கேரளா மாநில எல்லையில் வாளையார் சோதனைச் சாவடியில் சிக்கிய ரூபாய்.10 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் குறித்து காவல்துறை விசாரணை,
வாளையார் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் கைவசமின்றி கொண்டு வரப்பட்ட 6 கிலோ 140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதன் சந்தை மதிப்பு ரூபாய். 10 கோடி .கோயம்பத்தூர் மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடியில் ஜனவரி மாதம். 28 ஆம் தேதி காவல்துறையினர் வாகனங்கள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பாலக்காட்டிலிருந்து கோயமுத்தூர் நோக்கி வந்த பேரூந்தை நிறுத்தி சோதனை செய்த போது, நிபின் (வயது 29) என்பவர், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கொண்டு வந்த 6 கிலோ.140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். ரூ.9 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை எடுத்து வந்ததால் வருமான வரித்துறை உயர் அலுவலர்கள் வாலிபர் நிபினிடம் விசாரித்து வருகிறார்கள். முறையாக கணக்கு காட்டினால் மட்டுமே வருமான வரித்துறை அலுவலர்கள் தங்கத்தை கேரள வியாபாரியிடம் ஒப்படைப்பார்கள்.
விசாரணை நடந்து வருகிறது.தங்கக்கட்டிகள் கடத்தி வந்த அந்த நபர், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நிபின் (வயது 29) என்பதும், அவர் பணிபுரிந்து வரும் துணிக்கடையின் உரிமையாளரான ரஹ்மான் என்பவர் கோயமுத்தூர் உக்கடத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஒப்படைப்பதற்காக கொடுத்து அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.
விசாரணையில், நிபின் என்பவர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருவதாகவும், கடை உரிமையாளர் ரஹ்மான் (வயது 42) தங்கக் கட்டிகளை கோயம்பத்தூர் மாநகர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஒப்படைக்க கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், தங்கக்கட்டிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது



கருத்துகள்