பிரம்மரிஷியான விஸ்வாமித்திர மகரிஷி, தனது உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபமேற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை கொடுத்தவர்
அதேபோல பூர்ணசந்திரன் மதுரை திருப்பரங்குன்ற தீபம் ஏறறும் விவகாரத்தில் தன் உயிருடலை திரியாக மாற்றி தீப்பற்றவைத்து திரியாக ஒளிர்நது மறைந்தார் ஆளும் திமுக அரசைக் கண்டித்து, ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் துரதிஷ்ட வசமானது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபமேற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், திமுக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, மதுரை நரிமேட்டைச் சேர்ந்த சாமானிய முருக பக்தர் பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிராயுதம் பூண்டார்
சூரபத்மனை வதம் செய்த கார்த்திகேயன் தீபத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்.பூர்ணசந்திரனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஹிந்து அமைப்புகள் மற்றும் முருக பக்தர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை கூறுகையில் "சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபமேற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, முருக பக்தர் பூர்ணசந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, பூர்ணசந்திரன் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.
ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இதுபோன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாரதிய ஜனதா கடசித் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
உயிரிழந்த பூர்ணசந்திரனுக்கு மகன், மகள், மனைவி என உள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் மனம் உடைந்த மதுரையை சேர்ந்த பூரணச்சந்திரன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்ததைச் சுட்டிக்காட்டி, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:-.
"திருப்பரங்குன்றம் தீப உரிமைக்காக திரு பூர்ணசந்திரன் தனது உயிரை இழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அதே சமயம் உயிரை மாய்த்துக் கொள்வது பிரச்னைக்குத் தீர்வாகாது.கோவில் சம்பிரதாயங்களைக் காக்க அரசு இனியாவது செவிசாய்க்க வேண்டும். அதேசமயம், தயவுசெய்து யாரும் இனி இதுபோன்று விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் எனக் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் உயிர் விலைமதிப்பற்றது.இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை என்ற விரக்தியில், தன்னைத் தானே தீ வைத்து அழித்துக் கொள்ளும் நிலை தமிழகத்தில் இருப்பதாக"வும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பூர்ணச் சந்திரனின் உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் பூர்ணச் சந்திரன் குடும்பத்துக்கு பாரதய ஜனதா கடசி மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் ரூபாய்.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ரூபாய்.1 கோடி இழப்பீடும், உயிரிழந்தவர் மனைவிக்கு அரசு பணியும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பூர்ணச் சந்திரன். எம்.பிஏ, பட்டதாரி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என வாட்ஸ்-அப்பில் குரல் பதிவு அனுப்பி விட்டு தல்லாகுளம் பகுதி பெரியார் சிலை அருகில் உடல் முழுவதும் டீசலை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலை உடற்கூராய்வு செய்யப்பட்டது.
கயத்திரியாக்கி தீபம் ஏற்றிய பூர்ண சந்திரன் உடலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலச் செயலாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மதுரை மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் : "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாமல் அவமதிப்பு செய்தது. இதனால் மன உளைச்சல், வேதனை அடைந்து என் மறைவுக்கு பிறகாவது திருப்பரங்குன்றத்தில் திமுக அரசு தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன் உடலை தீபமாக, தீப்பந்தமாக எரித்து உயிரிழந்துள்ளார் பூர்ணசந்திரன்.
-விளம்பரம்-
-விளம்பரம்-
அவரது இறப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இனிமேலாவது திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பூர்ணசந்திரன் மனைவிக்கு அரசு வேலையும், குடும்பத்துக்கு ரூபாய்.1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும். இதில் அரசியல் பாகுபாடு பார்க்கக்கூடாது என தமிழ்நாடு முதல்வரை அனைத்து மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பூர்ணசந்திரன் குடும்பத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ரூபாய்.10 லட்சம் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. தொடர்ந்து அவர் குடும்பத்துக்கு பல்வேறு அமைப்புகள் உதவி செய்யவுள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை மாலை பூர்ணசந்திரன் படத்துக்கு மரியாதை செலுத்தி கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. "ஓம் விஸ்வாமித்ராய வித்மஹே பிரம்ம ரிஷியாய தீமஹி தன்னோ சத்திய மித்திர ப்ரசோதயாத்"
- உயிராயுதமாக முதலில் பூர்ணசந்திரன் பற்றவைத்த தீபம் சுடர் இந்தியா முழுவதும் முருக பக்தர்கள் உறுவாக வழிவகுக்கும் ராமனும், முருகனும், இல்லாத கிராமம் ஏது, பக்தி இல்லாத இலக்கியங்கள் ஏது பாமரனை கடவுள் மறுப்பாளர்கள் குழப்பமடைய வைப்பது வாக்கு வங்கி அரசியல் தான், மதம் சாராத
மனிதன் இந்தியாவில் இல்லை. பூரணசந்திரன் ஆத்மா ஈசன் நிழலில் இளைபாறட்டும் ஓம் சாந்தி. "ஓம் பூர்புவ: ஸ்வ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் !!"












































கருத்துகள்