ஜி.கே.மணி ச ம உ வை பாமகவிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஜி.கே.மணிக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் துவங்கிய நிலையில் பாமகவில் தந்தை நிறுவனர் மருத்துவர் ராமதாஸிற்கும், மகன் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸு க்குமான மோதல் சமாதானத்தை எட்டாமல் தீவிரமடைகிறது. தேர்தல் நேரம் நெருங்கியும் தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில் இருதரப்பும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பாமக செயல் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''என்னை துரோகி என அன்புமணி கூறியது மிகவும் வேதனையாக இருக்கிறது. அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாஸிடம் நான் தான் பேசினேன். அன்புமணியை மத்திய அமைச்சராக்குவதை ராமதாஸ் கடுமையாக எதிர்த்த நேரத்திலும் நானே அவருக்காக பேசினேன். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் வைத்து பேசியதால்தான் இந்த பிரச்சனையே முழுமையாக ஆரம்பித்தது'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஜி.கே.மணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், 'பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி அன்புமணி ராமதாஸ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி டெல்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் கொடுத்ததோடு நேர்காணலும் அளித்துள்ளார்.
தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீது அவதூறு பரப்பும் வகையில் டிசம்பர் 15 ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்துள்ளார் .
இந்த இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தரப்பினர் வீடியோ காட்சி ஒன்றையும் வைரலாக்கி வருகின்றனர். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஜி.கே.மணி மற்றும் ச ம உ சேலம் மேற்கு இரா.அருள் உள்ளிட்டோர் எழுதிக் கொடுப்பதை
பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் மருத்துவர் ராமதாஸிடம் கொடுக்க, மருத்துவர் ராமதாஸ் அதை அப்படியே வாசிக்கிறார்.பாமக பொதுக்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி ஆத்தூரில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் ராமதாஸ் 'ஆத்தூரில் பொதுக்குழு நடக்கும்' எனச் சொல்ல, சேலத்திற்கு மாற்றியாச்சு என ஜி.கே.மணி பதில் சொல்கிறார். ''சேலத்திற்கு மாற்றியாச்சா? சரி'' என ராமதாஸ் சொல்கிறார்.
இதனை சுட்டிக்காட்டி வரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தரப்பினர்மருத்துவர் ராமதாஸை முழுமையாக இயக்குவது ஜி.கே.மணி மற்றும் சேலம் பாமக ச ம உ இரா.அருள் எனும குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். மருத்துவர் ராமதாஸ் பெயரில் வரக்கூடிய அறிக்கைகள் அவரது கவனத்தில் வரக்கூடிய அறிக்கைகள் தானா என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இந்த வீடியோ காட்சியை வைத்து ஜி.கே.மணிதான் மருத்துவர் ராமதாஸை இயக்குவதாக ஜி.கே.மணிமற்றும் இரா. அருளுக்கு எதிராக தறபோது நீக்கவேண்டும் என போர்க்கொடி தூக்குகின்றனர் தலைவர் மருத்துவர் அன்புமணி ரமதாஸ் தரப்பினர்.ஜிகே மணியின் சொத்து எவ்வளவு - என்பதை இங்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினர் விளக்குகிறார். அதோடு முன்னால் சட்டமன்ற உறுப்பினர் காவேரி மற்றும் காலஞ்சென்ற இல. க. சடகோபன் உள்ளிட்ட பலரும் நன்கு அறிவார்கள், விரைவில் சொத்து குவிப்பு வழக்கிலும் சிக்குவார்.
அமலாக்கத்துறை விரைவில் லைக்காவில் ஆரம்பித்து எந்தெந்த ஊர்களில் குவாரிகள், சொத்துகள் என ச ம உ விளக்குவதைக் கண்டறியும்
ஜிகே மணியின் சொத்து நாடடுடமை ஆக வேண்டும் என்பதே பாமகவின் தொண்டர்கள் விருப்பம்.















கருத்துகள்