ஜனவரி 23 ல் வெளிவரும் திரௌபதி 2 ஹெய்சால சாம்ராஜ்யமும் காடவராயர் சமஸ்தாணத்திற்குமான உறவுப்பாலமே கதைக்களம்
திரௌபதி -2 திரைப்படம் ஜனவரி மாதம் 15 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதிக்கு மாற்றமான வெளியீடு திரெளபதி 2
தியேட்டர்கள் பற்றாக்குறை. எனக் காரணம் கூறப்பட்டாலும், வேறு சில அரசியல் காரணங்களுமுள்ளது. துவாரஹசமுத்திரத்தை தலைநகராக்கி திருவண்ணாமலையை இரண்டாம் தலைநகராக ஆக்கி ஆட்சி செய்த ஹெய்சாலர்களில் கன்னட வீரவல்லாளன் (1291-1343) மாமன்னர் ஹிந்து மதத்தின் உட்பிரிவு சைவம் சார்ந்த காவலனாக விளங்கிய ஒரு ஹோய்சாளர் வம்சம் சார்ந்த மன்னன். மூன்றாம் வல்லாளன் (கன்னடத்தில் பல்லாளன்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அவனுக்குத் திருவண்ணாமலையின் மீது தனி அன்பும் பக்தியும் உண்டு. அடிக்கடி அண்ணாமலையாரைத் தரிசிக்க வந்து சென்றவன் பிற்காலத்தில் அருணசமுத்திர வீர வல்லாளன் பட்டிணம் எனப் பெயர் சூட்டியது தான் பிற்காலத்தில் திருவண்ணாமலையானது அதை ஹோய்சாள சாம்ராஜ்யத்து இரண்டாம் தலைநகரமாகவும் ஆக்கியதுடன் ஹோய்சாளர்களின் சின்னமான சிங்கத்தை வீழ்த்தும் வீரனாகும்அதை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னியின் அம்சமான திரு அண்ணாமலையில். சிவன்டியார்களால் பாடல் பெற்ற ஸ்தலத்துக்கு வீர வல்லாளன் பலவிதத் திருபணிகளைச் செய்தான். வீர வல்லாளன் திருவாசல் என அழைக்கப்படும் பெரிய ராஜ கோபுரத்தையும், மதில் சுவரையும் பல மண்டபங்களையும் கட்டினான். அவனது 9 கல்வெட்டுகாகள் ஆலயத்திலுள்ளன. அவை அவனது நீண்ட விருதுகளையும் பட்டங்களையும் அவனும் அவனது பட்டத்தரசியும் அளித்த தான தர்மங்களையும் எடுத்துக் கூறுகின்றன. -விளம்பரம்-
-விளம்பரம்-
வீர வல்லாளன் கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழி பேசும் பல பகுதிகளை இணைந்து ஆண்ட காலம் என்பது தைமூருக்குப் பின் வந்த துருக்கி வழி இஸ்லாமிய கொள்ளைக்கார முகலாயர்களின் கீல்ஜி வம்ச அரசன் அலாவுதீன் படைத்தளபதி அலியாகிய (திருநங்கை) மாலிக்காபூரின் தென்னிந்திய முகலாயப் படைஎடுப்புகள் துவங்கிய மிகவும் கொந்தளிப்பான கொடூரமான காலம். வடக்கே டில்லியில் இருந்த சுல்தான்களின் படைகள் தொடர்ந்து முஸ்லாம் படைகள் எனத் தாக்குதல் நடத்திய காலம். கோவில்களை அழித்து கோபுரங்களை இடித்து அதன் செல்வங்களைச் சூறையாடுவது தான் கோரி மாமூது கஜினி மாமூது துவங்கி நடத்தும் அவர்கள் வழி வழக்கம். முகலாய அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் திடீரென படை எடுத்து 1311 ஆம் ஆண்டில் வந்த போது கன்னட ஹெய்சால வீர வல்லாளன் தமிழ் மதுரை பாண்டியர் மாறவர்மன் குலசேகர பாண்டியனி இருமனைவிகளுக்கிடையே பிறந்த மகன்கள் வீரபாண்டியன்- சுந்தரபாண்டியன் சண்டையில் பங்கேற்கச் சென்றிருந்ததால். அவனது நகரம் சூறையாடப்பட்டது. பின்னர் ஒருவாறாக சமாதானத்தின் பேரில் அவருக்கு அலாவுதீன் கில்ஜி நாட்டைத் திருப்பி அளித்ததான். பின்னர் வந்த முகமது பின் துக்ளக், மற்றும் உடௌஜி என்பவரும் போர் தொடுத்தான் ஆறு மாத கால முற்றுகையின் போது, சமாதானம் செய்வதாகச் சொல்லி முன்வந்து, எதிர்பாராத தாக்குதல் நடத்தினார் சுல்தான். இது கண்ணனூர் குப்பத்தில் நடந்தது. இந்தத் தாக்குதலில் வீர வல்லாளன் சிறைப்பிடிக்கப்பட்டுச் சிரச் சேதம் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
வீர வல்லாளனைத் தீர்த்துக் கட்டிய மதுரை சுல்தானை விஜய நகரப் பேரரசின் குமார கம்பண்ணன் மதுரை வந்து நிர்மூலம் செய்தான். முகலாயர்களால் சூறையாடப்பட்டு 40 ஆண்டு காலத்துக்கு மூடிக்கிடந்த மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலையும் திறந்து வைத்தார். இதனை அவன் மனைவி கங்காதேவி மதுரா விஜயம் என சமஸ்கிரத மொழிக் காவியத்தில் எழுதி வைத்துள்ளார்.
தென்னாட்டில் முகலாய ஆதிக்கத்தை வரவிடாமல் விரட்டித் தடுத்தவர் குமார கம்பண்ணன். அங்கு சுல்தான் ஆட்சி போய், முகலாய ஆட்சி வந்து அட்டூழியங்களைத் தொடர்ந்த போது மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி உலகின் முதல் கொரில்லா யுத்தத்தை நடத்தி முகலாய ஆட்சியை நிலைகுலைய செய்தார்.
வல்லாளனின் புகழை கோவிலில் பல இடங்களில் உள்ள சிலைகளும், திருவண்ணாமலைக் கோபுரமும் என்றென்றும் நினைவுபடுத்தும். வல்லாளன் புகழை 14-ஆம் நூற்றாண்டுப் புலவர் எல்லப்ப நாயனார் பாடிய அருணாச்சல புராணத்திலும் காணலாம்.
பேரிகை மற்றும் சந்தனப்பள்ளியிலுள்ள வீர கம்பண்ணன் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இந்த நிலையில்
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் முகலாயர் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவந்துள்ளது. இயக்குநர் கே.மோகன் ஜி யின் இயக்கத்தில் வரலாற்று நூலை தழுவிய கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், "இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார் எனத் தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தக் கதை இன்னொரு 'பாகுபலி'. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திரச் சான்றுகளோடு அற்புதமாக எடுக்கப்பட்ட படம் இது. தேசிய உணர்வோடு பாரம்பரியத்தையும் இக் கதை சொல்லும். ராம நாமி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். நிறைய ஆராய்ச்சி செய்து மோகன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் படம் நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட மும்பையின் தமிழ் பேசும் தாரவி பகுதி மக்களின் கேப்டன் தமிழ்ச்செல்வனின் சகோதரர்ரான மோகன் பேசுகையில், "என் அண்ணன் தான் இந்தப் படத்தை பூஜை போட்டு ஆரம்பித்து வைத்தார், அதன் பிறகு படத்திற்கு வந்த சின்ன சின்ன பிரச்சனைகளை இயக்குநர் மோகன் ஜி சமாளித்து படத்தை வெற்றிகரமாக முடித்தார். நிதின் தேசாய் ஸ்டுடியோவில் என் அண்ணனும் மோகன் ஜிக்கு பக்கபலமாக இருந்தார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.
எடிட்டர் தேவராஜ் பேசுகையில், "இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. படம் நன்றாக வந்திருக்கிறது. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”. என்றார்.
கலை இயக்குநர் கமல், பேசுகையில் “நாங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்களை கதையில் கொண்டு வந்து பிரம்மாண்டமாக இயக்குநர் எடுத்திருக்கிறார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”. என்றார்.
ஒளிப்பதிவாளர் பிலிப் கே சுந்தர்,பேசுகையில் “இந்த வாய்ப்புக் கொடுத்த மோகன் சாருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ‘திரெளபதி2’ மூலம் வந்திருக்கிறேன். நன்றி”. என்றார்.
வசனகர்த்தா பத்மா சந்திரசேகர்,பேசுகையில் “கதைக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட காலக்கட்டம் கொஞ்சம் குழப்பமான காலக்கட்டம். அதற்கு முன்பும் பல போர்கள் நடந்திருந்தாலும் நம் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடந்தது இந்தக் காலக்கட்டத்தில் தான். இதில் வேலை பார்க்க வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் என் வசனத்தை பேசி நடித்த நடிகர்கள் என அனைவருக்கும் நன்றி”.என்றார்.
நடன அமைப்பாளர் தணிகா டோனி,பேசுகையில் “இது என்னுடைய முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. முதல் படம் என்பதால் கொஞ்சம் பயத்தோடு தான் சென்றேன். ஆனால், இயக்குநர் மிகவும் ஆதரவு கொடுத்தார். அனைவருக்கும் நன்றி”. என்றார்.
பாடலாசிரியர் செல்வ மீரா,பேசுகையில் “எம் கோனே பாடலுக்கு வாய்ப்புக கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. பாடலுக்கு கிடைத்த அதே ஆதரவு படத்திற்கும் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
’வீர வல்லாள மகாராஜா’ புத்தகத்தின் எழுத்தாளர் ஆறு அண்ணல் கண்டார், என்பவர் பேசுகையில் “என் கனவை மோகன் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். மோகனைப் போன்ற தன்னம்பிக்கையான ஒருவரை நான் பார்த்தது கிடையாது. அருணாச்சல புராணம் என்ற சமஸ்கிருத நூலை எள்ளப்பநாதர் தமிழ்ப்படுத்தினார். அதில் ஒன்றுதான் வல்லாள மகாராஜாவின் சரிதம். அவரது ஆட்சியில் தர்மம் மேலோங்கி இருந்தது. இருந்தாலும் தனக்கு பின்னால் நாடு என்னவாகும் என சிவ பெருமானுக்கு மனக்குறை இருந்தது. இதனால் சிவனடியாராக பூமிக்கு வல்லாள மகாராஜாவிடம் வருகிறார். சிவனடியாரின் மனக்குறையை வல்லாள மகாராஜா தீர்த்து வைக்க அவருக்கே பிள்ளையாகிறார் சிவன். இந்தக் கதையை இன்னும் விரிவாக படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள்” என்றார். இதுவே கதையின் கரு.
நடிகை ஜெயந்தி மாலா, பேசுகையில் “எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. வெற்றி பெறப் போகும் இந்தப் படத்தில் நான் விருதாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் எல்லோருமே அந்தந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும்”.என்றார்.
நடிகர் கணேஷ், பேசுகையில் “மோகன் ஜி சார் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இதுபோன்ற படம் வருவது அரிதானது. அதில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். நன்றி”.என்றார்
நடிகர் ஆல்பர்ட், பேசுகையில் “படத்தில் எனக்கு முக்கியமான ராஜா கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். என்னுடன் சேர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக கஷ்டப்பட்ட மேக்கப் மேனுக்கும் நன்றி. படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.என்றார்.
நடிகர் மாருதி, பேசுகையில் “இந்தப் படம் நான் நடிக்க முக்கிய காரணம் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி சார் தான். இந்தக் கதையை எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனை நம்பிக்கையோடு மோகன் ஜி எடுத்துள்ளார். மும்பையில் பல பெரிய படங்கள் எடுத்த ஸ்டுடியோவில் தான் இந்தப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. சிஜி இந்தப் படத்தில் அதிகம் இருக்காது. பெரும்பாலும் லைவ் லொகேஷனில் தான் எடுத்திருக்கிறோம். செட் வொர்க்கும் அற்புதமாக வந்துள்ளது. விஎஃப்எக்ஸ் பணியும் அற்புதம். படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். படம் பார்க்கும் போது அது உங்களுக்குத் தெரியும்”. என்றார்
நடிகர் அருணோதயன், பேசுகையில் “இந்தப் படத்திற்கு மோகன் ஜி கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் பணிபுரிந்த அனைவரின் உடல் மற்றும் மனதை புரொடக்ஷன்ஸ் நிறைவாக வைத்திருந்தது. என்னை ஸ்டண்ட் செய்ய வைத்த இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி. ரிச்சர்ட் சார் மிக எளிமையாக நடந்து கொண்டார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”. என்றார்.
நடிகர் தினேஷ் லம்பா, பேசுகையில் “இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இந்தப் படம் சொந்தமானது. படம் நன்றாக வந்துள்ளது”.
நடிகர் பரணி, “வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. என்னை வேறொரு ஜானரில் மோகன் ஜி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை எல்லோரும் பெரிதாக கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன். மோகன் ஜியின் கடுமையான உழைப்பிற்காகவே படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். நன்றி”.என்றார்
நடிகை திவி,பேசுகையில் “இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த மோகன் சாருக்கு நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி”.என்றார்
நடிகை தேவயாணி ஷர்மா, பேசுகையில் “இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த மோகன் ஜி சாருக்கு நன்றி. நான் மும்பையிலிருந்து வருகிறேன். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தை தியேட்டரில் பாருங்கள்”.என்றார்.
இயக்குநர் சரவண சுப்பையா, பேசுகையில் “மோகன் ஜியுடன் நான் ஏற்கனவே வேலை பார்த்திருக்கிறேன். கடுமையான உழைப்பாளி. இசையமைப்பாளர் ஜிப்ரானும் எனர்ஜிடிக்கான இசையை கொடுத்துள்ளார். உங்களை மிரள வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது. எல்லோரும் கடுமையாக இந்தப் படத்திற்காக உழைத்துள்ளனர். வாழ்த்துக்கள்”. என்றார்
நடிகர் சிராக் ஜானி, பேசுகையில் “தமிழ் கலாச்சாரத்துடன் இந்தப் படம் தொடர்புடையது. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி. யாருக்கும் அதிகம் தெரியாத வீர வல்லாள மகாராஜா பற்றி மோகன் படமாக எடுத்துள்ளார். தமிழ்நாடு என்பது பண்பாடு, அடையாளம், மண்ணுடைய வீரம், வரலாறு, அன்பு இதெல்லாம் உள்ளடக்கியது. இதுபோன்ற கதை மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. துக்ளக் கதாபாத்திரத்தை மிகவும் சின்சியராக நடித்திருக்கிறேன். ரிச்சர்ட் சாருக்கு நன்றி. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். நல்ல கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதும் வரவேற்பு கொடுப்பீர்கள் என நம்பிக்கை உள்ளது” என்றார்.
இயக்குநர் முத்தையா, பேசுகையில் “’திரெளபதி2’ மோகனின் ஐந்தாவது படம். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இது முக்கியமான படம். பெரும் வெற்றி பெற்று அனைவருக்கும் படம் பிடித்தமானதாக வர வாழ்த்துக்கள். நன்றி”.
நடிகர் வேல ராமமூர்த்தி, பேசுகையில் “மோகன் ஜி சினிமா துறைக்கு வந்ததிலிருந்து அவரது படங்களில் எப்போது நடிப்போம் என்ற தீ எனக்குள் இருந்தது. ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் வாய்ப்பு வந்தது. ஆனால், அது கொரோனா நேரம் என்பதால் நடிக்க முடியாமல் போனது. நான் சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் நடித்திருக்கும் முதல் சரித்திரப் படம் இது. துணிச்சலாக சரித்திர வரலாற்று படத்தை மோகன் ஜி எடுத்துள்ளார். பல எதிர்ப்புகள் வந்தபோதிலும் அதை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு இந்தப் படத்தை முடித்துள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த வருடத்தின் முக்கியமான படத்தில் சிறப்பான இசையை ஜிப்ரான் கொடுத்துள்ளார். இது ‘திரெளபதி’ பொங்கல். திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீர வல்லாள தேவராயரின் சரித்திரக் கதை இது. ‘திரெளபதி 2’ மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் நட்டி, பேசுகையில் “இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தக் கதை மூலமாக வரலாற்றைத் தெரிந்து கொண்டேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். குறைந்த நாட்களில் இந்தப் படத்தை முடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஜிப்ரான் இசையில் எம் கோனே பாடல் அருமை. படத்திற்காக பிரம்மாண்டமாக செலவழித்திருக்கிறார் தயாரிப்பாளர். இந்தப் படத்திற்காக ரிச்சர்ட் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. படத்தின் வில்லன்கள் எல்லோரும் நேரில் பார்க்க ஹீரோ மாதிரி உள்ளார்கள். ஹீரோயின்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நன்றி”. என்றார்
இசையமைப்பாளர் ஜிப்ரான், பேசுகையில் ”ஒரு படத்தின் இயக்குநருடன் பயணம் செய்யும் அந்த நேரம் பயனுள்ளதாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது மோகன் ஜியுடன் நன்றாக செட் ஆனது. அவருக்குள் ஒரு குழந்தை உள்ளது. தெளிவும் நம்பிக்கையும் அவரிடம் நிறைய உள்ளது. இந்தப் படத்தில் எனக்கு நிறைய புது அனுபவங்கள் கிடைத்தது. எம் கோனே போன்ற ஒரு மெலோடி பாடலை ஓகே செய்ததற்கு நன்றி. ’திரெளபதி’ என்பதற்கு பின்னால் நிறைய சர்ச்சைகளும் இருந்தது. ஆனால், அதை எல்லாம் தாண்டி அவசியம் சொல்லப்பட வேண்டிய இந்த வரலாற்றை எடுக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு நன்றி”. என்றார்.
நடிகை ரக்ஷனா இந்துசூடன், பேசுகையில் “நெருப்பிலிருந்து பிறந்தவள் திரெளபதி. அந்தப் பெயரை ‘திரெளபதி 2’ படத்தில் எனக்குக் கொடுத்த இயக்குநர் மோகன் சாருக்கு நன்றி. இந்தக் கதை 14 ஆம் நூற்றாண்டில் நடந்தது. என்னை நம்பிய மோகன் சாருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்திற்குள் வருவதும் வந்த பின்பு அதை விட்டு வெளியே போவதும் எனக்கு கடினமான ஒன்றாகத் தான் இருந்தது. நீங்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் ரிச்சர்ட் ரிஷி சாருக்கும் நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளனர். இந்தக் கதாபாத்திரத்திற்காக எடை கூடியுள்ளேன். இயக்குநருடைய தெளிவான திட்டமிடல் மூலம் தான் படத்தை இவ்வளவு குறைந்த நாட்களுக்குள் முடிக்க முடிந்தது. பல தடைகளைத் தாண்டி பொங்கலுக்கு தமிழ் வரலாற்றை பற்றிய படமாக ‘திரெளபதி 2’ திரையரங்குகளில் வரவிருக்கிறது. உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை”. என்றார்
நடிகர் ரிச்சர்ட் ரிஷி, பேசுகையில் “இந்தப் படத்திற்கு சிறப்பான உழைப்பை நாங்கள் கொடுத்துள்ளோம். கதையை நம்பிய தயாரிப்பாளருக்கும் கடின உழைப்பு கொடுத்த மோகனுக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்” என்றார். .
தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி, பேசுகையில் “பல வருடங்களாக கதை எடுக்கலாம் என்ற யோசனையில் இருந்தபோது சரியான கதையோடு மோகன் சார் வந்தார். 31 நாட்களில் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் மோகன். காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை படப்பிடிப்பு நடக்கும். எங்களுக்கு ஆதரவு கொடுத்த ஊடகங்களுக்கும் நன்றி”. என்றார்.
இயக்குநர் மோகன் ஜி, “பீரியட் படம் இது என்பதால் முதல் படம் போலவே சின்சியராக வேலை பார்த்தேன். அதற்கு பெரும்பலமாக இருந்த தொழில்நுட்பக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. அவர்கள் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் 31 நாட்களுக்குள் படம் எடுப்பது சாத்தியமே இல்லை. ரிச்சர்ட் சார் இல்லாமல் ‘திரெளபதி2’ இல்லை. இந்தப் படத்திற்காக இன்னும் ஒரு ரூபாய் சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. குதிரைப் பயிற்சி, கத்திச் சண்டை என ஒரு வருடமாக இந்தப் படத்திற்காக ஒரு நாளில் 16 மணி நேரம் உழைத்துள்ளார். நான் சொன்ன பட்ஜெட்டை விட கொஞ்சம் அதிகமாய் போயிருந்தாலும் கதை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி சாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி. படத்தின் முக்கியமான நபர் ஒளிப்பதிவாளர் சுந்தர். நான் எதிர்பார்த்ததை போலவே சிறப்பான தரமான பணியைக் கொடுத்துள்ளார். அவருக்கு இணையான உழைப்பை கலை இயக்குநர் கொடுத்துள்ளார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றால் பலருக்கும் உந்துதலாக இருக்கும்.
25 ஹீரோயின்களை பார்த்த பிறகு ரக்ஷனாவை தேர்ந்தெடுத்தேன். மிகவும் தைரியமானவர். திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பரணி அண்ணனுடன் முதல் படத்திலேயே வேலை செய்ய வேண்டியது. ஐந்தாவது படத்தில்தான் அது கைகூடியுள்ளது. அவர் பேசும் வசனம் படத்தில் முக்கியமானது. சிராக் ஜானி சார், தினேஷ் லம்பா சார் இரண்டு பேரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேரின் நடிப்பும் நிச்சயம் பேசப்படும். மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கும் தமிழ் தெரியாது என்றாலும் புரிந்து கொண்டு நடித்துள்ளனர். நட்டி அண்ணனுக்கு சிறப்பான உடல்மொழி உள்ளது. அவருடைய கேரியரில் இந்த கதாபாத்திரம் நிச்சயம் மணிமகுடமாக இருக்கும். வேல ராமமூர்த்தி சாரின் நடிப்பும் குரலும் சிங்கம் கர்ஜிப்பது போல இருக்கும். தென்மாவட்டத்தைச் சார்ந்த நல்ல கதை அவரிடம் இருந்து எனக்கு வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
எழுத்தாளர் பத்மாவை பெண் சாண்டில்யன் என சொல்வார்கள். நிறைய புது தமிழ் வார்த்தைகளை இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அருமையான பல கதைகள் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் அவருக்கு உண்டு. அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலையால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு கதை எடுப்பது தான் முதலில் எங்கள் திட்டம். அந்தச் சமயத்தில் காசி சென்றிருந்தேன். நான் சிவபக்தர். அங்கு ஒரு கோயிலுக்குச் சென்றபோது அங்கிருந்த நந்தி, நம் இஸ்லாமிய மக்கள் வழிபடும் ஞானவாபி மசூதியை பார்த்தார் போல இருந்தது. அதைப் பற்றி விசாரித்தபோது முகவாய கடைசி அரசன் ஒளரங்கசீப் அங்கிருந்த கோயிலை நோக்கி மசூதி உருவாக்கிய வரலாறு தெரியவந்தது. அது தமிழ்நாட்டுடனும் கனெக்ட் ஆகிறது. அதைப்பற்றி விரிவாகப் படித்தவுடன் இதுதான் நான் பண்ண வேண்டிய படம் என முடிவு செய்தேன். ’சாவா’ படம் பார்த்தபிறகு என் நம்பிக்கை இன்னும் அதிகமானது. ஜிப்ரான் சார் இந்தப் படத்திற்குள் வந்ததும் இந்தப் படம் இன்னும் பெரியதானது. எம் கோனே பாடல் இப்போது பத்மலதா மேடம் குரலில் தான் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அவருக்கு நன்றி. பல இடங்களில் அவரது இசை உணர்வுப்பூர்வமாக உள்ளது.
நம்முடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்திய இஸ்லாமியர்களை இந்தப் படம் எந்தவகையிலும் காயப்படுத்தவில்லை. அவர்களின் தொடக்கம் எது என்று இந்தப் படம் புரிய வைக்கும். மற்றபடி கமர்ஷியலான படம் தான் இது. வீரபாண்டிய கட்டபொம்பன், சிறை, மதரசாப்பட்டிணம் போன்ற படங்களில் பிரிட்டிஷ்காரர்களை காட்டும் போது மத, அடையாளங்கள் இல்லாமல் அவர்களை பிரிட்டிஷ்காரர்களாக மட்டுமே எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல இந்தப் படத்தை துருக்கியில் இருந்து நம் நாட்டைக் கைப்பற்ற வந்த அந்நியர்களாக எண்ணித்தான் கதையை நான் எழுதியுள்ளேன். அவர்களின் வாழ்க்கையை மத அடையாளங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்காதீர்கள். இந்த நாட்டை அடிமைப்படுத்த துருக்கியிலிருந்து படை எடுத்து வந்தவர்கள் பற்றிய கதை. மூன்று வில்லன்கள் படத்தில் உள்ளனர். ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. நல்லபடியாக பொங்கலுக்கு படம் வெளியாகிறது. என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு இதுவரை நஷ்டம் வந்ததில்லை. வீர வல்லாள மகாராஜா வரலாற்றை வெளியே கொண்டு வருவது எனக்கு பெருமை. உங்கள் அனைவரையும் ‘திரெளபதி 2’ திருப்திப்படுத்தும்” என்றார். இந்த நிலையில் மூன்றாம் வீர வல்லாளன் (ஆட்சிக்காலம் 1291-1343) கன்னட போசாளர்களில் கடைசி மாமன்னனாவான். இவனது ஆட்சியின் போது நாட்டின் வடக்கு, தெற்கு கிளைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, (இது தற்கால கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதி) அலேபேடுவில் (அல்லது துவாரகாசமுத்திரம்) பகுதியிலிருந்து ஆட்சிசெய்யப்பட்டது. இவனது ஆட்சியின் போது, பல போர்களைத் தேவகிரி யாதவர்கள் ,வாராங்கல் காக்காத்தியர் மதுரை பாண்டியர்களுடனும், தென்னிந்திய சிற்றரசர்களுக்கு எதிராகவும் நடத்தினான்.
பொது ஆண்டு.1343 ஆம் ஆண்டில் இவனது மரணத்துக்குப் பின், தென் இந்தியாவில் ஒரு புதிய ஹிந்து மதப் பேரரசாக விஜயநகரப் பேரரசு தோன்றி வளர்ந்தது.அது 1303 ஆம் ஆண்டில், மூன்றாம் வீர வல்லாளன் தனக்கு அடங்காமலிருந்த துளு நாட்டு அளுப்பர்களை அடக்கினான். தேவகிரி யாதவர்களை ஒடுக்க அவர்கள் மீது பொது ஆண்டு.1305 ல் படையெடுத்து ஹொல்லல்கெரேயிலிருந்து அவர்களை லக்குண்டி வரை புறமுதுகிட்டு பின்வாங்கச் செய்தான்.
தமிழ்பேசும் மதுரை பாண்டிய நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற வீர பாண்டியனுக்கும், சுந்தர பாண்டியனுக்கும் இடையே நடந்த வாரிசுப் போட்டியில் சுந்தர பாண்டியனை ஆதரித்து அவனை மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என அரசனாக்கி தனது ஆதிக்கத்தைத் மதுரை பாணடிய நாட்டில் நிலைநிறுத்திக் கொண்டான்.
டில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் ஆணையின்படி மாலிக் கபூர் தென்னிந்தியாமீது படையெடுத்து வந்தான். 1311 ஆம் ஆண்டில் கனனட போசாள நாட்டின் துவார சமுத்திரத்தை (அலேபீடு) முற்றுகையிட்டான். ஆனால் வீரவல்லாளன் மாலிக் கபூரின் பெரும்படைகளுக்கு அஞ்சிப் போரிடாது, மாலிக் கபூருடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதன்படி துவாரஹ சமுத்திர ஹெய்சால அரசின் கருவூலத்திலிருந்த அனைத்துச் செல்வங்களையும் மாலிக் கபூர் கொள்ளையடித்துக் கைப்பற்றினான். மேலும் போசாள நாடு, டில்லி சுல்தானகத்திற்கு அடங்கி, ஆண்டுதோறும் பெருந்தொகையை கப்பமாகக் கட்டவேண்டும் என உடன்படிக்கை ஏற்பட்டது. பொது ஆண்டு 1318 ல் தேவகிரி டில்லி சுல்தானால் ஆக்கிரமிக்கப்பட்டதன் மூலம், யாதவ ராஜ்யம் முற்றிலும் அழிந்து விட்டது. அங்கு தில்லி சுல்தான் முஹம்மது பின் துக்ளக் ஆட்சி நடந்து வந்தது. மூன்றாம் வீர வல்லாளன் டில்லிக்குத் திரை செலுத்த மறுத்துத் தனது முந்தைய ஒப்பந்தத்திலிருந்து விலகினான். இதனால் முஹம்மது பின் துக்ளக் பொது ஆண்டு 1327 ல் தெற்கில் மீண்டும் ஒரு படையை அனுப்பினான் அலேபீடுவை இரண்டாவது முறையாகத் டில்லி படைகள் கொள்ளையிட்டன. இதனால் மூன்றாம் வீர வல்லாளன் பின்வாங்கிச் சென்று திருவண்ணாமலையிலிருந்து தனது எதிர்ப்பைத் தொடர்ந்தான். பொது ஆண்டு 1336 வாக்கில் தென்னிந்தியாவின் கனனட போசாளர்களைத்தவிர அனைத்து ஹிந்து அரசுகளும் டில்லியால் தோற்கடிக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகள் டில்லி சுல்தானகத்தால் இணைத்துக் கொள்ளப்பட்டது. மதுரையும் சுல்தான் ஆட்சியில் பொது ஆண்டு 1335- காலகட்டத்திலிருந்தது. சுல்தானியர்கள் படையெடுப்பை எதிர்கொள்ளும் நோக்கத்துடன், மூன்றாம் வீர வல்லாளன் துங்கபத்ரை ஆற்றங்கரையில் ஹொசபட்டணா எனும் இரண்டாவது தலைநகரை நிறுவினான். இதுவே பின்னர் வந்த விஜயநகரம் என்ற பெயருடன் விஜயநகர பேரரசின் தலைநகரமாகியது. பொது ஆண்டு 1342-43 ல், போசாளர்களின் வருங்காலத்தை முடிவுசெய்யும் வகையில் கடுமையான போரை மூன்றாம் வீர வல்லாளனுக்கும் மதுரை சுல்தானகத்தின் சுல்தான் கியாஸுதின் ஆகியோருக்கிடையில் நடைபெற்றது. முதலில் வெற்றி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் குப்பம் கோட்டையின் முற்றுகையின் பொது ஆண்டு 1343 போது வீர வல்லாளன் சுல்தானின் படைகளால் சிறைபிடிக்கப்பட்டான். இதன் பிறகு வல்லாலனைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவனது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தனர். கன்னட போசாள மன்னன் வீர வள்ளாளன் சுல்தான்களால் கொல்லப்பட்டதால் அவரது மகன் நான்காம் வீர வல்லாளனுடன் ஹெய்சாலர் அல்லது போசாளர்களின் ஆட்சி பொது ஆண்டு .1346 டன் முடிவுக்கு வந்தது. மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீர வல்லாளனின் படைத்தலைவனாக இருந்தவன்.மாதப்ப தண்டநாயக்கன், மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் டணாயக்கன் கோட்டையை நிறுவினான். மூன்றாம் நரசிம்மன் (பொ.ஆ. 1263-1292) ல் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் அருள்மிகு சோமேஷ்வரன் கோவிலைக் கட்டினான்.பவானிசாகர் அணைப்பகுதியில் மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று எனலாம். ஏனெனில், சோமேசுவரர் கோயில் என்னும் பெயருடைய கோயில் நீரில் மூழ்கிய செய்தி பவானிசாகர் அணைப்பகுதிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் அடிப்படையில், டணாயக்கன் கோட்டையை மாதப்ப தண்டநாயக்கன் கட்டும்போதே அப்பகுதியில் சோமேசுவரர் கோயில் இருந்துள்ளது என்பது தெரிகிறது மதுரை சுல்தான்களுக்கும் மூன்றாம் வீர வல்லாலனுக்கும் நிகழ்ந்த போரை மையமாகக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் திருவரங்கன் உலா என்ற புதினத்தை எழுதியுள்ளார். வீர வல்லாளன் கன்னடர் சரி,
திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே உள்ளவர்களுக்கு கன்னடர் என்பது வேறு நாடு போன்ற நிலை தான்
திருவண்ணாமலை செங்கம் தருமபுரி கிருஷ்ணகிரி காரர்களுக்கு கன்னடம் உறவு நிலை மாதிரி தான்.
கன்னியாகுமரி காரர்களுக்கு கேரளா மாதிரி அதுசரி மூன்றாம் குலோத்துங்க சோழனின் மகளை மாற்று இன காடவன் கோப்பெருஞ்சிங்கன் மணந்தான்
இதனால் மூன்றாம் குலோத்துங்க சோழன் மகன் மூன்றாம் இராஜராஜன் காடவனுக்கு மைத்துனன் ஆனான்
இந்த காடவனின் மைத்துனனான மூன்றாம் இராஜராஜன் ஹெய்சாலர் அல்லது போசளன் இரண்டாம் வல்லாளனின் மகளை மணந்தான்
தன் மைத்துனனுடன் ஆன சண்டையில், காடவன் - தன் மைத்துனன் மூன்றாம் இராஜராஜனை சேந்தமங்கலத்தில் சிறை வைத்த போது
சோழனின் மாமனார் ஹெய்சால அல்லது போசளன் இரண்டாம் வல்லாளன் காடவனோடு போரிட்டு தன் மாப்பிள்ளையை மீட்டான் அதாவது சோழன் காடவன்(பல்லவன்) ஹெய்சாலர் அல்லது போசளன் மூவருமே சம்மந்திகள் தான்
அதாவது சத்திரியர் விவாக உறவு ஆனால் தற்போது கன்னட வீர வல்லாளனை திருவண்ணாமலை வன்னியர்கள் மற்றும் அழகர்கோவில் சுற்று வட்டாரப் பகுதி வாழும் தன்னாட்சி நாட்டுக் கள்ளர்கள் உறவினர் எனக் கூறி போராட்டம் வேறு நடத்தும் நிலையில் ஒவ்வொரு இனத்தின் வரலாற்று மூலம் அறிந்த பின்னர் தான் போராட்டம் மற்றும் சண்டைக்கு வரவேண்டும். இது பப்ளிக் ஜஸ்டிஸ் கருத்து. இந்தத் திரைப்படம் குறித்து இயக்குனர் கே.மோகன் ஜி கூறியபோது:-2020-இம் ஆண்டில் வெளியான 'திரௌபதி' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஏகோபித்த ஆதரவை தொடர்ந்து 'திரவுபதி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினோம்.
இது 14-ஆம் நூற்றாண்டின் மறைக்கப் பட்ட ரத்த சரித்திரத்தை உள்ளடக்கிய கதை. ஹிந்துஸ்தானின் கலாசாரப் பரப்பில் சுல்தானியர்கள் நிகழ்த்திய ஒரு தீராத அதிர்வைச் சொல்லும் படைப்பு இது. துருக்கியர் படையெடுப்பை எதிர்த்த மாவீரர்களின் தியாகமும், வீரமும் கலந்த காவியமும் கூட.
திருவண்ணாமலையத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி புரிந்த ஹொய்சாளப் பேரரசர் மூன்றாம் வல்லாளரை மையப்ப டுத்தி நகர்கிறது. பேரரசருக்கு விசுவாச மான சிற்றரசராக விளங்கிய சேந்தமங்க லம் காடவராயரின் அசைக்க முடியாத நம்பிக்கையும், வீரமுமே இப்படத்தின் கரு. ஒரு மன்னனுக்கும், சிற்றரசனுக்கும் இடையிலான அந்த உன்னத விசுவாசமே படத்தின் மூலக்கதை.
14-ஆம் நூற்றாண்டில் துருக்கியர்கள் ஹிந்துஸ்தானத்தின் மீது படையெடுத்து வந்தபோது, தென்னிந்தியாவின் கலாச்சாரம், வாழ்வியல் மற்றும் ஆன்மீகக் கட்ட மைப்புகள் எதிர்கொண்ட சவால்களையும் பாதிப்புகளையும் படம் விரிவாகவும் எதார்த்தமாகவும் பேசுகிறது. வரலாற்றின் கசப்பான பக்கங்களைக் கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அணுகாமல், மறைக்கப்பட்ட உண்மைகளை இன்றைய தலைமுறைக்குத் தெளிவுபடுத்தும் ஒரு வரலாற்றுப் பாலமாக இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது.
படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற சில வசனங்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக 'எங்கிருந்தோ வந்த மக்கள் நம்மை ஆள நாம் தான் காரணம்' என்ற வசனம் நமக்குள் இருந்த பிரிவினையை சொல்லாமல் சொல்கிறது. அதேபோல, 'ஒரு தேசம் மேன்மைப்படுவது ஆண்களால் மட்டுமல்ல, பெண்கள் செய்யும் தியாகத்தாலும் தான்', 'போற்றப்பட வேண் டியது வீரம் மட்டுமல்ல, பெண்களின்
தியாகம்மும் கூட' என்பன போன்ற வசனங்கள் பெண்மையின் தீரத்தையும் எடுத் துக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதே வேளை ஒரு வரலாற்றுச் சுவடுகளை சுவை படக் கொடுத்திருக்கிறோம்.
வித்தியாசமான நடிப்பால் வியப்பை அள்ளித்தரும் ரிச்சர்ட் ரிஷி, இந்தமுறை யும் தனது தனித்துவ நடிப்பால் கவர்ந்தி ருக்கிறார். படத்துக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு சொல்லிமாளாது. முன் னோட்ட பணிகளுக்காகவே பல மாதங்கள் அவர் செலவழித்தார். அவரது திரைப் பயணத்தில் இந்த படம் மைல்கல் படமாக இருக்கும் என்று அடித்து சொல்வேன். அவருக்கு அடுத்தபடியாக நட்டி நட்ராஜ் ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கி றார். மூன்றாம் வல்லாளராக நட்டி நட்ராஜ் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.'
கதாநாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்துள்ளார். 'திரௌபதி' பற்றி அவர் பேசும் வசனங்கள் சாட்டையடியாக அமை யும்.
பிலிப் ஆர்.சுந்தரின் ஒளிப்பதிவும், ஜிப் ரானின் இசையும் இந்த படத்துக்கு மிகப் பெரிய பலம் எனலாம். படத்துக்கு இருவ ருமே பாலம் அமைத்துக் கொடுத்துள்ள னர். ஒளிப்பதிவும், இசையும் படத்துடன்
பார்வையாளர்களை நிச்சயம் ஒன்றச் செய்யும். விஷூவலாக பல ஆச்சரியங் களும், சிலிர்ப்பான விஷயங்களும் கொடுத்துள்ளோம். குறிப்பாக போர், சூழ்ச்சிகளை மிக எதார்த்தமாக, அதே வேளை சமரசமின்றி சொல்லியுள்ளோம். படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் அந்த காலத்துக்கே சென்று வந்தது போல வும், அந்தக் கால மன்னர்களைக் கண் முன்னே பார்ப்பது போலவும் உணர்வார் கள் என்று அடித்து சொல்கிறோம்.
விசுவாசம், ஒற்றுமை மற்றும் மண்ணின்
மீதான பற்று ஆகிய உயரிய விழுமியங் களை பெரும் எதிர்பார்ப்பாக சுமந்து வரும் ‘திரவுபதி - 2', வருகிற ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் உலாவருகிறது.
தரமான, உண்மையான, எதார்த்தமான படைப்புகளுக்கு நிச்சயம் ரசிகர்களின் ஆதரவு உண்டு. அந்தவகையில் 'திரவுபதி - 2' படத்தை மிகுந்த நம்பிக்கையுடன் ரசிகர்களிடம் ஒப்படைக்கிறோம் என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்தார்.
ஆறு அண்ணல் கண்டர் எழுதிய ‘திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா வரலாறு’ எனும் புத்தகத்தின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என டிஸ்க்ளைமர் போடப்பட்டுள்ளது. பின்பு படத்தின் ட்ரெய்லர் ஆரம்பிக்க, தொடக்கத்தில், ‘நெருப்பில் இருந்து பிறந்தவள் அந்த திரௌபதி, அந்த தீச்சுடரின் பெயரை எனக்கு சூடியதன் காரணத்தை இன்று நான் அறிந்தேன்’ என ரக்ஷனா இந்துசூடன் மக்களிடம் சொல்ல பின்பு நாயகன் கதாபாத்திர அறிமுகம் காட்டப்படுகிறது. வீர சிம்ம காடவராயன் என்ற கதாப்பாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி வருகிறார். இதை தொடர்ந்து ‘இந்துஸ்தானின் கலாச்சாரப் பரப்பில் சுல்தானியர்கள் நிகழ்த்திய ஒரு தீராத அதிர்வு’ என்ற வாசகங்கள் வர, பின்பு சுல்தானிய மன்னர்கள் அவர்களின் நம்பிக்கையை இந்து மக்களிடம் திணிப்பதும் போலவும் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நபர்களை கொலை செய்வது போலவும் காட்சிகள் வருகிறது. பின்பு இரு மன்னர்களிடையே நடக்கும் மோதலில் யார் இறுதியில் வென்றார்கள் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த போராட்டத்தில் பெண்களின் தியாகம் முக்கிய பங்கு வகிப்பது போலவும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதை குறிக்கும் வகையில் “போற்றப்பட்ட வேண்டியது வீரம் மட்டுமல்ல... பெண்களின் தியாகமும் தான்” என்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளது. மதுரா விஜயம் 14 ஆம் நூற்றாண்டில் கங்கதேவியால் எழுதப்பட்ட ஒரு சமஸ்கிருதக் கவிதை நூல். வீர கம்பராய சரித்திரம் எனப்படுகிறது. கங்கதேவியின் கணவர் விஜயநகரப் பேரரசின் இளவரசர் குமாரக் கம்பண்ணர் தென்னிந்தியப் படையெடுத்து முகலாயரிடம் அடிமைப்பட்ட மதுரை பாண்டிய நாட்டு முகலாய சுல்தானகத்தை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றுவதை விவரிக்கும் நூலாகும்.அக்கினியில் பிறந்த திரௌபதிக்குப் பிறகு அட்சயபாத்திரம் கிடைத்த மணிமேகலை என வரலாறு பேசினாலும் திரௌபதி ஆலயங்கள் விழுப்புரம் பகுதியிலும் மேலூர் பகுதியிலும் மட்டுமே உள்ளது, இங்கு குறிப்பிடத்தக்கது ஹோய்சாளர்கள்:
தற்போதுள்ள கர்நாடகா நிலபரப்பை 10 முதல் 14 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டவர்களின் பூர்வீகம் கர்நாடகத்தின் மலை நாடு.12 ஆம் நூற்றாண்டு வரை மேற்கு சாளுக்கியர் என்னும் கல்யாணி சாளுக்கியர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து பிறகு தங்களை சுதந்திர நாடாக மாற்றி கொண்டவர்கள்.பேலூரில் உள்ள சென்னக்கேசவா கோவிலைப் பார்த்த பிறகு பலருக்கும் வரும் ஆச்சரியம் ஹொய்சாளர்கள் எதில் சாதித்தார்களோ இல்லையோ! நிச்சயமாக கட்டிடக்கலையில் சாதித்தனர். கோவில் முழுக்க சிற்பங்கள்.எங்கு நோக்கினும் அனைத்து சிலையிலும் உயிர் இருக்கும். சிற்பியின் பொறுமையும் திறமையையும் ஒவ்வொரு பாண்டிய, சோழப் பேரரசுகளிடையே ஆதிக்கப் போட்டி நிலவி வந்த காலத்தில், தஞ்சாவூர் ஆண்ட பிற்காலச் சோழர்களில் இரண்டாம் இராஜராஜன் காலத்தில் மதுரை ஆண்ட பாண்டியர்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள் இந்தத் தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள கன்னட நாட்டின் துவாரஹ சமுத்திரத்தில் ஆட்சிபுரிந்த ஹொய்சாளப் பேரரசை நாடினார்கள்.
முதலில் பொது ஆண்டு 1219-ல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்த பொன்னமராவதி யுத்தம் மூன்றாம் இராசராசசோழனை வென்று மீண்டும் அவர் கேட்டதற்கு இணங்க நாட்டை அவர் வசமே ஒப்படைத்துவிட்டு வந்தார். கி.பி. 1231-ல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மீண்டும் சோழ நாட்டின் மீது போர் தொடுத்து மூன்றாம் இராசராசசோழனை வென்று அவரைச் சேந்தமங்கலம் கோட்டையில் சிறை வைத்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். இதுவே வரலாறு.இந்திய வரலாற்றில் 1990 ஆம் ஆண்டு காலத்திற்கு பின்னர் உண்மை வரலாறு கல்வித்திட்டத்திலிருந்து நீக்கம் செய்த நிலை உள்ளதால் யார் வேண்டுமானாலும் வரலாற்று உண்மை அறியாமல் எந்த மன்னர் குலமும் எங்கள் உறவே என அரசியல் செயயும் நிலையை சமீப காலமாக சமூக வலைதளங்களில் காணும் நிலை உள்ளது, உண்மையான மன்னர் ஆட்சிக் காலத்தில் வீட்டுக்கு வெள்ளை அடிக்கவும், திண்ணை வைத்துக் கட்டவும், மன்னர் பெயரை மற்றவர்கள் வைக்கவும் மேல்சட்டை அணிவதற்கும் ஆளும் மன்னரிடமிருந்து அனுமதி வேண்டும். அப்படி இருக்க தற்போது கர்நாடக போசாளர்கள் எனும் ஹெய்சாலர் மனனர் மூன்றாம் வீர வல்லாலனை ஏதோ அரைகுறை வரலாறு படித்த ஒருவர் கூறுவதால் ஒருபக்கம் வன்னியர்கள் (படையாச்சி, கவுன்டர், நாயக்கர் ) அதே போல் தன்னாட்சி நாட்டு அழகர் கோவில் பகுதி கள்ளர்கள் என உரிமை கோரும் நிலையில் யாரும் அதற்கான ஆவணங்கள் கொடுக்க வில்லை ஆய்வுகளும் நடத்தவில்லை, ஆனால் மேலூர் பகுதியில் திரௌபதி 2 திரைப்படம் திரையிட தியேட்டர் தரவில்லை. இது சரியா என்பதை சிந்திக்க வேண்டிய காலமிது.



























































கருத்துகள்