தேசிய நுகர்வோர் தினநிகழ்ச்சி – மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பங்கேற்பு
தேசிய நுகர்வோர் தினம் இன்று கொண்டாடுப்படுவதையொட்டி புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி பங்கேற்றார். டிஜிட்டல் முறையிலான நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சார இயக்கங்களை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இந்த ஆண்டுக் கருப்பொருள், டிஜிட்டல் முறையில் நுகர்வோருக்கு விரைவான நீதி வழங்குதல் என்பதாகும் என குறிப்பிட்டார். இந்த ஆண்டில் இதுவரை 1,40,000 நுகர்வோர் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 90,000 விசாரணைகள் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நுகர்வோர் விவகாரங்கள்துறை இணையமைச்சர் திரு பி எல் வர்மா, நாட்டின் பொருளாதாரத்தில் நுகர்வோர் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறினார். டிஜிட்டல் இந்தியா போன்ற முன்முயற்சிகள் நுகர்வோரிடையே விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.












கருத்துகள்