திருத்தணி ரயிலில் 'ரீல்ஸ்' இளைஞர்கள் மற்றொரு இளைஞனை வெ..ட்டிய கொடூரம்.
தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிய மாநிலம். அதில் மாற்றுக் கருத்து யாருக்குமில்லை
அண்மை காலமாக நடக்கும் சம்பவங்களை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்த்தால் எல்லாவற்றிற்கும் முடிவு விரைவில் வந்து விடும் போலிருக்கிறது..
குற்றம் செய்து பிடிபடும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், காவல்துறையினரையும் நீதித் துறையையும் இளக்காரமாக நினைக்கிறார்கள், கேலியாகப் பேசுகிறார்கள்.
அவர்களிடம் எதைப் பற்றியுமே பயமில்லை.
"அடிக்கப் போறியா எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கோ. நீ அடிச்சு நான் செத்து போயிட்டா எனக்கு ஒன்னுமில்ல. நீ தான் பின்னாடி மாட்டிகிட்டு சாவே" என்று சாதாரண மாகக் சொல்கிறார்கள்..
"இந்தக் குற்றத்தைச் செய்தால், இங்கே சரணடைய வேண்டும். இத்தனை நாளில் ஜாமீன் கிடைத்துவிடும், சட்டம் நம்மைத் தண்டிக்காது சாட்சிகள் சொல்ல யாரும் வரமாட்டார்கள் இந்த அளவுக்குத் தான் தண்டிக்க முடியும், அதுக்கே கூட ஏகப்பட்ட வருஷங்களாகும்" போன்றவை தெள்ளத்தெளிவாக அடித்தளத்தில் வாழும் இளைய தலைமுறையினர் மண்டையில் கடந்த பத்து ஆண்டுகளில் தவறான போதனை ஏறி இருக்கிறது .
நேற்று முன்தினம் சென்னை அண்ணா சாலையில் தாறுமாறாக இரண்டு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டு வந்த ஐந்து இளைஞர்களை அங்கே தேனீர் குடிக்க வந்த இரண்டு பேர் தட்டி கேட்டிருக்கிறார்கள்.
உடனே அந்த இளைஞர்கள் இரண்டு பேரையும் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்கள். நம்மை யார் என்ன செய்து விடப் போகிறார்கள் என்று ஒரு ஆணவமான மனநிலை தானே இது..
இதே மனநிலை தான் பள்ளியில் படிக்கும் சில வீட்டிற்கு அடங்காத மாணவர்களுக்கும தலை தூக்கி வருகிறது.
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்து பயந்து நடுங்க வேண்டிய நிலை. எதை தட்டிக் கேட்கப் போனாலும் மடை மாற்றப்பட்டு ஆசிரியர்கள் மீது பழி வந்து சேர்கிறது.
ஒரு குற்றத்தைச் செய்தால் அதற்குண்டான பின் விளைவுகள் என்னென்ன? நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பமும் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்? சமூகத்தில் உங்கள் குடும்பம் எப்படிப்பட்ட அவமானங்களைச் சந்திக்கும் என்பதையெல்லாம் பாடத்திட்டங்களையும் தாண்டி மாணவ மாணவியருக்கு தனியாய் நடைமுறை பாடமாகவே நடத்தியாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். கூட்டுக்குடும்ப வாழ்வியல் இருந்தவரை இதபோனற தவறுகள் நடக்கவில்லை, புத்தி சொல்ல பெரிய மனிதர்கள் இருந்தனர் இந்த நிலை மாறிய பின் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் நிலை,
எல்லாவற்றிற்கும் காரணம் போதை மற்றும் கஞ்சா பழக்கம். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகின்றனர்.
மதுக்கடைகள் விற்பனை மட்டுமே அரசின் இலக்கு
ஒரு சாவுக்கு போனா குடிச்சிட்டு ஆடுறவன் பத்து பேருன்னா கஞ்சா அடிச்சுட்டு ஆடுறவன் ஆறு பேரு இருக்கான். அவர்களைத் தட்டி கேட்டால் அங்கேயே இன்னொரு பிணம் விழும் போல.
கஞ்சா இளைஞர்கள் எதிர்ப்பட்டால் ஆண்களே அஞ்சி ஒதுங்குகிறார்கள் என்றால் பெண்கள் மற்றும் சிறுமிகள் நிலை என்ன என்று யோசித்துப் பாருங்கள்
காவல்துறை நினைத்தால் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க முடியும். ஆனால் அதில் உள்ள சிலர் கேவலம் மாமுலுக்காக கஞ்சா பார்ட்டிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கஞ்சா புழக்கம் பற்றி புகார் சொல்லப்போனால், புகார் சொல்பவர்களையே ஆபத்தில் சிக்க வைத்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமில்லை.
இந்த கஞ்சா போதை கும்பலிடம் சிக்கியுள்ள பொறுக்கிகள் மத்தியில் தான் தங்களுடைய பிள்ளைகளும் வளர்கிறார்கள் என்பதை, மாமுல் வாங்கும் காவல்துறையினர் மறந்து விடுகிறார்கள்.
மாமூல் வாங்கி வளர்த்து விடும் அதே கஞ்சா கும்பலால் என்றைக்காவது ஒரு நாள் தங்கள் வீட்டு பெண்களுக்கும் ஆபத்து வரலாம் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை.
'மாமுல்' காவல்துறையினர் தான் அப்படி என்றால், தமிழ்நாடு அரசாங்கம் என்ன செய்கிறது? என்பது ஆரோக்கிய சிந்தனை கொண்ட மக்கள் மத்தியில் வினா எழுகிறது,
கஞ்சா விஷயத்தில் காவலர்கள் தவறு செய்தால் அவர்களை இடமாற்றம் செய்கிறார்கள், பணி மாற்றம் செய்கிறார்கள், இல்லை என்றால் காத்திருப்பு பட்டியலில் வைக்கிறார்கள் அவ்வளவுதான்.
இதையே இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்க போகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
மாநில அளவில் சோதனை நடத்தக்கூடிய அதிகாரமிக்க சிறப்புப் படைகளை உருவாக்கி, திடீர் திடீரென சோதனை நடத்தி எங்கெல்லாம் கஞ்சா பிடிபடுகிறதோ அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலைய காவலரிடம் உயர்மட்ட அளவிலான அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்த வேண்டும்.
கஞ்சா புழக்கத்துக்கு உடந்தையாக இருக்கும் அத்தனை பேர் மீதும் வழக்குப் பதிவு, கைது என குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கினால் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வு காண முடியும்.
ஒரே வரியில் சொன்னால் இளைய சமுதாயம் மோசமான பாதையில் பயணிப்பதை எல்லோரும் சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வேடிக்கை பார்ப்பதில் மாநில அரசாங்கம் முன்னணியில் இருக்கிறது என்பதை ஊடகங்கள் கூற மறுக்கிறது காரணம் விளம்பர வருவாய் மட்டுமே.
இதை சொன்னால் ஏதோ திட்டமிட்டு ஆட்சிக்கு எதிராய் பேசுவதாக ஒரு தரப்பினர் அரசியல் செய்யலாம்.
எதிர்கால ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற உங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் உங்கள் குடும்பத்து பெண்களுக்கும் சேர்த்து தான் பேசிக் கொண்டிருக்கிறது இதழ்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
இரும்பு கரம் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை சொல்லி ஆயிற்று."அந்த ரீல்ஸ் சிறுவர்கள் போதையில் இல்லை.. விரோதம் இருந்தால் பாதுகாப்புக்காக கத்தி வைத்திருந்ததாய் கூறுகிறார்கள்" அதிகார விஞ்ஞானிகள் ..
நாம் புரிந்து கொள்வது இங்கு கடினம்.
ஆம்,போதையில் இருந்து குத்தினால் தான் ரத்தம் வரும். மற்றபடி வீட்டிலிருந்து எடுத்து வந்து கத்தியால் எந்த ஆபத்தும் இல்லை..
நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபட்ட அவர்களுக்கு சர்வதேச அளவில் எக்கச்சக்கமான அச்சுறுத்தல்..
நம்ம காதுகள் பாவமில்லையா..
இன்னொரு பக்கம் பப்ளிக் முன்னாடி கோவில்களிலேயே ஒருவன் தலைமைக் காவலருக்கு எதிராவே கத்தியைக் காட்டுகிறான்.
இது பத்தி யாரும் கேட்டா, "ஆப்பிள் வெச்சிருந்தாங்க அதை வெட்டி தர்றதுக்காக கத்தி இதோ இருக்குன்னு காட்டினாரு" அப்படின்னு சொல்லுவார்கள் போல..
அங்கங்க அவனவன் பப்ளிக் மத்தியில் கத்தியைத் தூக்குற அளவுக்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்ததுங்ற கேள்விக்கு மட்டும் பதிலே இப்போது வராது.பசங்கள்ல நாசமான வகை உருவாவறதுக்கு..
நம்அறிவுக்குத் தெரிஞ்சு எத்தனையோ காரணங்கள்..
முதல்ல ஒத்த புள்ளைய பெத்துட்டு அதுக்கு ஏகப்பட்ட செல்லம் குடுக்குறது..
கேட்டதை வாங்கி குடுக்கலைன்னா பையன் எதனா பண்ணிப்பானோ? எங்கேயாவது போயிடுவானோ?
எல்லா நாச வேலைகளுக்கும் காம்ப்ரமைஸ் செய்வது
பள்ளி பசங்க மேல கை வைக்க முடியாத அளவுக்கு வாத்தியாருங்களுக்கு ஏகப்பட்ட கிடுக்குப்படி.. இதுல ஜாதி சங்கங்க வேற குறுக்குல பூந்து தலை விரிச்சாடும்.
"பாடம் நடத்துறோம் படிச்சா படிங்க, புத்திமதி சொல்றோம் கேட்டா கேளுங்க, இல்ல எக்கேடு கெட்டாவது போங்க" - டீச்சர்ஸ் இந்த முடிவுக்கு வந்து பல வருஷமாகுது.
அப்புறம் இருக்கவே இருக்க மாஸ் ஹீரோக்கள் சினிமா..
ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிர்வினை என்னவென்றே தெரியாத முட்டாள்கள். ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கலைன்னா நீ செத்துப் போயிடுவே.. உனக்கெல்லாம் வாழவே தகுதி இல்லைன்ற லெவலுக்கு கொண்டு வந்துட்ட பொறம் போக்குங்க சில உண்டு..
எதுக்கெடுத்தாலும் இப்போ ஒரு புரியாத வார்த்தை கெத்து.. நம்மையெல்லாம் யாராலும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு தலைமீது ஏற்றி வைக்கப்பட்ட திமிரு..
இதுக்கு மேல மூளை கெட்ட பொண்ணுங்க. பெரும்பாலான அரைவேக்காடுகளுக்கு நல்ல பசங்கள பிடிக்கவே பிடிக்காது. அவன் தயிர் சோறு, சாம்பார் சாதம், காலி சிலிண்டர்..
தூங்கி எழுந்து வெளியே போய் ராத்திரி வீட்டுக்கு வந்து படுக்குற வரைக்கும் ஊரு முழுக்க காரி துப்புறவனைத்தான் பிடிக்கும்..
இதெல்லாம் சிறு உதாரணம் தான். முக்கிய விபரங்கள் இன்னும் நிறைய இருக்கு. அது பேசும் களம் இதுவல்ல
அப்புறம் முக்கிய விஷயம்.
இந்த பதிவையே சில வீடுகளில் இருக்கும் சின்னஞசிறு நபர்கள் புறக்கணித்து விடலாம்
தாராளமா சொல்லுங்க.."அரசாங்க கடனுக்கும் மக்களுக்கும் சம்பந்தமே இல்லை..எனப் பேசும் ."
நாட்டில பொருளாதார புலிகள் பல உண்டு ன் தொல்லை தாங்க முடியவில்லை அதற்கு அடுத்த தேர்தல் வர இன்னும் 100 நாட்கள் கூட இல்லை என்பதே பதில்.




கருத்துகள்