கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிருஸ்தவ இளைஞா் இயக்கம் சாா்பில் 28 வது அருமனை கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
முன்னதாக அழைப்பிதழில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், த.வெ.க நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ்குமார், பிரின்ஸ், தாரகை காட்பட், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததநிலையில்
விழாவில் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மற்றொரு புறம் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில காங்கிரஸ் கட்சி இணைய பல்வேறு வியூகங்கள் பேசப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்திருந்தது. எனவே த.வெ.க நிர்வாகிகள் பங்கேற்ற கிறிஸ்மஸ் விழாவை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர் . இந்த நிலையில் சென்னையில் த.வெக தவைவர் நடிகர் விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்திருக்கிறது தவெக. விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களும், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நடிகர் தவெக தலைவர் விஜய்யை 'மீட்பர்' லெவலுக்கு பேச நடிகர் விஜய் 'ஒரு அரசன் வருவான்!' என அரசியல் கலந்து பேசி முடித்தார். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி விஜய் தவெகவை தொடங்கினார்.
கடந்த செப்டம்பரிலேயே முதல் மாநாட்டை நடத்தி செபல்பாட்டு அரசியலுக்கும் வந்துவிட்டார். ஆனால், கடந்த ஆண்டு விஜய் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தவில்லை. ட்விட்டரில் வாழ்த்தோடு முடித்துக் கொண்டார். ஆனால், இந்த ஆண்டு தவெக வுக்கு சில கிருஸ்தவ காஅபரேட் அமைப்புகள் களம்மிறங்கி தவெகவுக்கு ஆதரவுத் தகவல் வந்த நிலையில் தேர்தலுக்கு சில மாதமே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் விழாவை பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார். பின்னணியிலும் சில காரணங்கள் உண்டு மேடைகளில் 31 சதவீதம் அளவுக்கு வாக்கு வங்கி இருப்பதாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறினாலும் குறைந்தபட்சமாக 20 சதவீதம் வாக்குகளாவது தங்களுக்குக் கிடைக்குமென தவெக நம்புகிறது. அந்த 20 சதவீதத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருக்குமென நம்புகிறார்கள். காரணம், கடலோர கிருஸ்தவ மீனவக் கிராமங்களில் உள்ள சிறுபான்மையினர் வாக்கு.வங்கி தான்
ஆனால், சிறுபான்மையினர் விவகாரத்தில் நடிகர் விஜய் பெரிதாக வாய் திறக்காமல் மௌனமாகவே இதுவரை இருந்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கூட எதுவும் பேசவில்லை. இஸ்லாமியர்களுக்காக வக்ஃபு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வழக்குநத் தொடரப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கென்று எதையும் சிறப்பாக செய்யவில்லை. திமுகவைத்தான் பிரதானமாக எதிர்க்கிறார். திமுகவின் பலமாக கருதப்படும் சிறுபான்மையின வாக்குகளைத்தான் அவரும் குறிவைக்கிறார். ஆனால், அந்த வாக்குகளைப் பெற விஜய் தரப்பு பெரிதாக வியூகங்களை வகுக்கவில்லை. தொடர்ச்சியாக சிறுபான்மை மக்கள் சார்ந்த விவகாரத்தில் அமைதியாக இருந்தால் திமுக நடிகர் விஜய்யை பாஜக-வின் பி டீம் என முன்வைத்து எதிர் மறையாக விமர்சிப்பார்கள் என்கிற அச்சமும், மக்கள் மத்தியில் எடுபடக்கூடும் என்கிற யதார்த்தமும் நடிகர் விஜய்யின் வியூக வகுப்பாளர் தரப்பு உணர்கிறது. அதனால் தான் திமுக திருநெல்வேலியில் கிறிஸ்துமஸ் விழா நடத்திய அடுத்த நாளே கிறிஸ்துமஸ் விழாவுக்கென அழைப்பு விடுத்து, வேகவேகமாக நிகழ்ச்சியையும் நடத்தி முடித்திருக்கிறார் விஜய். அவர் கூறிய கதை விவாதம் ஆன நிலையில் அதன் தன்மை பேசப்படும் நிலையில் நமது பார்வையில் பைபிள் ஆதாரம் கேட்டவர்களுக்கு இதோ ஆதாரம்: "பைபிளில் joseph and the famine (in egypt) தேடுங்கள் கிடைக்கும்.
ஜோசப் அரசனான கதையை விஜய் சொல்வது அவர் விருப்பம். ஆனால் ஜோசப் எகிப்த் மக்களை அவர்களின் வறுமையை பஞ்சத்தால் உருவான சூழலை பயன்படுத்தி நிலம் , கால் நடைகள் அனைத்தையும் மன்னனுக்கு எழுதி வாங்கி கொண்டு அவர்களை மன்னனுக்கு வேலை செய்யும் அடிமைகளாக ஆக்குவார் என்பது தான் உண்மை.
இப்படி தான் ஜோசப் மெல்ல மன்னன் ஆவார். பஞ்சத்தில் இருக்கும் மக்களின் உணவு தேவையை பயன்படுத்தி நிலத்தை அவர்கள் கால் நடைகளை மொத்தமா பிடிங்கி கொள்வதும் , மன்னனுக்கு அடிமையாக மாற்றுவதும் ஏற்புடைய செயலல்ல
பஞ்சம் முடிந்த அடுத்த ஆண்டு முறையாக வரி கொடுத்தால் போதுமானது என கூறியிருந்தால் கூட ஒரு நியாயமான நிர்வாக யுக்தி என சொல்லலாம். ஜோசப் செய்தது அவர் அரசனாக வேண்டும் என்ற நோக்கத்திற்கு வேண்டும் என்றால் சரியாக தெரியலாம் ஆனால் மக்களுக்கு அவர் செய்தது தவறு.
அப்புறம் ஜோசப் பெயரில் வருவதால் இந்த கதையை சொல்வோம் என விஜய் நினைத்திருக்கலாம். ஆனா என்ன படிக்காமல் அல்லது பாதி கதையை வைத்து அரசன் ஆன கதையை சொல்லியுள்ளார் விஜய் என்றால் அவருக்கு "இங்கே நிறைய கதைகள் உள்ளன. அதை படித்துவிட்டு பின் எங்கோ இருக்கும் ஜெருசலம் , எகிப்த் , இஸ்ரேல் கதைகள் படிக்கலாம்".
அதுக்காக தான் சொல்றேன் எங்க கர்ணன் கதை ஜோசப் கதாபாத்திரத்தை விட வழுவானது நியாயமானது.. ஜோசப் விட விஜய் கறுவதுபோல கர்ணன் தூய சக்தி.கடலோர மாவட்டங்களில் வாக்குகள் குவிக்க முயலும் தாவெக தக்க கூட்டணி அமைத்தால் 120 சீட்டுகள் பெற்று ஆட்சி அமைக்கும் அதற்கு உலக அளவில் கிருஸ்தவ கார்ப்பரேட் உதவி வந்து விடும் இதுவே கள யதார்த்த நிலை.

































கருத்துகள்