,480 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆருக்கு முன்பு - 10,75,577. தற்போது - 9,46,097.ஆகும். வாக்காளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் 5.43 கோடி இறந்தவர்கள், இரட்டை பதிவுகள், முகவரி மாறியவர்கள் என்று நீக்கப்பட்ட வாக்காளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66.4 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் 3.98 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இறந்தோர் 26.9 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...