பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பதவி வகித்தார்.
அவரது பதவிக் காலம் முடிந்த. நிலையில் அடுத்த தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிகார் அமைச்சரவையில் சாலை கட்டுமானத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். நிதின் நபின் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, பாட்னாவிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். பீகாரைச் சேர்ந்த நிதின் நிபின் பாரதி ஜனதா கட்சியின் புதிய செயல் தலைவராக அறிவிப்பு
பாஜகவின் மிக மூத்த தலைவரான நபின் கிஷோத் சின்ஹாவின் மகனாவர்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றிருந்த நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவருக்கு தேசிய அளவிலான மிகப்பெரிய அங்கீகாரத்தை பாரதிய ஜனதா கட்சி வழங்கி உள்ளது
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின்நபின் நியமனம்
பீகார் மாநிலம் பங்கிபூரிலிருந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கபட்டவர்.
2020 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் 84,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹாவை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்
நடந்து முடிந்த பீகார் மாநிலத் தேர்தலில் பாஜக வெற்றி பெற பெரிதும் காரணமாக இருந்தவர்.
தற்போது மாநில அமைச்சராகப் பதவி வகிக்கிறார். செயல் தலைவர் தான் பின் கட்சியின் தலைவராவார்.





கருத்துகள்