சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 12 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது,
தமிழ்நாட்டின் ஜனநாயக அமைப்பில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. சங்கர், அரசியல் ஊழல்களை வெளிப்படுத்தும் தனது விமர்சனங்களுக்காக புகழ்பெற்றவர், ஆனால் அவர் தொடர்ந்து காவல் துறையின் இலக்காக மாறியுள்ளார். நீதிமன்றம், சங்கரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த ஜாமீனை வழங்கியது, ஆனால் அதோடு நிற்காமல், காவல் துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தது. "விமர்சனம் என்பது ஜனநாயக உரிமை" என்று கூறிய நீதிமன்றம், சங்கரை தொடர்ச்சியாக கைது செய்வது அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கண்டித்தது. இது, தமிழ்நாட்டு அரசின் DMK ஆட்சியின் கீழ், விமர்சகர்களை அடக்கும் போக்கை வெளிப்படுத்துகிறது.
சவுக்கு சங்கரின் பின்னணியைப் பார்க்கும்போது, அவர் ஒரு பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர், பின்னர் ஊடகவியலாளராக மாறியவர். அவரது யூடியூப் சேனல் மூலம், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளார். உதாரணமாக, போக்குவரத்து துறை ஊழல்கள், அரசு ஒப்பந்தங்களில் முறைகேடுகள் போன்றவற்றை அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் இதற்காக, அவர் பல வழக்குகளில் சிக்கியுள்ளார். 2024 இல் தொடங்கி, அவர் பலமுறை கைது செய்யப்பட்டார் – முதலில் பெண் போலீஸ் அதிகாரியை இழிவுபடுத்தியதாக, பின்னர் போதைப்பொருள் வழக்கு, மற்றும் சமீபத்தில் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையுடன் தொடர்புடைய வழக்குகள். இவை அனைத்தும், அவரது விமர்சனங்களுக்கு பழிவாங்கும் நோக்கத்துடன் தொடுக்கப்பட்டதாகக் கருத்துகள் நிலவின.. உயர் நீதிமன்றம், இந்த தொடர் கைதுகளை "தனிப்பட்ட சுதந்திரத்தை குறைக்கும் செயல்" என்று விமர்சித்தது, காவல் துறையின் அவசரத்தை கேள்விக்குள்ளாக்கியது.
காவல் துறையின் செயல்பாடகள் குறித்து நீதிமன்றத்தின் க..ருத்துக்கள் மிகவும் கடுமையானவை. நீதிபதிகள், சங்கரை "தொடர்ந்து இலக்கு வைத்து" கைது செய்வது, அரசியல் சாசனத்தின் கீழ் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறினர். "அரசை விமர்சிப்பது குற்றமல்ல" என்று அழுத்தமாக தெரிவித்தனர். மேலும், சங்கரின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்கப்பட்டது – அவர் சிறையில் இருந்தபோது உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டன, ஆயினும் மருத்துவ உதவி மறுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது, காவல் துறையின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில், விமர்சகர்களை அடக்கும் இத்தகைய போக்கு புதிதல்ல. முன்னதாக, பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலரும் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பு, ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களான பேச்சு சுதந்திரம் மற்றும் விமர்சன உரிமையை உறுதிப்படுத்துகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் 19(1)(a) பிரிவு, கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டு அரசு, இதை மீறி, விமர்சகர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறது. DMK ஆட்சியின் கீழ், காவல் துறை அரசியல் கருவியாக மாறியுள்ளதாக விமர்சனங்கள் உள்ளன. சங்கரின் .வழக்கு, இதற்கு சாட்சியம். அவர் வெளியிட்ட வீடியோக்களில், அமைச்சர்களின் ஊழல்கள், போலீஸ் அத்துமீறல்கள் பற்றிய ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை விசாரிப்பதற்கு பதிலாக, அவரை சிறையில் அடைப்பது, அரசின் பயத்தை காட்டுகிறது.
இந்த வழக்கில் காவல் துறையின் அவசர கைது நடவடிக்கைகள் கேள்விக்குறியாகின்றன. சங்கர் கைது செய்யப்பட்டபோது, அவர் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன, ஆனால் அவை போதிய ஆதாரமின்றி இருந்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. நீதிமன்றம், "அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது?.." என்று கேட்டது, இது காவல் துறையின் தன்னிச்சையான பொறுப்பற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில், போலீஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதாகப் பொதுவான குற்றச்சாட்டு உண்டு. இது, சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்குகிறது.
இந்த தீர்ப்பு, பிற விமர்சகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும். சங்கர் வெளியே வந்தபின் தனது விமர்சனங்களை தொடர்வார் என எதிர்பார்க்கலாம். அரசு, இந்நிகழ்விலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை அடக்குவது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும். மாறாக, அவற்றை விசாரித்து, ஊழல்களை தடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள், வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கின்றனர். காவல் துறை, அரசியல் கருவியாக இல்லாமல், மக்கள் பாதுகாப்பிற்காக செயல்பட வேண்டும்.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, அரசின் அத்துமீறல்களுக்கு எதிரான வெற்றி என்று கொண்டாடும் அதே நேரத்தில், இது தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே என்பதனை உணர வேண்டும். சங்கரைப் போன்றவர்கள், தங்களது சமூகப் பொறுப்புகளை உணர்ந்து நியாயமான பிரச்சனைகள் குறித்த விமர்சனத்தை மட்டுமே வைக்க வேண்டும். தனிமனித தாக்குதல், அரசு இயந்திரங்களைப் பலவீனப்படுத்தும் அவதூறுகளை தவிர்க்க வேண்டும். ஆதாரங்களுடன் குற்றச் சாட்டுகளையும் விமர்சனங்களையும் வைக்க வேண்டும். குறிப்பிட்ட அதிகாரிகளையோ, நிறுவனங்களையோ ஆதாரமில்லாம் சீண்டுவதற்காக மட்டுமே விமர்சனங்கள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். .அரசு, சட்டத்தை மதிக்க வேண்டும், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை நேர்மையாக எடுக்க வேண்டும். குறிப்பிட்டு ஒருவரை மட்டுமே தொடர்ந்து நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் குற்றம் சாட்டப்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்... .சமூக வலைதள கருத்துகளுக்காக, சொந்த குடிமக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன், அரசு நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட, 'யு -டியூபர்' சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கக் கோரி, அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த, நீதிபதிகள் சுப்பிரமணியம், தனபால் அமர்வு, நிபந்தனை ஜாமின் வழங்கியது. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:
இணைய யுகத்தில் அனைத்து திசைகளில் இருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன. தவறான தகவல்களைப் பரப்பும் ஒவ்வொரு நபரையும் தண்டிப்பது என்பது சாத்தியமற்றது. அந்த தகவல், பொது அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். ஒவ்வொருவரின் கருத்தையும், எண்ணங்களையும், அரசு இயந்திரம் வேட்டையாட துவங்கினால், அந்த குரல்களை அடக்கி விட முடியும்; ஆனால், அது எந்த பலனையும் தராது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இதுபோன்ற பயனற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும், ஒரே மாதிரியான கருத்துகளை எதிர்பார்த்தால், இந்தியா ஜனநாயக நாடாக இருக்க முடியாது. அதிருப்தி என்பது எப்போதும் இருக்கத்தான் செய்யும். அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கலாம். ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை தடுப்பதற்காக, சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட, அரசுக்கு பெரிய கடமைகள் உள்ளன. மாற்றுக் கருத்துகளால் தனிநபர் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தால், அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால், அரசு தன் சொந்த குடிமகனுக்கு எதிராக, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்போது, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூக வலைதள பதிவுகள், யு -டியூப் வீடியோக்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பது, யாருடைய எண்ணங்களையும் மாற்றாது. மாறாக, அது மக்களின் பேச்சுரிமையை நசுக்குவதாக உணர வைக்கும்.அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளித்துள்ள கருத்து சுதந்திரம் என்பது, நம் ஜனநாயகத்திற்கான அழகு. வழக்குகள் வாயிலாக அரசு இயந்திரம், தனிமனித சுதந்திரத்தை நசுக்க துவங்கினால், ஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கையை இழப்பர்.அரசியலமைப்பு சட்டத்திலிருந்து அதிகாரம் பெறும் அரசு அமைப்புகள், மக்களுக்காகவே செயல்பட வேண்டும்; அதுவே அரசின் கடமை. அந்த கடமையைச் செய்யும்போது, அனைத்துத் தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வருவது இயல்பு. அதில் ஏற்றுக் கொள்ள முடியாத விமர்சனங்களும் இருக்கக்கூடும். விரும்பத்தகாத கருத்துகளை பரப்பும் சிறு குழுக்களை கட்டுப்படுத்த, அனைவரின் குரல்களையும் ஒட்டுமொத்தமாக நெரிக்கக்கூடாது. மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் எந்தவொரு செயல்பாட்டிலும், அரசு நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது
தான் உண்மை என கருதுவதை, ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். ஒரு அரசியல் தலைவர், கட்சி, சித்தாந்தங்கள் பற்றி, ஒரு கருத்தை உருவாக்குகிறார். ஆனால், இதுதான் உண்மை என, யாரும் யாகுக்கும் கட்டளையிட முடியாது. மனதால் உணரப்பட்ட உண்மை, ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். தனிப்பட்ட நபர் ஒருவரால் மற்றவர்களின் பார்வைகளையோ, கருத்துகளையோ மாற்ற முடியாது. கருத்து பதிவிடும் அதிகாரத்தை பறிப்பது, ஒருவரின் கருத்துகள் மற்றவர்களுக்கு சென்றடைவதை தடுக்கும் முயற்சி.
அரசால் எத்தனை பேரை தடுக்க முடியும்; ஒருவரது எண்ணங்களை நம்மால் மாற்ற முடியுமா? சிந்தனை சுதந்திரத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஒருவர் தன் கருத்துகளுடன் ஒத்துப்போகும் நபர்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். தனக்கு முரணான கருத்துகளை புறக்கணிப்பார் அல்லது விமர்சனம் செய்வார். இதுதான் சமூக வலைதளங்களின் இயல்பு. எனவே, மற்றவர்களை துாண்டிவிட்டார் எனக் கூறி, கருத்து பதிவிட்டவரை முழுதாக பொறுப்பாக்க முடியாது.
சமூக வலைதளங்கள், எந்தவொரு கருத்தையும் யார் மீதும் திணிப்பதில்லை; கட்டாயப்படுத்துவதும் இல்லை. எதை பார்க்க வேண்டும் என்பது, பார்வையாளர்களின் கையில்தான் உள்ளது.சவுக்கு சங்கர் பேட்டியில்
"மூன்றாவது முறை என்னைக் கைது செய்திருக்கின்றனர் . அரசு ஒரு யுடியூப் சேனலைப் பார்த்து அஞ்சுகிறது என்பதைத் தவிர , இதற்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளார்
புழல் சிறையில் இருந்து யுடியூபர் சவுக்கு சங்கர் நேற்று விடுவிக்கப் பட்டார் . அவர் சிறையில் நடந்தது குறித்து அளித்த பேட்டியில் : "புழல் சிறையில் மூன்று லட்சத்து நானூறு கைதிகளுடன் வைத்தார்கள் . முதல்நாள் கஸ்டடிக்கு போய்விட்டு வந்த உடன் பார்த்தால் , மரத்தில் சிசிடிவி கேமராவை மாட்டினார்கள் . சிறையில் ஒருவர் வாழைப்பழம் கொடுத்தார்
அவரை வேறு பிளாக்கிற்கு மாற்றிவிட்டார்கள் . மற்றொருவர் மிக்சர் கொடுத்தார் . இவரை இரண்டாவது பிளாக்கிற்கு மாற்றிவிட்டார்கள் . என்னை இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணித்த காவலர்கள் யாராவது என்னுடன் பேசினால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.



























கருத்துகள்