இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா) சாரந்த த. மு.எ.க.ச இயக்கத்தின் மதிப்புறு தலைவராக நடிகை ரோஹிணி மொல்லேட்டி தேர்வு.
தமுஎகச 1975 ஆம் ஆண்டு கொள்கை, சட்டவிதிகள் என அமைப்பு ரீதியாக உறுவானது. அதன் தலைவராக முத்தையாவும் பேராசிரியர் இரா. கதிரேசன் பொதுச்செயலாளராகவும் தேர்வாகினர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு வரை 15 மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தபட்டன.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) 16 ஆவது மாநில மாநாடு தஞ்சாவூரில் ஞாயிறன்று நடந்து முடிந்தது.
புதிய நிர்வாகிகளாக மதிப்புறு தலைவர் நடிகை ரோகிணி,தலைவர் மதுக்கூர் இராமலிங்கம்,பொதுச் செயலாளர் களப்பிரன், பொருளாளர் சைதை ஜெ, துணைத் தலைவர்கள் மதரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, புதுக்கோடடை கவிஞர் நா.முத்துநிலவன், க.உதயசங்கர், ஆர்.நீலா, பிரளயன், துணைப் பொதுச்செயலாளர்களாக கே.வேலாயுதம், அ.லட்சுமிகாந்தன் வெண்புறா, உமா, அ.கரீம், கி.அன்பரசன்,
துணைச் செயலாளர்களாக மருதுபாரதி, மணிமாறன், அ.உமர் பரூக், மேட்டூர் வசந்தி, கரிசல் கருணாநிதி, ஹேமாவதி தேர்வாகினர். மேலும் அருணன், சிகரம் செந்தில்நாதன், ச.தமிழ்ச்செல்வன், மயிலை பாலு உள்ளிட்ட 44 செயற்குழு உறுப்பினர்களும் 149 பேர் கொண்ட மாநிலக் குழுவும் இம்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது.த.மு.எ.க.ச எனும் கம்யூனிஸ இயக்கத்திற்க்கு மதிப்புறு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை ரோஹிணி மொல்லேட்டி 1969 ஆண்டு பிறந்த 55 வயதான தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில். 1976-ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது தமிழ் கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரலாக நடிகைகள் ஜோதிகா, தபூ, ரஞ்சிதா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலருக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் 2017ஆம் ஆண்டு வனிதா விருதும் பெற்றார்.
அனகாபள்ளி விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை, தயாரிப்பாளர் இவரது தந்தை அப்பாராவ் நாயுடு, தாயார் இராதா சரஸ்வதி, நடிகர் ரகுவரனைத் திருமணம் செய்து (1996-2004) வரை வாழ்ந்து பின் மணமுறிவான நிலைரிஷிவரன் என்ற 1998 மகன் உண்டு, நடிகர் ரகுவரனை 1996ஆம் ஆண்டு மணந்தார். பல தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ரகுவரன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் மனைவி ரோகிணியும் இவரை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது. 2004 ஆம் ஆண்டில் சட்டப்படி இருவரும் மணமுறிவு பெற்றனர். தனது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது. 2008 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். பின் இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படுகிறார்.










கருத்துகள்