நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது அவமதிப்பு வழக்கில் நீதிபதி கருத்து
நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அப்படி நடந்தால் அரசியல் சட்ட இயந்திரம் முடங்க வழி வகுத்து விடும்,''
என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை மதுரை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் ஏழுமலை கிராமம் ராமர.விக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீபத்தூணில் டிசம்பர் மாதம்., 3 ஆம் தேதியில் கார்த்திகைதா தீபத்தை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய செய்வது காவல்துறையினர் கடமை என உத்தரவிட்ட நிலையில் அதை நிறைவேற்றாததால் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல்துறை ஆணையர் லோகநாதன், திருப்பரங்குன்றம் கோயில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிற மனுதாரர்கள் உட்பட 10 பேரை மனுதார் அழைத்துச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றவும், அதற்கு சிஐஎஸ்எப் வீரர்களை அனுப்பவும் உத்தரவிட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி இன்று தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆகியோர் காணொலிக் காட்சியில் ஆஜராகினர். மதுரை காவல்துறை துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் ஆஜராகினர்.
மாவட்ட ஆட்சியர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவிந்திரன், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் மாதவன் ஆகியோரும், காவல்துறை ஆணையர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன், கூடுதல் அரசு பொது பிளீடர் ரவி ஆகியோரும், கோயில் செயல் அலுவலர் சார்பில் வழக்கறிஞர் ஜோதியும் ஆஜராகினர்.
அப்போது நீதிபதி கூறியதாவது:
"நான் சோர்வடைந்து விட்டேன். நீதிமன்ற அவமதிப்புக்காக எத்தனை வழக்குகளில் அதிகாரிகளைக் கடிந்து கொள்வது? இன்று கூட, 'நீதிமன்றம் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், அதன் உத்தரவை அமல் செய்யும் போது சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும்' தலைமை செயலாளர் அறிக்கை வாசிக்கிறார். இது மன்னிக்க முடியாதது. ஒரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அதைக்காட்டிலும் உயர்ந்த நீதி அமைப்பு தடை விதித்தாலோ அல்லது ரத்து செய்தாலோ தவிர, மற்ற அனைத்து சூழல்களிலும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.
சில வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத சூழல் இருக்கும் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த சூழலை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாதது. அப்படியெனில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாககவே கருதப்படும். அரசியல் சட்ட இயந்திரம் முடங்குவதற்கு வழிவகுத்து விடும். வழக்கு 2026 ஆம் ஆணடு ஜனவரி மாதம்.,9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், தலைமை செயலாளர் பொறுப்பான நிலை எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார் இந்த நிலையில் மேலீமுறையீட்டு வழக்கில் நீதிபதிகள் கண்டிப்பு "தனி நீதிபதியின் உத்தரவில் சட்டப்பூர்வமாக என்ன தவறு உள்ளது என்பது குறித்து மட்டுமே வாதிட வேண்டும்"
திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது தர்ஹா தரப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கண்டிப்பு. வழக்கில் தடை விதிக்க முடியாது
தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆகியோர் நாளை ஆஜராவதற் விலக்கு அளிக்க அரசு சார்பில் கோரிக்கை வைத்தனர் அதை
தனி நீதிபதியிடமே கேட்டுப் பெற்று கொள்ளுங்கள், நாங்கள் உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில் மேலீமுறையீட்டு வழக்கில் நீதிபதிகள் கண்டிப்பு
"தனி நீதிபதியின் உத்தரவில் சட்டப்பூர்வமாக என்ன தவறு உள்ளது என்பது குறித்து வாதிட வேண்டும்"
திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது தர்ஹா தரப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கண்டிப்பு.இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நடந்த நிகழ்வுகள் நீதியை யரும் மிரட்ட முடியாது
உண்மையையயும் யரும் மறைக்க முடியாது!திருப்பரங்குன்றம் மலைக்கே நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் தெளிவாகச் சொன்னது அதே நேரத்தில், “ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்கத் தடை”என்று பரப்பப்பட்ட பொய் செய்திகளுக்கு உயர்நீதிமன்றம் கருத்து சரியனது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தனி நீதிபதி அமர்வு விசாரிப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை! தடங்கலும் இல்லை!அதிகாரத்தில் இருப்பதால் நீதியைக் கட்டுப்படுத்த நினைத்தால் அது அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்
“விசாரணை வேண்டாம் அமைதியாகவே வழக்கை மூடிடலாம்” என நினைத்தவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த பதில்
‘சட்டம் உங்கள் அனுமதியைக் கேட்காது!’இ து மத விவகாரமல்ல திருப்பரங்குன்றம் ஓட்டுக்கான மேடை இல்லை, ஒப்பந்தத்துக்கான இடமில்லை, சமாதானத்தால் அடைக்கக் கூடிய விஷயமும் இல்லை!
நீதிபதி விசாரிப்பார்! உண்மை வெளியே வரும்! திருப்பரங்குன்றம் அரசியலின் கைப்பாவை அல்ல என்பதே
நீதியின் கண்காணிப்பில் இருக்கும் கண்ணியம் மிக்க ஆன்மீகம் உள்ள ஸ்தலம்.வழக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்சில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஆதரவாக தாக்கல் செய்த இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் தெலுங்கானாவின் முன்னாள் அரசு வழக்கறிஞர் எஸ். ஸ்ரீராம் ஆஜராகி வாதாடினார். உத்தரவை நிறைவேற்றும் பட்சத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல்துறை கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்படுவது தனி நீதிபதி உத்தரவை அவமதிப்பதாகும். மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவு காரணமாக எந்த பொது அமைதியும் சீர்குலையவில்லை. அரசு கூறுவது ஏற்புடையதல்ல. மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை.
எனவே இந்த உத்தரவை மனசாட்சியுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கமாக விளங்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என்பதன் மூலம் அதிகாரிகள் தங்களின் அடிப்படைக் கடமையை மீறி உள்ளனர். மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டது மனுதாரரால் பொது அமைதி குலைந்தது என்பது ஒரு சாக்குப்போக்குக் காரணம். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றும் முன்னரே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிபதி தீர்ப்பை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக சம்பவத்தன்று திருப்பரங்குன்றம் பகுதியில் காவல்துறை யினர் குவிக்கப்பட்டனர் என வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொது அமைதி கெடும் என்று அரசு தரப்பு கூறுவதும், அதற்கு மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று கருத்து தெரிவித்தனர். அதன் பின்பு மூத்த வக்கீல் ஸ்ரீராம் தனது வாதத்தை முன் வைத்தார்.




















கருத்துகள்