இப்போது டிஜிட்டல் நாணயத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது போல அதில் மோசடிளும் பெருகிவிட்டது, தெருவில் கீரை வாங்கக் கூட QR கோடு தான், சமீபத்தில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒடு நடுத்தர உணவகத்தில் QR Code பதித்த ஸ்டிக்கர் மீது மற்றொரு ஸ்டிக்கரை மறைத்து ஒட்டி பண மோசடி சைபர் குற்றத்தில் ஈடுபட்ட நபர் உடனடியாக கைதானார், - சைபர் குற்றத்தில் மோசடி செய்தவன் சிக்குவதும் எளிது காரணம் சாடசியம் வலுவானது ஆகவே அவனை எளிதாக பூஜியக் குற்றம் தடுப்புப் பிரிவு காவல்துறை உடனடியாக பிடித்து கைது செய்து நடவடிக்கை.
தூத்துக்குடியில் ஒரு நநடுத்தர உணவகத்தில் சாப்பிட்டதற்கான பணத்தை QR கோடு ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும் போது அந்தப் பணம் உணவகம் நடத்தும் உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு வராமல் போனதால் உணவக உரிமையாளர் QR Code ஸ்கேன் சாதனத்தை சோதனை செய்ததில் அதில் வேறொருவின் QR Code ஸ்டிக்கர் இவர் ஒட்டிய ஸ்டிக்கரை மறைத்து ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அது குறித்து உணவக உரிமையாளர் 22.12.2025 ல் NCRP ல் online மூலம் (National Cybercrime Reporting Portal) அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவை பெற்ற பின் தூத்துக்குடி( பூஜியக்) சைபர் குற்றத் தடுப்புப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் காவலய்கள் மேற்படி QR code ஸ்டிக்கரின் வங்கிக் கணக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய செல்போன் எண்ணை வங்கி நிர்வாகத்தில் பெற்றுக் கண்டுபிடித்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்ததில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த குமார் மகன் முருகானந்தம் (வயது 26) என்பவர் செல்போன் எண்ணின் இருப்பிடத்தை Google Time line தொழில்நுட்ப ரீதியாக கண்காணித்த தில் அது தூத்துக்குடி பள்ளிவாசல் அருகில்பஜார் பகுதியில் இருப்பது தெரிந்தது.
அதனால் முருகானந்தத்தைக் கைது செய்து விசாரணை செய்ததில் அவர் மேற்கணட உணவகத்தில் அவனது வங்கி கணக்கின் QR கோடு ஸ்டிக்கரை ஒட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது அதன் பின் அவனை விசாரணை செய்து குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதற்கு முன்
மேலும் இதுபோன்று QR Code மோசடியில் ஈடுபட்டுள்ளாரா எனவும் சைபர் குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் சிறு வணிகர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகளும் தங்கள்து கடைகளில் உள்ள QR code-ஐ சோதனை செய்து இதுபோன்று மோசடி நடைபெறுவதை தவிர்த்திட வேண்டும்.


கருத்துகள்