LLR பெற ரூபாய் ஆயிரம் லஞ்சம் ; மோடடார் வாகன ஆய்வாளருடன் தரகரும் கைது
திருச்சிராப்பள்ளி மாவட்டம் , குண்டூர் பழனியப்பன் . ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்போது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார்
இவரது மையத்திலிருந்து , திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் LLR க்கு விண்ணப்பித்த இருவருக்கு உரிய கட்டணங்கள் செலுத்தி , மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதியை , (வயது 45) அணுகியுள்ளார் . அவரோ , ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் , அனுமதிக்க முடியும் எனக் கூறவே
லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் , அது குறித்து திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார் அவர்களின் அறிவுறுத்தல்படி , ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை , மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதிக்கு , அங்கு தரகராக இருக்கும் திலீப்குமார் ,(வயது 35) , மூலம் அரசு சாட்சி வைத்துக் கொடுத்துள்ளார்
அதை மணிபாரதி வாங்கிய போது , ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அங்கு சென்று , பணம் பெற்ற கையுடன் அவரைப் பிடித்து கைது செய்தனர் . லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கருத்துகள்