தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு கூட்டுமுயற்சிகள் அவசியம் – குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
இந்திய பாதுகாப்பு கணக்குகள் சேவை துறையின் 2023, 2024-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளிடையே குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று உரையாற்றினார்.
குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் பயிற்சி அதிகாரிகளை வரவேற்ற அவர், பாதுகாப்பு கணக்குகள் துறை 275 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்ட நாட்டின் மிகப்பழமையான துறைகளில் ஒன்று என்று குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த தொலைநோக்குப் பார்வையை உறுதிப்படுத்த குடிமைப்பணி அதிகாரிகள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று தெரிவித்தார். வளர்ச்சி என்பது அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைக்கோடி பகுதிகளுக்கும் சேவை ஆகியவற்றில் அவசியம் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று அமிர்த காலத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அவர் நினைவு கூர்ந்தார். இளையோர் சக்தி, இளம் அதிகாரிகளின் புதுமை சிந்தனை ஆகியவை நாட்டை கட்டமைப்பதில் முக்கிய இடம்பெறும் என்றும், சேவை மற்றும் கடமை உணர்வை தங்களது வழிகாட்டு மந்திரமாக கடைபிடிக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.
பொதுநிதி என்பது கடினமாக உழைத்து வருவாய் ஈட்டும் வரி செலுத்துவோரின் பங்களிப்பை குறிப்பிடுவதால் ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு, பொறுப்புடைமை ஆகிய உயர்ந்த தரங்களை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.




கருத்துகள்