திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம்
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம்.25-இம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம்.4-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலை, மாலையில் ஊர்வவம் புறப்பாடு நடைபெற்றது. காலையில் தங்க சப்பரம், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 9 நாட்களும் எழுந்தருளினர். அதனையொட்டி எட்டாம் நாளான நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. முக்கிய விழாவான தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சிறிய வைரத் தேரோட்டம் நடைபெற்றது. மலை உச்சியில் தீபம் ஏற்ற, CISF வீரர்களை கூட்டிச் செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று டிசம்பர் மாதம்.3 ஆம் தேதி மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் முன்புள்ள தீபத்தூணில் கடந்த வருடம் போல மாலை 6.05 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பக்தர்கள் திரண்டு காவல்துறை ஏற்படுத்தி வைத்திருந்த தற்காலிகத் தடைகளை உடைத்து கோவில் நோக்கிப் புறப்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், சிஐஎஸ்எப் காவல் பாதுகாப்புடன் மனுதாரர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையொட்டி நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குரிய நெய், காடாத்துணி போன்றவற்றை பிற்பகல் 3.30 மணியளவில் கோவில் அறநிலையத்துறை பணியாளர்கள் கொண்டு சென்றனர். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு மாலை 5 மணியளவில் 16 கால் மண்டபம் முன்பு அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காவல்துறை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாலையில் 6 மணியளவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்பு உச்சிப்பிள்ளையார் கோவில் முன்புள்ள தீபத்தூணில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இதனால், ஹிந்து முன்னணியினர், பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டு கவ தடைகளை உடைத்து 16 காவல்துறை அமைத்திருந்த தற்காலிக தடையை உடைத்து மண்டபம் வரை முன்னேறினர். அங்கு 16 கால் மண்டபம் முன்பு காவலர்களுக்கும் ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் தடைகளை மீறி வீரவேல், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷங்கள் எழுப்பியவாறு கோவிலை நோக்கிச் சென்றனர். இதனால் சுமார் அரைமணிநேரம் பரபரப்பு கணப்பட்டது.
மாலை 6.30 மணியளவில் மாநகரக் காவல்துறை ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் கோவில் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மலை உச்சியிலுள்ள கடந்த ஆண்டுகளில் ஏற்றிய வேறு தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சி எடுக்கப்பட்டது. நீதிமன்றம் சொன்ன இடத்தில் தீபம் ஏற்றாததால் ஆத்திரம்..! கோவிலின் கதவை உடைத்துக்கொண்டு ஆவேசமாக உள்ளே ஓடிச்சென்ற இந்து முன்னணியினர்.. பேரிகார்டு போட்டு தயாராகக் காத்திருந்த காவலருடன் கடும் வாக்குவாதம் செய்த பின் பேரிகார்டுகளை தூக்கி தூரமாகபா போட்டு திருப்பரங்குன்றம் மலைமீது ஏறிச்சென்றதால் பரபரப்பு நிலவியது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, CISF வீரர்களை கூட்டிக் கொண்டு செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுதிருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில்..,
நீதியரசர் G.R.சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய தீர்ப்பின் மீது HR&CE தொடர்ந்த மேல் முறையீடு மனுவினை நீதியரசர் G.ஜெயச்சந்திரன் அவர்கள் அமர்வு தள்ளுபடி செய்தது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது.250 லிட்டர் நெய்,150 மீட்டர் காடா துணி பயன்படுத்தி தாமிர கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும் என இது 12.00 hrs,03 December,2025 நிலவரம். ஆனால் நடந்த நிகழ்வு வேறு. தற்போது 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த நிலையில் மக்கள் தீபம் எப்போது பழைய இடத்தில் நிகழும் எனக் காத்திருக்கும் நிலை

























கருத்துகள்