முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆவுடையார்கோவில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயில் திருவாதிரைத் தேரோட்டம்

ஆவுடையார்கோவில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயில்           



"கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு

குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்

ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்

சோனாட்டிற் கெல்லையெனச் சொல் என்றும்

வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்

தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார

ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்

பாண்டிநாட்டெல்லைப் பதி" என்றும்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமாயணத்தில் குறிப்பிடும் ஸ்தலம்.




இங்கு மார்கழித் திருவாதிரைப் பெருவிழாவில் எட்டாம் நாள் மார்கழி 16 ஆம் நாள் 31டிசம்பர் 2025 அன்று புதன்கிழமை மாலை வெள்ளிக் குதிரை வாகனத்தில் 

மதுரை பெருநன் மாநகர் தன்னில் குதிரை சேவகன் காட்சியு,ம் ஒன்பதாம் நாள் திருவிழா இன்று மார்கழி மாதம் 17 ஆங்கிலப் புதுவருடம் 01ஜனவரி 2026 வியாழக்கிழமை 

காலை மாணிக்கவாசகப் பெருமான் திருத்தேரில் பவனி

காலை மணி 5.00க்கு மேல் 5.57 மணிக்குள் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் 

காலை 10.00 மணிக்கு தேர் வடம்பிடித்தல். இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருவாரூர், திருநெல்வேலி, கானாப்பேர் எனும் காளையார்கோவில், திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரியத் தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.

50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.

50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர்

இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட கற்சிலைகள் இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும்போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும்.

இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும். ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை) இங்கு லிங்கத்திற்கு பதிலாக, ஒரு சதுர மேடை (ஆவுடை) வடிவில் சிவன் அருள்பாலிக்கிறார், இது பிற கோயில்களில் இருந்து இதை வேறுபடுத்துகிறது.






மாணிக்கவாசகர்: திருவாசகத்தைப் பாடிய மாணிக்கவாசகப் பெருமான் இங்குதான் தங்கி, திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் இயற்றினார்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

வரலாற்றுப் பெருமை: சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோயில், சிற்பக்கலைக்கும் பெயர் பெற்றது.

ஆன்மீக முக்கியத்துவம்: பிறவிக் கடலைக் கடந்து வீடுபேறு அடைய உதவும் பெரும் துறையாக இத்தலம் கருதப்படுகிறது.ஆவுடையார் கோயிலை பூதகணங்கள் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.நரியைப் பரியாக்கிய ஸ்தல புராணத்தின் பெருமையாகும். ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தான் தோன்றும்.


குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளைநிறம் இருக்கும். நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறமிருக்கும். இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறமிருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும்.

சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் உள்ளன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.கோயிலில் ஆனந்தசபை, தேவசபை, கனகசபை, சிற்சபை, நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகளுடன்




கருவறைப் பகுதியை மட்டும் பாண்டிய மன்னரின் மந்திரி பிரதானி மாணிக்கவாசகப் பெருமான் குதிரை வாங்கி வரக் கொடுத்த பணத்தை வைத்து கோவில் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன் கனவு என்கிற சரித்திர நாவல்)மற்றும் சோழ மன்னர்கள், தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், இராமனாதபுரம் சேதுபதி மன்னர்கள், சிவகங்கை மன்னர், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள், பாலைவன ஜமீன்தார், ஆகியோரால் ஆறு மண்டபங்களை இணைத்துக் கோவிலாக கட்டப்பட்ட ஈசன் அருள் தரும்

உருவமற்ற அருவம் ஆன கோயில், திருவிளையாடல் புராண ஸ்தலம்.       



ஆவுடையார் கோயில், திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும், ஆதீனத்தின் குருமகா சந்நிதானங்களின் அருளாணையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.  


 11 மந்திரங்கள், 81 பதங்கள், 51 அட்சரங்கள், 224 புவனங்கள், 36 தத்துவங்கள், 5 கலைகள், 6 வாசல்கள், ஆறு சபைகள், நவத் துவாரங்களுடன் ஆலயம் கருவறையில் ஆவுடையார் எனும் பீடம் அதன் மேலே குவளை சாத்தி அலங்காரம் செய்யப்பட்ட ஆவுடையாரின் பின்புறத்தில் 27 நட்சத்திர பீடங்கள், அதற்கு மேல் சூரியன், சந்திரன், அக்னி தீபங்கள் மூன்றும் ஒளி வீச.




சுவாமி முன்புறமுள்ள அமுத மண்டபத்தில் படைக்கல் அமைந்துள்ளது. அதில் புழுங்கல் அரிசி அன்னம் ஆவி பரப்பி ஆவியுடை இறைவனை ஆராதிக்கிறது. முளைக்கீரை, பாகற்காயும் அதைச்சுற்றி தேன்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவை வைத்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஆறுகாலப் பூஜை நேர்த்தியாக நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் அமுத படைக்கல்லில் புழுங்கல் சாதம் படைக்கப்படுகிறது.

ஆவுடையார் கருவறையின் வடக்கே யோகாம்பிகை சன்னிதி. அன்னை அரூபமாக உள்ளதால் யோக பீடமும், அன்னையின் பாதக் கமலங்களும் மட்டுமே இங்குள்ளன. அம்பிகையின் அபிஷேக நீர், தொட்டித் தீர்த்தத்தில் விழுகிறது. இந்த புனித நீர் மனக்கவலை மாற்றும், தீய சக்திகளை நீக்கும் தன்மையுடையது. அன்னையை அவளின் முன்புறம் அமைந்துள்ள கல் ஜன்னல் வழியே மட்டுமே தரிசிக்க வேண்டும் என்பதே நியதி. 




பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் அமைந்த திருவாதவூரில், பிறந்தவர் வாதவூரர். பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனிடம் பிரதாணி முதலமைச்சராகப் பணியாற்றி ‘பிரமராயன்’ பட்டம் பெற்றவர். மன்னனின் ஆணைக்கிணங்க குதிரைப்படைக்கு குதிரைகள் வாங்கச் செல்லும் வழியில், திருப்பெருந்துறையான தற்போதய ஆவுடையார் கோவிலில் குருந்த மரத்தடியில் அமர்ந்த போது இறைவன் ஈசனால் ஆட்கொள்ளப்பட்டு குரு உபதேசமும் பெற்றார்.

இதையடுத்து குதிரை வாங்க வைத்திருந்த பணத்தைக் கொண்டு ஆலயத் திருப்பணியை செய்து முடித்தார். அதற்காக மன்னன் அவரை சிறையில் அடைத்தான். சுடு மணலில் நிற்க வைத்து வதைத்தான். மாணிக்கவாசகர் அனுபவிக்கும் துன்பத்தை பொறுக்க முடியாத இறைவன், மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு அறியச் செய்வதற்காக, வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். வெள்ளம் ஊருக்குள் வராமல் தடுக்க, ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடந்தபோது, இறைவன் பணியாள் வேடத்தில் வந்து பிட்டுக்காக மண் சுமந்து பிரம்படியும் பட்டார். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. வைகை ஆற்றங்கரையோரம் திருபுவனம் ஊரில் நரியைப் பரியாக்கி திருவிளையாடல் நிகழ்த்திய இறைவன் மாணிக்கவாசகரின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார்.




பாண்டிய மன்னன், மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு வேண்டிய நிலையில். மன்னரைத் தேற்றிய வாதவூரர், தன் முதலமைச்சர் பதவியைத் துறந்து, ஆன்மிகப் பாதையைத் தேடினார். சமயக் குரவோர் நால்வரில் ஒருவரானார் உத்திரகோசமங்கை, திருவண்ணாமலை, திருப்பராய்துறை, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு சிவ ஸ்தலங்களைத் தரிசித்து, சிதம்பரம் வந்து சேர்ந்தார்.

தில்லை அம்பலவாணன், அந்தணர் வடிவில் வந்து, மாணிக்கவாசகரின் பாடல்கள் அனைத்தையும் கேட்டு, தன் ஓலையில் எழுதினார். பாடலின் இறுதியில் ‘மாணிக்க வாசகர் சொற்படி, அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ எனக் கையொப்பம் இட்டு, பொற்சபையின் பஞ்சாக்கர படியில் வைத்து மறைந்தருளினார்.

தில்லை வாழ் அந்தணர்கள், இந்த ஏடுகளைக் கண்டு வியந்து, இதன் பொருள் கூறுமாறு மாணிக்கவாசகரை வேண்டி நின்றனர். ‘இதன்பொருள் இவ்வானந்த கூத்தனேயாவன்’ எனக்கூறி, அனைவரும் காணும் விதமாக ஜோதியுள் இரண்டறக் கலந்தார்.

ஆவுடையார் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கு முகமாய் மூலவராகவும், முதல் பிரகாரம் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் வடக்கு முகமாய் உற்சவராகவும் மாணிக்கவாசகர் காட்சி தருகிறார். நந்தி மற்றும் சண்டேசுவரராக இவரே ஆட்சி செய்வதால், அவர்களுக்கு ஆலயத்தில் இடம் தரப்படவில்லை. சுவாமி, அம்பாளுக்கு இணையாகப் பெருமை பெற்றவராக விளங்குவதால், அனைத்து ஆலய விழாக்களிலும் மாணிக்கவாசகப் பெருமானே முன்னிறுத்தப்படுகிறார்.

இந்த ஸ்தலத்தில் திருமால், பிரம்மா, இந்திரன் என எண்ணற்றோர் தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். அவை இன்று கிணறுகளாகவும், குளங்களாகவும் ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இருந்தாலும், ஆலயத்திற்கு தென்மேற்கில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. இது தவிர, சுவாமிக்கு அபிஷேக நீர் எடுக்கப் பயன்படும், கிணறு தீர்த்தம் ஆலயத்திற்குள் இருக்கிறது.

ஏழுநிலை ராஜகோபுரத்தின் எதிரே அமைந்துள்ளது, ஆயிரம்கால் மண்டபம். இதில் நரசிம்மர், காளி, ஊர்த்துவத்தாண்டவர், பிட்சாடனர், வில்லேந்திய முருகன், ரிஷபாந்தகர், சங்கரநாராயணன், அகோர வீரத்திரர், அக்னி வீரபத்திரர் முதலிய சிற்பங்களும், வெவ்வேறு தேசத்து குதிரைகளும், அதன் மீதான விதவிதமான அணிகலன்களும், இசைத்தூண்களும் கலைநயத்தை வடித்தெடுத்துள்ளன.

கால் விரல்களின் நகங்கள், கால் தசைகள், கால் எலும்புகள் தெரியும் விதமான சிற்பங்கள் நம்மை வியப்பூட்டுகின்றன. எழில்மிக்க ஏழுநிலை ராஜகோபுரம் விண்ணை முட்டி நிற்க, கோபுரத்தின் இடையில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

மூன்றாம் பிரகாரத்தில், வெயிலுவந்த விநாயகர், அக்னி தீர்த்தம், தியாகராஜர் மண்டபம், மூர்த்தி தீர்த்தம் ஸ்தலம் என குருந்த மரம் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளதில் வேலைப்பாடுடன் கூடிய கொடுங்கைகள் மரவேலைப்பாட்டின் கலையில், கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. தொங்கும் கல்லிலான சங்கிலித் தொடர்கள், ஊஞ்சல் மண்டபம் போன்றவை கண்ணுக்கு விருந்தாக.

இரண்டாம் பிரகாரத்தில் தில்லை மண்டபம் நடனசபை எனப்படுகிறது. இம்மண்டபத் தூண்களில், பதஞ்சலி, வியாக்ரபாதர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. குறவன், குறத்தி சிற்பங்களின் ஆடை அணிகலன்கள் வியப்பூட்டுகின்றன.

முதல் பிரகாரத்தில் ஆத்மநாதர், யோகாம்பிகை, குருந்தமூல மண்டபம், மாணிக்கவாசகர் உற்சவர் சன்னிதியும் அமைந்துள்ளன. தூண்கள் முழுவதும் இறை வடிவங்கள், ஆதீனப் பெருமக்களின் சிலை வடிவங்கள், அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நரிகளைப் பரிகளாக்கி, குதிரை ஓட்டியாக வரும் சிவபெருமானின் சிலை, வெகு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரே அமைச்சராக, அடியாராகக் காட்சி தரும் மாணிக்கவாசகர் வடிவம், மன்னன் வரகுண பாண்டியன் உருவம் போன்றவை கலைநயம் காட்டுகின்றது.


27 நட்சத்திரங்களின் வடிவம் படைப்புச் சிற்பமாக, சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி வாசலின் மேல்புறத்தில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இவ்வாலயத்தில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப் படுகின்றன. ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என இரண்டு பெருவிழாக்கள், தலா பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மாணிக்கவாசகரையே சிவபெருமானாகப் போற்றி, சிவபெருமானுக்குரிய ஆடை அலங்காரங் களைச் செய்து வீதியுலா நடத்துகின்றனர்.

தேர்த்திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்குமான வழிபாட்டு உரிமையை மாணிக்கவாசகரே பெறுவது, இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். இதுதவிர, 12 மாதங்களிலும் 12 விதமான அபிஷேகங்கள் இந்த ஆலயத்தில் நடைபெறும்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில், வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ள ஆவுடையார் கோவில் எனும் திருப்பெருந்துறை திருத்தலம். திருச்சியிலிருந்து 102 கிலோமீட்டர்., அறந்தாங்கியிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இந்தஸ்த்தலம் இருக்கிறது. மேலும் காரைக்குடி வழியில் செல்பவர்கள் ஏம்பல் ஒக்கூர் வழி குறைந்த தூரமே ஆகும்,   ஆலய கிழக்கு வாசலில் எதிரே இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள புண்ணிய வாசல் கிராமத்தில் அமைந்துள்ள மரமே அறமாக வாழும் ராஜா அவர்களின் அன்பாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்வது மேலும் சிறப்பு.


அன்பாலயம் முதியோர் இல்லம் தொலைபேசி:   8838734395  ஆகும்.

ஆவுடையார்கோவில் செல்வோர் அவசியம் சென்று வாரீர்.

ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை திருக்கோவில். ஓம் சிவாய நமஹ... திருச்சிற்றம்பலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...