உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைககு வருகிறது
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோரது முன் நடந்த வாதத்தில், 'இந்நீதிமன்ற உத்தரவை அரசு தரப்பு நிறைவேற்றவில்லை. தீபம் ஏற்றச் சென்றவர்களை காவல் துணை ஆணையர் தடுத்தார். ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இவ்வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும்' என்றனர். அதையடுத்து நீதிபதி, 'இவ்வழக்கில் கோரிய நிவாரணத்திற்கு அப்பால் மேலும் விரிவாக செல்ல வேண்டாம்,' என்றார்.
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ''அவமதிப்பு வழக்கில் இந்த நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்கு எதிராக தாக்கலான மனுவை, இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.
''இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, ரிட் மனுவில் உத்தரவிட்டதை எதிர்த்து, அரசு தரப்பில் உயர் நீதிமன்றக் கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ''அவமதிப்பு வழக்கில் இந்த நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்கு எதிராக தாக்கலான மனுவை, இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்றார்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், 'டிசம்பர் மாதம்., 3 ஆம் தேதியில் திருப்பரங்குன்றத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக, 24 பேர் மீது காவல்துறை வழக்கு பதிந்தனர். 12 பேரைக் கைது செய்தனர். டிசம்பர்., மாதம் 4 ஆம் தேதியில் 300 பேரைக் கைது செய்தனர். அவர்களை சொந்த ஜாமினில் விடுவித்தனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது சட்டத்திற்குப் புறம்பானது' என்றனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக இரண்டு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டதால், அவமதிப்பு வழக்கு விசாரணை டிசம்பர் மாதம்., 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த நீதிமன்றம் டிசம்பர்., மாதம் 3 ஆம் தேதியில் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற, மனுதாரர்களுடன் சென்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிடமிருந்து அறிக்கை பெற்று, மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் டிசம்பர் மாதம்., 9 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது.















கருத்துகள்