மலையாளத் திரைப்படத்தின் போக்கை மாற்றியவர்களில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என காலஞ்சென்ற ஸ்ரீனிவாசனும் ஒருவர்
நடிகராகவும், திரைப்பட எழுத்தாளராகவும் மலையாள மக்களின் அன்புக்குரியவராக நீண்ட காலமாகவே இருந்தவர். நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றாலே அந்தப்படத்திற்கு தனி எதிர்பார்ப்புகள் கூடிய காலங்களுமிருந்தன.
பன்முகத்திறமையாளராக அறியப்பட்ட ஸ்ரீனிவாசன் நடிகர் மோகன்லாலுடன் அதிகத் திரைப்படங்களில் இணைந்து நடித்தவர். ஸ்ரீனிவாசனின் நெருங்கிய நண்பரும் நடிகர் மோகன்லால் பதிவொன்றை வெளியிட்டதில், “பிரியாவிடை சொல்லாமலே ஸ்ரீனி கிளம்பிவிட்டார். அவருடனான பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்கத் தெரியவில்லை. திரைப்படங்களில் ஒன்றாகப் பணிபுரிந்தோம் என்பதைத் தாண்டி எங்களுக்குள் மிக அதிகமாக நேசமிருந்தது. அவர் உருவாக்கிய ஒவ்வொரு கதாபாத்திரங்களில் தன் முகம் பார்த்த மலையாளியாக இருந்தார். என்னுடைய வலிகளையும் மகிழ்ச்சியையும் குறைகளையும் அவர் மூலம் திரையில் கண்டேன். நடுத்தர வர்கத்தின் நல்ல, கெட்ட கனவுகளை ஸ்ரீனியைப் போல் வேறு யாரால் சொல்ல முடியும்? ஸ்ரீனியின் மந்திர எழுத்தால் நாங்கள் இணைந்து நடித்த கதாபாத்திரங்கள் காலமின்றி நிற்கின்றன அவரது ஆசிர்வதிக்கப்பட்ட எழுத்துத் திறமையால் தான் தாசனும் விஜயனும் (நாடோடிக்காட்டு கதாபாத்திரங்கள்) மலையாளிகளின் மனதில் அவர்களுக்கான மனிதர்களாக மாறினார்கள். திரையிலும் வாழ்க்கையிலும் தாசனும் விஜயனும் போல சிரித்து, குதூகலித்து, சண்டையிட்டுப் பழகி பயணித்தோம். ஸ்ரீனி, வலிகளைச் சிரிப்பில் ஆட்கொண்ட அன்புள்ளம். அன்பு ஸ்ரீனியின் ஆத்மா சாந்தியடையட்டும்.” என உருக்கமாகப் பதிவிட்டார்.
காலஞ்சென்ற ஸ்ரீனிவாசனின் மகன் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடித்த ஹிருதயம் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாகும்.சீனிவாசன் எனும் திரை எழுத்துகாரன்..
மலையாள மக்கள் உணர்வுகளை அம்பலபடுத்தியதில் நடிகர் திலகனுக்கு மூத்தவன்.
சமூகப் பிரச்சனைகளை காமெடியாக மக்களிடம் கடத்திய மாபெரும் கலைஞன்.
மலையாள சினிமாவில் இளம் ரத்தம் பாய்ச்சி சினிமா போக்கை மாத்திய வினீத்தின் தந்தை.


கருத்துகள்