ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்;
தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம் அதில் , 3 காவல்துறை உதவி இயக்குனர்கள் , 7 காவல்துறை தலைவர் கள், 3 காவல்துறை துணைத் தலைவர்கள், 15 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள்உள்ளிட்ட 30 பேருக்கு தமிழ்நாடு அரசு பணியில் உயர்வு வழங்கி உத்தரவிட்டது.
அதனடிப்படையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் செயலாளராக இருந்த ஐஏஎஸ் சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையர் பழனிசாமி கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத்துறை ஆணையர் கஜலட்சுமி, நில நிர்வாக ஆணையராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கிரண் குராலா, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத்துறை ஆணையராகவும், அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் தேவ் ராஜ் தேவ், தமிழ்நாடு உப்பு நிறுவன முதன்மைச் செயலாளராகவும், வரலாற்று ஆராய்ச்சி, ஆவணக் காப்பக ஆணையர் ஹர் சஹாய் மீனா, அறிவியல் நகரத் துணைத் தலைவராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீர்வளத்துறை சிறப்புச் செயலாளர் மலர்விழி, வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவணக்காப்பக ஆணையராகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தர ராஜ், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித்துறைத் தலைவர், மற்றும் இயக்குநராகவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு துணைச் செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
30 பேருக்கு பணியில் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு சேர்த்து மொத்தம் 70 பேருக்கு புதிய பணியிடம் சிபிசிஐடி ஐஜியான அன்பு பணி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், தெற்கு மண்டல ஐஜியான பிரேம் ஆனந்த் சின்ஹா, பணி உயர்வு பெற்று ஆவடி காவல்துறை ஆணையராகவும், மும்பை, சிபிஐயில் ஐஜியான தீபக் எம்.தோமர் கூடுதல் டிஜிபியாக பணி உயர்வு பெற்று அதே பிரிவிலும்,
மேற்கு மண்டல ஐஜியான செந்தில்குமார் பணி உயர்வு பெற்று, டிஜிபி அலுவலகத்தில் தலைமையிடக் கூடுதல் டிஜிபியாகவும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான அனிஷா உஷேன், பணி உயர்வு பெற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், காவல்துறை நவீனமயமாக்கல் ஐஜி நஜ்மல் ஹோடா பணி உயர்வு பெற்று, கமாண்டோ படை ஏடிஜிபியாகவும், தலைமையிட ஐஜி மகேந்திர குமார் ரத்தோடு, காவல்துறை யினர் நலன் ஏடிஜிபியாகவும், ஆவடி காவல்துறை ஆணையரராக ஏடிஜிபி சங்கர், சிறைத்துறை ஏடிஜிபியாகவும், போதைப்பொருள் அமலாகப்பிரிவு சிஐடி ஏடிஜிபி அமல்ராஜ், தாம்பரம் காவல்துறை ஆணையராகவும், சிறைத்துறை ஏடிஜிபியான மகேஷ்வர் தயாள், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் மாறுதல்
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்







கருத்துகள்