விமானங்களின் பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை
இண்டிகோ நிறுவன நெருக்கடியால் தற்போது விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின்போது சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக விமானக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பவாத கட்டண நிர்ணயத்திலிருந்தும் பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்புகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கட்டண நிர்ணய ஒழுக்கத்தைப் கடைப்பிடித்தல், நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்தல், மூத்த குடிமக்கள், மாணவர்கள், நோயாளிகள் உட்பட அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்கள் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த உத்தரவின் நோக்கமாகும்.
கட்டண நிலைகளை அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படாவிட்டால், பொது நலனைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்
_departs_London_Heathrow_11Apr2015_arp.jpg)





கருத்துகள்