ஏவிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை தயாரிப்பாளர் ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பின் காரணமாக 86. வயதில் காலமானார்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலமானார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்க முடியாமலிருந்த ஏ.வி.எம் சரவணன், ஒரு மாதத்திற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் கடந்த ஒரு மாதங்களாக இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு காலமானார்.
1958 ஆம் ஆண்டில் இருந்து ஏவிஎம் நிறுவனத்தின் திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டவர் ஏவி.எம் செட்டியாரின் மூன்றாவது மகன். ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப பங்காற்றியவர் ஏவிஎம் சரவணன்.பூத உடல் இன்று மாலை 4 மணி வரை ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
மாலை 4 மணிக்கு ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. நேற்றுத் தான் அவருடைய பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கதுஇயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் உள்ளடக்கிய சினிமா. மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து, பல மொழிகளில் ஏராளமான படங்களை தயாரித்து, தமிழனின் பெருமையை வட இந்தியா வரை கொண்டு சென்று வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அவரது மகன்களில் ஒருவரான தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், தந்தை வழி நகரத்தார் எனற போதிலும் தாய் வழி சௌராஷ்ட்ரா
எதிலும் துல்லியம் உலகமெல்லாம் பரவியுள்ள தமிழ் மக்கள் அனைவரும் AVM என்ற மூன்றெழுத்தை இசையுடன் பார்த்ததும் இவரது தந்தை ஏவிஎம்மும், அவர் எடுத்த படங்களும் நினைவுக்கு வரும். அவரால் பொருளையும் புகழையும் கொடுத்த வாழ்வு பலரும் பின்பற்றத்தக்கது.
எதுவாக இருந்தாலும் துல்லியமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர். எந்த விஷயத்திற்காகவும் சமரசம் ஆகாதவர். எந்தப் படமாக இருந்தாலும் திருப்தி இல்லாமல் வெளியில் போக கூடாது. மக்களுக்கு பிடிக்குதோ, இல்லையோ நமக்கு திருப்தியாக இருக்க வேண்டும் என்பவர் என
அவரது தந்தை பற்றி கூறும் போது உதாரணத்திற்கு களத்தூர் கண்ணம்மா படமான சமயத்தில், அதே கதையை வேறு ஒருவர் படமாகவே எடுத்தனர். நடிகர்கள் மட்டும் தான் வேறு, வேறு. ஆரம்பத்தில் இது தெரியவில்லை. நாளாக நாளாகத்தான் தெரிந்தது. படத்தை வேகமாக முடித்து ரிலீஸ் செய்யலாம் என எண்ணி படத்தை போட்டு பார்த்தால். நிறைய காட்சிகளை மாற்ற ச்சொல்லிவிட்டதனால் அந்தப்படம் முன்னமே வந்துவிடும், இந்தப் படம் நான்கு வாரம் தள்ளிப்போகும் என்றதனால் என்ன? மகாபாரதம், இராமாயணம் திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள். இருந்தாலும் படம் பார்க்க மக்கள் எதற்காகப் போகிறார்கள். அந்தப்படத்தை பற்றி கவலைப்படாதீர்கள், நம்ம படம் நன்றாக வரணும் மட்டும் எண்ணுங்கள் எனக் கூறவே. அதுபோல நடந்த நிகழ்வு பகிர்ந்த சரவணன் எப்போதும் மரியாதை மிக்க நபர் அதேப்போன்று ‘கடவுளின் குழந்தை’ என்ற அந்தப்படம் முன்பே வெளியானது. ஆனாலும் அந்தப் படத்தைப் பற்றித் தான் இப்போதும் பேசுகிறார்கள். அப்போது தான் தெரிந்து கொண்டதாக , சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ, எதுவாக இருந்தாலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்றும்.
அதேப்போன்று நேரம் தவறாமை என்பது அவர் உடன் பிறந்தது. எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று அவரது தந்தை திட்டமிடுவார் எனவும் சொன்ன நேரத்தில் சொன்ன தேதியில் இதை முடிக்கணும் என எதிர்பார்ப்பார் எனவும். புரியவில்லை என்றாலும் மீண்டும் சொல்லிக் கொடுப்பார். ஆபிஸ் பையன் கூட ஒரு தகவல் சொன்னால் அதை கூட ஏற்றுக் கொள்வார். எல்லோரின் கருத்துக்களையும் உள்வாங்கி கொள்வார்.எனும் சரவணன் அவரது மூன்றாவது மகன் அவரும் அப்படியே. ஒரு முறை சென்னை மாநகர் ஷெரீப் ஆகவம் இருந்தார்1960-களின் துவக்கத்தில் நிறுவப்பட்ட இந்த AVM உலக உருண்டை பல திரைப்படங்களில் காட்டப்பட்டது. "இதைப் பார்க்கும்போது தமிழ் சினிமாவையே மொத்தமாகப் பார்த்தமாதிரிதான்" என்கிறார் ஒரு உதவி இயக்குநராகப் பணிபுரியும் நண்பர். வடபழனியில் வந்து ஆயிரம் சினிமா கனவுகளோடு இறங்கும் லட்சக் கணக்கானோருக்கு கண்டவுடன் உற்சாகம் தருவது இந்த AVM உலக உருண்டை என்பது உண்மை. "சினிமா உலகமே இந்த உலக உருண்டை மாதிரி தான் நிற்காம சுத்திக்கிட்டிருக்கும். அதுவே ஒரு அடையாளம்" அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு சினிமா என்றாலே ஏவி.எம் தான், ஏவி.எம் என்றாலே இந்த உலக உருண்டைதான். ’நீங்கள் எத்தன வருஷமா இங்கே தங்கியிருக்கீங்க, எத்தன வருஷமா இந்த உலக உருண்டையப் பார்க்குறீங்க’ என வடபழனி பகுதிவாசி ஒருவரிடம் கேட்டபோது, "நாங்க மூணு தலைமுறையா இங்கே தான் இருக்கோம். எனக்கு 40 வயசாகுது. நான் பொறந்ததுல இருந்தே இதைப் பார்த்துட்டுதான் இருக்கேன்.அப்போதெல்லாம் இந்த உலக உருண்டை ஸ்டூடியோவுக்கு உள்ளே இருந்த வாசல் கிட்ட இருக்கும். அதுக்குப் பிறகு ரெண்டு தடவ இடம் மாத்திட்டாங்க. ஸ்கூல் விட்டு வரும்போது நாங்க அங்கே தான் விளையாடுவோம். அது நிக்காம எப்படி சுத்திக்கிட்டே இருக்குன்னு யோசிச்சு அந்தத் தூணைச் சுற்றி வந்திருக்கோம். நாங்க நிறைய தேடித் தேடிப்பார்த்தும் அது எப்படி சுத்துதுன்னே கடைசி வரக் கண்டுபுடிக்க முடியல" என்கிறார். நாமும் பலமுறை அங்கு பலரைச் சந்திக்கச் செனற நாட்கள் உண்டுஅவரது உடல், அஞ்சலிக்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு தமிழ் திரையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.






கருத்துகள்