தமிழ்நாட்டில் தவெக தலைமையில் அமமுக, பாமக, தேமுதிக, மக்கள் பாதை, என் ஆர் காங்கிரஸ் இணையும் வாய்ப்புக் கூடியது
தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 'பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும்
மற்றும் பாஜகவின் தலைமையில் ஆன தே ஜ கூட்டணியை அமைக்க வேண்டும்' என்பதை எடப்பாடி கே பழனிசாமியிடம் வலியுறுத்தியிருந்தார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. அதை எடப்பாடி பழனிச்சாமி செய்ய மறுத்ததால், அவர் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார் தங்கமணி. பதிலுக்கு எடப்பாடி பழனிசாமியும் தங்கமணியை ஓரம்கட்டத் தொடங்கினார். பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றபோதிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்தபோதும் கூட அந்த நிகழ்வுகளுக்கு தங்கமணியை அழைக்க வில்லை.
இந்த நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி -தங்கமணி இடையே சமரசம் வருகிறது. அதன் எதிரொலியாக, பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதலாக சென்னை வந்தபோது, அவரை வரவேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியுடன் கலந்துகொண்டார் தங்கமணி !பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தலைமையிலான முதல் மாநில மையக்குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் வரவில்லை. 'அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு விழா, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆந்திராவில் அவருடைய சிலையைத் திறந்துவைத்துப் பேச ஏற்கெனவே நேரம் கொடுத்துவிட்டார் அண்ணாமலை. அதனால்தான் அவர் மையக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை'
என அண்ணாமலை தரப்பு விளக்கமளித்தது. அதேசமயம், 'ஆந்திராவில் சிலையைத் திறந்தது டிசம்பர் மாதம். 22-ஆம் தேதி. பியூஷ் கோயல் சென்னைக்கு வந்ததோ டிசம்பர் மாதம்.23-ஆம் தேதி அண்ணாமலை நினைத்திருந்தால் ஆந்திராவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்திருக்க முடியும். தனக்குப் பதவி வழங்கப்படாத நிலையில் தான், அவர் மையக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அ.தி.மு.க-வுடனான கூட்டணிக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்துகொள்கிறார் என கமலாலய தலைகள் பேசும் நிலையில் இனி மேல் தான் கூட்டணி குறித்து தகவல் வரும் நிலை. அதேபோல் பா.ம.க-வில், தந்தை மருத்துவர் அணியில் இருந்த ஜி. கே. மணி நீக்கத்திற்கு பின்னர் மகன் மருத்துவருக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் மோசமாகி, 'இனி இணைப்பு சாத்தியமே இல்லை' என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. அதைப் பயன்படுத்தி, மருத்துவர் ராமதாஸுடன் மிக நெருக்கமாகிவிட்ட தி.மு.க தரப்பு.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு, தி.மு.க கூட்டணிக்குள் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க அணியைக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடக்கிறதாம். முதற்கட்டமாக, மருத்துவர் ராம தாஸின் அதிதீவிர ஆதரவாளர்களான நீக்கப்பட்ட ஜி. கே. மணி. மற்றும் சேலம் இரா. அருள் உள்ளிட்ட ஐந்து நபருக்கு தொகுநி வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.அதேபோல, மருத்துவர் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக, மருத்துவர் ராமதாஸை நேரடியாகத் தேர்தல் பிரசாரம் செய்யவைக்கவும் ஆயத்தமாகி வருகிறதாம் தி.மு.க தரப்பு. இந்தத் தகவலறிந்து, மருத்துவ ர் அன்புமணி கடுமையாக கோபமாகியிருப்பதாகவே தகவல் வருகிறது. எடப்பாடி பழனிசாமியால் புறக்கணிக்கப்பட்டவர்களும், எதிர்ப்பாளர்களும் விஜய்யோடு கைகோர்க்கிற பொழுது ஒரு புதிய அதிமுகவாக தவெக உருவெடுக்கும்,
எடப்பாடி தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெ. ஜெயலலிதா வின் அதிமுக என்பதில் இருந்து மாறி (எதிமுக) எடப்பாடி திமுகவாக பரிணமித்து திமுகவின் "B Team" ஆக மாறும். எனபது பலரும் பேசும் நிலை,
எப்படி 1989இல் புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பிறகு "ஜா & ஜெ" என்று அணிகள் பிளவு பட்டு அன்றைய "ஜா" அணி எப்படி திமுகவுக்கு B Team ஆக செயல்பட்டதோ அதுபோல எடப்பாடி அணியும், அன்றைய "ஜெ" அணியை போல புதிய அதிமுகவாக தவெகவும் உருவெடுக்கும்.திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக. எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் அருள் ஜோதி , மாவட்ட அம்மா பேரவை தலைவர் எனர்ஜி அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்..
அதிமுகவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்த இருவர் அக்கட்சியிலிருந்து விலகி த.வெ.க இணைந்ததால் அதிமுக வில் உள்ள மற்ற நிர்வாகிகள் அதிர்ச்சி....! அமமுக பாமக மற்றும் தேமுதிக ஆகிய 3 கட்சிகளை தங்களுடன் இணைத்து கூட்டணியை பலப்படுத்தப் போவது தவெக என பலரும் கூறும் நிலையில் அதை உறுதிப்படுத்தம் நிலை தான் தொடர்கிறது,தேமுதிக-விற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற வதந்தியை பரப்பியது அதிமுக அல்லது பாஜக யாராக இருந்தாலும், அழிவுப் பாதைக்கு செல்வது உறுதி என பிரேமலதா ஆவேசமாக தெரிவித்த நிலையில்அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அமமுகவின் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரிடம் பாஜகவே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தலாம் ஆனால் மீண்டும் அவர்களை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும்
இந்த நிலையில் ஒ.பன்னீர்செல்வம் தனது நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைப் படு பாதாளத்திலே தள்ளி வைத்து இன்றைக்கு அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் வெம்பி வதங்கி என்ன செய்வது என்றே தெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையை உருவாக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு வருகின்ற காலங்களில் நாம் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும் என்பது தான் இன்றைய வரலாறு.
பல கூட்டங்களில் நாம் பல்வேறு பிரச்சனைகளைப் பேசி முடித்துவிட்டோம்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இணைந்து விடலாம் என்ற ஓபன்னீர் செல்வத்தின் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ஒரு படிவம் கொடுக்கப்பட்டதில், அடுத்தகட்டமாக திமுக கூட்டணியை நாடுவது அல்லது தவெக கூட்டணியை நாடுவது குறித்து கருத்துத் தெரிவிக்கும் வகையில் அந்த படிவம் இருந்துள்ளது. மொத்தமாக கலந்துகொண்ட 80 மாவட்டச் செயலாளர்களில் 72 பேர் தவெக கூட்டணிக்குச் செல்லலாம் என தகவல்.
கலந்துகொண்ட மாநில நிர்வாகிகள் 60 பேரில் 55 பேர் தவெக கூட்டணிக்குச் செல்லலாம் எனும் நிலைப்பாட்டை எடுத்தனர். சிலர் அதிமுக அடையாளத்தை இழக்காமல் தவெக கூட்டணிக்கு செல்லலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர். சில நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் வந்திருந்த நிர்வாகிகளில் 90 சதவிகிதம் பேர் தவெக கூட்டணியை தேர்வு செய்துள்ளனர். இதனால் 38 வருவாய் மாவட்டங்களை கணக்கில் கொண்டு 38 சீட்டுகளை தவெக கூட்டணியில் பெறலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் எப்படியும் பத்து சீட் உறுதி எனவும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தவெக உடன் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




















கருத்துகள்