முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயர் நீதிமன்றத் தீர்ப்பு அவமதிப்பு வழக்கில் சிக்கிய மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள்

 உச்ச நீதிமன்றம் மறுப்பு:   திருப்பரங்குன்றம் மலை பாரம்பரிய பழமையான இடத்தில் தீபம் ஏற்றுவது குறித்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது

ஆவணங்கள் சரியாகக் கொடுத்திருந்தால் வரிசை அடிப்படையில் வழக்கு பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த் விளக்கம்.  உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் இராம.ரவிக்குமார் சார்பில் கேவியட் மனுவும் தாக்கல்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது!











நீதிமன்றத் தீர்ப்பு அவமதிப்பு  வழக்கு காரணமாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் 144 தடை உத்தரவை ரத்து செய்தார்






, தீபத்தூணில் மனுதாரர் தீபம் ஏற்ற உத்தரவு.மாநகர காவல் ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு. மனுதாரர் இராம.ரவிக்குமார் உடன் 10 பேர் சேர்ந்து சென்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று மாலை விளக்கேற்ற அனுமதித்த உத்தரவை பின்பற்றாவிட்டால் விளைவுகள் ஏற்படும் விசாரணையை காலை 10.30-க்கு ஒத்திவைக்கிறேன் என :நீதிபதி G.R.சுவாமிநாதன்



நீதிமன்றத்தைவிட தன்னை பெரிய ஆள் என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் நினைத்துக் கொண்டுள்ளார்.காவல் ஆணையர் தகுந்த பாதுகாப்பு கொடுத்திருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது என நீதிபதி கருத்து.






ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்ட நிலையில்,நீதிமன்ற அவதூறு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் உத்தரவு. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி அமர்வு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குறிப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்து, அரசு நாடகம் ஆடுகிறது என்றார். சி.ஜே.ஐ., குறிப்பிட வேண்டாம் என்கிறார்.




நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் வழக்கின் அவமதிப்பு வழக்கை 9.12.2025 ஆம் தேதிக்கு தளளி வைத்தார். ஏனெனில், தமிழ்நாடு அரசு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு எதிராக, 3.12.2025 தேதியிட்ட சிஐஎஸ்எப் உத்தரவின் பேரில், சிஐஎஸ்எஃப்-வசம் இணக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லைக்கல், சர்வே கல் என புதிதாக கதை சொல்பவர்களுக்கு, இந்த  வேலைப்பாடுகளோடு மலை உச்சியில் எந்த எல்லைக்கல் இருக்கும் ? நாயக்கர் ஆட்சிக் காலத் தூணின் வேலைப்பாடுகளோடு இருப்பது இந்தத் தீபத்தூண் அது தீபக்கல் 






திருப்பரங்குன்றம் மலையே சிவனுடைய சொரூபமாகக் கருதப்படுவதால், அதன் உச்சியில் இந்தத் தீபத்தூண்கல் இருக்கிறது என்ற சாசனம் கூட உண்டு.




தூணின் கீழே இரண்டு அடுக்குப் பீடமும் உண்டு. இது போன்று குன்று தோறும் விளக்குத்தூண்கள் வைப்பதும். நல்ல நாட்களில் அங்கே விளக்கேற்றுவதும் தமிழர்கள் வழக்கம். அதைப் பற்றியெல்லாம் தெரியாதவர்களுக்கு இது வெறும் கல்லாகத்தான் தெரியும். கார்த்திகை தீபம் இல்லாத நாளில் தீபம் ஏற்ற எதிர்ப்புத் தெரிவித்த அரசியல் பலனடைந்த கோவில் குருக்கள்கள் இருவர் 







கார்த்திகை தீபம் அல்லாத நாளில் தீபம் ஏற்றக் கூடாது என இந்த அர்ச்சர்கள் எதிர்ப்புக் கடிதம் தரக் காரணம் அவர்கள் செய்த ஊழலாகக் கூட இருக்கலாம்.அது குறித்து இனி வரும் காலங்களில் உண்மை அறியலாம்.

இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு எதிரானது; சிவாகமங்களில் கூறியபடி திருக்கார்த்திகை நாளில் தான் கோவில்களில் தீபமேற்ற வேண்டும் - பிள்ளையார்பட்டி கோவில் தலைமைக் அர்ச்சகர் பிச்சை குருக்கள்; கார்த்திகை தீப நாள், பவுர்ணமியில்தான் தீபம் ஏற்ற வேண்டும்  என ஹிந்து வேத பாடசாலையைச் சேர்ந்த மற்றொரு செல்வம் பட்டர் கடிதம் மூலம் கருத்து. 3,டிசம்பர்,2025 இராம.ரவிக்குமார்  உயர்நீதிமன்ற தீர்ப்புடன் தீபதூணில் ஏற்ற வந்து போது இந்த செல்வம் பட்டர் ஏங்கே இருந்தார்? எனக் கேட்கும் மனுதாரர்கள் தரப்புக்கு அவர் பதில் தரவில்லை திருப்பரங்குன்றத்தில் முதல்வர் செய்தது சட்டத்திற்கு உடடப்டதா என்பது எழுவினா?

உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை தமிழ்நாடு அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது. இந்த ஆணையை பிறப்பித்த தமிழ்நாடு அரசின் தலைவர் முதலமைச்சர் 






 முதல்வர். இப்போது நினைத்தால் கூட நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் நோட்டீஸ் அனுப்பி  அவரை அவதூறு வழக்கில் ஆஜராக உத்தரவிடலாம். 100 சதவீதம் அதற்கு அதிகாரம் இருக்கிறது" என எச்சரித்த வழக்கறிஞர் நளினி ஸ்ரீ "கார்த்திகை தீப  மக்களுடைய வழிபாட்டு உரிமை முக்கியம் என்பதை புரிந்து கொள்ளாத ஒரு அரசு எப்படி இருக்க முடியும்? இதில் ஜனாதன தர்மத்தின் எதிர்ப்பை மட்டுமே வைத்துக் கொண்டு நீதிமன்றத்தின் உத்தரவையே அவமதித்து இருக்கிறார்கள். இராம ரவிக்குமார் என்பவர் திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சி மலையில் பழங்காலம் தொட்டு கார்த்திகைத் தீபம் ஏற்றி வருகிறோம்.









திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எங்களுக்கு அனுமதி வேண்டும்.

பாதுகாப்பு வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையை அனுகினார். மதுரை நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விசாரித்து அதையும் தாண்டி, அவர்கள் கொடுத்த பதில்களையும் விசாரித்து ஆராய்ந்து நீதிபதியே ஸ்பாட் ரிப்போர்ட் வாங்காமல் அவரே நேரில் போய் பார்த்து தொல்பொருள் ஆராய்ச்சி, வரலாறுகளை யெல்லாம் படித்துத் தெரிந்து கொண்டு அதன்பிறகு ஒரு ஆணையைபா பிறப்பித்தார்.அது காலம் தொட்டு நடப்பதனால்  திருப்பரங்குன்றம் மலைதான். அந்த இடத்தில் தீபம் ஏற்றியதற்கான அடிப்படை சுவடுகள் எல்லாம் இருக்கிறது. மக்களுக்கு தீபம் ஏற்றுவதற்கான எல்லா முகாந்திரம் இருக்கிறது. அந்த இடதில் தீபம் ஏற்றலாம் என ஆணையை பிறப்பித்தார். இந்த ஆணை பிறப்பித்தது நீதிமன்றம். நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ஆளும் நபர்கள் இவர்கள் நிறைவேற்றுவது தான் ஒரு அரசினுடைய கடமை. ஏனென்றால் அவர்களும் அதில் ஒரு மனுதாரராக வந்திருக்கிறார்கள். அவர்களது பதிலுரையை நிராகரித்தது உயர்நீதிமன்றம். எனவே அந்த ஆணையை நிறைவேற்றவேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.இந்தத் தீர்ப்பால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே அவர்கள் இருவர் பெஞ்சில்










உடனே ஒரு மேல்முறையீடு செய்து தடையாணை வாங்கி இருக்க வேண்டும். அதை செய்யாமல் இந்த ஆணையை பெற்றுக் கொண்ட அந்த அமைப்புகள் அந்த மலையில் வந்து தீபம் ஏற்றப்படும் போது அதை காவல்துறை தடுத்து நிறுத்துகிறார்கள். அப்போது அங்கே ஒரு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. காவல்துறை செய்தது அவதூறு. அதற்கு தலைமை தாங்கி இருக்கிறார் தமிழக காவல்துறை டிஜிபி. எல்லாருமே நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும். அந்தத்துறைக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சரும் பதில் சொல்லியாக வேண்டும்.உடனே மாவட்ட ஆட்சியர் மூலம் 144 தடை போட்டு இருக்கிறோம். அதனால் மேலே போகக்கூடாது என்கிறார்கள். நான் இதில் சொல்ல விரும்புவது சட்ட ரீதியாக அரசியல் அமைப்பினால் உருவாக்கப்பட்டது நீதிமன்றங்கள். அரசியல் அமைப்பினால் உருவாக்கப்பட்டது சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள். அரசியல் அமைப்பால் ஆக்குபடுவது மேதகு ஆளுநர், மேதகு குடியரசுத் தலைவர். அப்படி இருக்க ஒரு உயர் நீதிமன்றத்தின் ஆணையை சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நிர்வாகம் தடை செய்ய முடியாது. அது உயர்நீதிமன்ற ஆணையை ரத்து செய்ய முடியாது. இதுதான் முக்கியமான இறையாண்மையாக இருக்கிறது.இது பாமர மக்களுக்குத் தெரியாது. அதனால் 144 தடையானை எந்த காலத்திலும் இந்த நீதி அரசருடைய ஆணையைக் கட்டுப்படுத்தாது. அதுவே சட்ட விரோதமானது. அந்த ஆணை கட்டுப்படுத்தாது, அது இல்லீகல் ஆகவே அது உடன் வாபஸானது அந்த ஆணையை பிறப்பித்தது நீதிமன்ற அவமதிப்பு.








இதற்கு உதாரணமாக சில காலங்களுக்கு முன்பு மறைந்த கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பிறகும் அவர்கள் திறக்கவில்லை. திறக்காததற்கு காரணம் கேட்டு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதற்கு விளக்கம் சொன்னவர், "நாங்கள் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்து விட்டால் எங்களது மாநில விவசாயிகள் கிருஷ்ணராஜ சாகர் அணையில் குதிக்கிறேன் எனக் காத்திருக்கிறார்கள். நான் எப்படித் திறப்பது?" எனக் கேட்டார். அதைக்கேட்ட நீதிமன்றம், அப்படியா? அவர்களையும் சேர்த்து கைது செய்கிறோம். ஏனென்றால் நீதிமன்றத்தின் ஆணை. உங்கள் அரசாங்க ஆணையை விடப் பெரியது. உங்களுக்கு அது தெரியுமா? எனக் கேள்வி கேட்டார்கள். நாங்கள் உங்களை இப்போது கைது செய்யப் போகிறோம். கைது செய்தால் உங்கள் அரசு கவிழ்ந்து விடும். நீங்கள் குற்றவாளிகள். இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்.





உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளீர்கள்" என கேட்டார்கள். உடனே அவர் போன் செய்து உடனே தண்ணீர் திறக்க வைத்தார். உடனே அவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார்கள். இதே நிலைமை தான் இன்றைக்கு தமிழ்நாடு அரசுக்கும் ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணை தமிழ்நாடு அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது. இந்த ஆணையை பிறப்பித்த தமிழ்நாடு அரசின் மாவட்ட ஆட்சியர் பதில் தரும் நிலையில் உள்ளார்.திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதிக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘நீதித் துறைக்கு எதிரான எந்தவொரு கருத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது. நீதிபதிகள் வெளிப்படையாக எதிர்வினையாற்ற முடியாது என்பதற்காக, நீதிமன்றத்தைத் தூண்டிவிடக் கூடாது. வரம்புகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஓரளவுக்கு தான் பொறுத்துக்கொள்ள முடியும். அது மீறினால் உரிய நடவடிக்கை எடுப்போம். நீதிமன்றங்களும் நீதிபதிகளும் எதிர்வினையாற்றக் கூடாது என்பதைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்கக் கூடாது. நீதித் துறையை இழிவுபடுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சட்டத்தை மீறும் நபர்கள் எந்த எதிர்வினையும் இருக்காது என்று நினைக்கிறார்கள். நீதிமன்றம் தான் அனைவருக்கும் கடைசி புகலிடம், யாராக இருந்தாலும், நீதித் துறையின் மன உறுதியைக் குலைக்கும் வேலைகளை தொடர்ந்து செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது எதுவாக இருந்தாலும் நீதித் துறையை சீர்குலைக்க முயன்றால் அரசியலமைப்பு காகிதத்தில் மட்டுமே இருக்கும்” என கருத்து தெரிவித்தனர். முன்னதாக, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி இராம.ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி, மலை உச்சியிலூள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர், திருப்பரங்குன்றம் கோவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஆகியோர் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ததில், ‘தீபத்தூணில்ஃதான் தீபம் ஏற்ற வேண்டுமென உரிமை கோர தனி நபருக்கு சட்ட உரிமை இல்லை. தீபத்தை எங்கு ஏற்றுவது என்பது குறித்து தேவஸ்தானம் மட்டுமே முடிவெடுக்க இயலும். இதை 1994-ஆம் ஆண்டில்  பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உறுதி செய்கிறது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆவணங்களோ, பதிவேடுகளோ, கல்வெட்டுகளோ, ஆகமத் தரவுகளோ இல்லை.

கோவிலின் பழக்க வழக்கங்களை மாற்ற தனிநபருக்கு உரிமை கிடையாது. மலையில் உள்ள தீபத்தூண் இதற்கு முன்பாக மதப் பிரச்சினை உருவான, பிரச்சினைக்குரிய எல்லைக்குள் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, ‘இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பலர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விருப்பம் உள்ளவர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம். அனைத்து மனுக்களும் டிசம்பர் மாதம்.12-ஆம் தேதியில் விசாரிக்கப்படும். அதன் பிறகு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படாது’ என்றனர்.

அப்போது, தொடர்ந்து அரசு வழக்கறிஞர்கள், ‘திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவையற்ற விவரங்கள் பகிரப்படுவதைத் தடுக்க நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்’ என்று கோரினர்.

அதற்கு நீதிபதிகள், “நீதிமன்றமும், நீதிபதிகளும் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என நினைக்க வேண்டாம். இந்த நீதிமன்றம் தான் அனைத்துக்கும் கடைசி நிவாரணம். தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பொதுவெளியில், சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் விமர்சனங்கள் செய்வதை ஏற்க முடியாது” என்றனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திமுகவின் சார்பில் முன்னால் அமைச்சர் டி. ஆர் பாலுவும் பொது வெளியில் "திருப்பரங்குன்றம் மக்கள் பல நூற்றாண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அதைச் சீர்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.

 டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, "கார்த்திகை தீபம் என்பது திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து ஏற்றபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. கோவில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் அதை முறையாகச் செய்கிறார்கள்."

"அப்படியிருக்க, ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட, எந்த மதத்திற்கும் சம்மந்தம் இல்லாத ஒரு நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை பிரச்னைகளை உருவாக்குவதற்காகவே எழுப்பப்பட்டது" என்று கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தேவையில்லாமல் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, அரசை மீறி ஒரு கட்டளையைப் பிறப்பித்துள்ளார் என்றும் கனிமொழி கூறினார்.

"இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக, திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆதரவாளர்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மற்றொரு அயோத்தி என சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள்" என்றார்.

மேலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் தொடர்பாக பொய் பிரச்சாரத்தை முன்வைத்துள்ளதாகக் கூறிய கனிமொழி, "திமுக ஆளும் தமிழ்நாட்டில் பொது அமைதியும், சமூக நல்லிணக்கமும் நிலவுகிறது. பாஜக ஆளும் ஏதேனும் மாநிலத்தில் அத்தகைய நிலை உள்ளதா? தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கி, திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்" என்று கூறினார் கனிமொழி. ஆனால் உண்மை வரலாறு இது 1858-ஆம் ஆண்டில் நாயக்க மன்னர் ஆட்சி மதுரையில் இல்லை. நாயக்கர் ஆட்சிக் காலம் கி.பி. 1736-ல் ராணி மீனாட்சி அரசி தற்கொலையுடன் முடிவடைந்தது. அதன் பிறகு, கர்நாடக மைசூர் ஆற்காடு நவாப் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1801-ல் மதுரை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. எனவே, 1858- ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியே மதுரையில் இருந்தது. 

 மதுரை நாயக்கர்களின் கடைசி ஆட்சியாளர் ராணி மீனாட்சி அரசி ஆவார். அவரது ஆட்சி கி.பி. 1736-ல் முடிவுக்கு வந்தது.

 நாயக்கர் ஆட்சிக்குப் பிறகு, சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மைசூர் நவாப்களின் ஆட்சியின் கீழ் மதுரை இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சி: கி.பி. 1801-ல் மதுரை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. எனவே, 1858-ல் மதுரை ஆங்கிலேயர் ஆட்சி  அதில் தான் இந்த தர்ஹா ஏற்பட்டது அதில் அடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமிய நபர் மைசூர் ஹைதரலி தளபதி திப்பு சுல்தான் காலத்திற்கு பின்வந்த காலமாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...