சீட்டுப் பேரத்தால் சிக்கலில் கூட்டணிக் கட்சிகள்
‘டெல்லியில் சிபிஐ அனுப்பிய முதல் சாட்சி சம்மன் என்பதால், தவெக தலைவர் நடிகர் விஜய் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் எனக் கட்டாயமில்லை. இன்னும் இரண்டு சம்மன்கள் வரையில் அவர் தேவைப்பட்டால் அவகாசமும் கேட்கலாம். ஆனால், மூன்றாவது சம்மனுக்கு கட்டாயம் நேரில் ஆஜராகித்தான் தீர வேண்டும். அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுக்கோட்டை பொதுக்கூட்டம் தவிர திருச்சிராப்பள்ளி அரசியல் பயணம் தோல்வியில் முடிந்ததையும், அவருக்கு அ.தி.மு.க தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எதிர் அரசியல் மூலம் தண்ணீர் காட்டியதையும் மக்கள் கண்ட நிலையில் அதற்குள்ளாக டெல்லியிலிருந்து சந்திப்புக்கு அரசியல் சம்மன் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வந்து சேர்ந்தது.
அதே போல கரூர் விஜயின் மக்கள் சந்திப்பில் சிலர் கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்க்கு சம்மன் அனுப்பியது டெல்லி சி.பி.ஐ. இப்படி, ஒரே நேரத்தில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கும் அரசியல் மற்றும் சட்டம் என வெவ்வேறு சம்மன்கள் அனுப்பப்பட்டிருப்பது தான், தமிழ்நாடு அரசியலில் பேசுபொருள். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023 சட்டத்தின் பிரிவு 179, சாட்சி விசாரணைக்கு எழுத்துப்பூர்வ சம்மன்களை வழங்க காவல்துறைக்கு அதிகாரமளிக்கிறது, ஆனால் குறிப்பிடத்தக்க பாதுகாப்புகளுடன்: பெண்கள், குழந்தைகள் (15 வயதுக்குட்பட்டவர்கள்), முதியவர்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்), ஊனமுற்றோர் அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்த முடியாது, மேலும் அவர்கள் தானாக முன்வந்து விசாரிக்கப்பட வேண்டும். BNSS ஆனது பழைய CrPC விதியை (பிரிவு 160) மாற்றியமைத்தது, பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான மேம்பட்ட பாதுகாப்புகள், தனிப்பட்ட உரிமைகளுடன் விசாரணைத் தேவைகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் வீட்டில் விசாரித்தால் செலவுகளை ஈடுகட்ட வேண்டும், சாராம்சத்தில், பிரிவு 179 காவல்துறை தகவல்களைச் சேகரிக்கும் அதே வேளையில், அவர்கள் நேர்மையான நடத்தை மற்றும் குற்றச் செயல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். புதிய குற்றவியல் சட்டக் கட்டமைப்பு. அதன்படி தான் நடிகர் விஜய் மீதான விசாரணை நடக்கும் ஜன நாயகன்' திரைப்படம் குறித்த மேல்முறையீட்டு மனுவை நாளை திங்கள் கிழமை விசாரணைக்கு எடுக்க மத்திய தணிக்கை வாரியம் முறையீடு செய்து அது தலைமை நீதிபதி அமர்வில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ. ஆர். எல்.சுந்தரேசன் முறையீடும் செய்தார்.
தாங்கள் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தணிக்கை வாரியம் முறையீடு செய்தது.
மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவிக்கவும், அதனை விசாரணைக்கு எடுப்பது குறித்து பிற்பகலில் பரிசீலிக்கப்படும் எனத் தலைமை நீதிபதி பதில் தெரிவித்துள்ளார். இது தவிர காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்த் துவங்கிய தேமுதிக என்பது அவரது மரணத்திற்கு பின் தேய்ந்ததா, வளர்ந்ததா என்பதை அந்த கட்சி தற்போது ளள தேர்தலில் கூடடணி இல்லாமல் தனித்து விடப்பட்டு தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும் ஆனால் 234 தொகுதியில் தங்களது ஆதரவில் வென்று துணை முதல்வர் என கனவு காணும் பிரேமலதா கனவு பலிக்க பாஜகவின் அவரை வழிநடத்தும் சில வழிகாட்டிகள் அவரை ஆசைகாட்டி வைத்த நிலையில்
அரசியல் பேரம் பேசுவதற்கென்றே பிறவி எடுத்த பிரேமலதா? என முத்திரை பதிக்க
சில நாள் முன் கடலூர் மாநாட்டில் தங்கள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அடிக்கடி சொல்லியவர், மேடையில் அறிவிப்பதை போல தோற்றம் காட்டி வந்த சில தொணடர்களை ஆர்வப்படுத்திவிட்டு ஜகா வாங்கி விட்டார்.
கூட்டத்தை காட்டியாச்சு. எதற்கு? பேரம் பேசத்தானே!
மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்ட முடிகிறது.
மிக பிரம்மாண்டமாக செலவழிக்க முடிகிறது.
விஜயகாந்தின் புகழை அரசியல் வியாபாரமாக்க முடிகிறது.
நடிகர், அரசியல் தலைவர், பரோபகாரியாக வாழ்ந்து மறைந்த நல்ல மனிதரை கடவுளாக்கி கல்லா கட்டவும் இயல்கிறது.
கேப்டன் என்ற வார்த்தையை மந்திரச் சொல்லாக்கி, அண்ணியார் என்ற வார்த்தையை அடிமை முழக்கமாக்கி, அதிகாரத்தை நோக்கிய அரசியல் மாநாடாக மட்டுமே இது நடத்தப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் இன்னும் முதிர்சியற்றவராக அடாவடித்தனமான மரியாதையற்ற முறையில் பேசினார். கேப்டன் கொள்கை என்ன? மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவே என்றார் அது தான் கொள்கை என விளக்கமளித்தார். இதையெல்லாம் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரமற்ற நிலையில் இருக்கும் இவர்களுக்கு எப்படி இந்த தைரியம் வருகிறது என்று அதிசயப்பட வேண்டியதில்லை.
தமிழகத்தின் அடிப்படையான பிரச்சினைகள், தேவைகள்..இது குறித்த எந்தப் புரிதலும் பேசிய தலைவர்கள் யார் பேச்சிலும் இல்லை.
பாஜக அரசியல் உறவு கொடுக்கும் தைரியம் தான் பிரேமலதா அவர்களின் அடாவடித்தனத்திற்கான அடிப்படையாகும். மதவாத எதிர்ப்பு இந்தியா கூட்டணிக்கு இவர்கள் ஒரு போதும் வரமாட்டார்கள். ஆனால், திமுகவை ஒரு துருப்புச் சீட்டாக்கி அதிமுகவிடம் அதிக சீட் கேட்பார்கள்.
ஆனால், ஒன்று. தங்கள் கட்சி கொள்கையற்ற கட்சி. அதிகார வெறிபிடித்த கட்சி. பெட்டி வாங்கும் கட்சி போன்ற பிம்பங்கள் மக்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்திருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக - பேசியவர்கள் அனைவரும் –அவற்றுக்கு பதில் சொல்வதற்கும், சமாளிப்பதற்குமே பெருமளவு நேரத்தை செலவிட்டார்கள்!
அந்த அளவுக்கேணும் ஒரு குற்றவுணர்வேனும் இருக்கிறதே..என்று மனம் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்.
பிரேமலதா பேசும் போது மக்களால் தேமுதிக மீது வைக்கப்படும் விமர்சனத்திற்காக ஆவேசப்பட்டாரே தவிர, தன்னை மாற்றிக் கொள்ள முன்வராத தன்மையில் தான் பேசி முடித்தார்.
உங்க கொள்கை என்னவென்று கேட்டால் வெற்றி மட்டுமே கொள்கை என சொல்லுங்கள் என்றார், தொண்டர்களிடம்.
மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டணி குறித்து தங்கள் கருத்தை எழுதி கொடுத்துவிட்டதையும், தான் அனைத்தையும் படித்துவிட்டதையும் சொல்லியவர் இன்று அனைத்து தொண்டர்களும், ஊடகங்களும் எதிர்பார்ப்பது போல இன்றே கூட்டணி குறித்து சொல்ல வேண்டுமா? அவசரம் காட்ட மாட்டோம். இன்னும் யாருமே சொல்லவில்லையே நாம் ஏன் சொல்ல வேண்டும்? என்று பின் வாங்கிவிட்டார்.
திமுக கூட்டணி ஏற்கனவே உறுதியாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துவிட்டது. தேமுதிக அறிவிக்க இது தானே சரியான தருணம்!
ஏன் அறிவிக்க முடியவில்லை? அப்படியானால் இவ்வளவு நாளா கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன் எனச் சொன்னது பொய்யல்லவா? சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாமல் இவரால் நழுவ முடிவது எப்படி ?
ஆக இவர் கூச்ச நாச்சமற்றவர் எனும் மக்கள் மனதில் உள்ள கருத்தை அவரது நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்துகின்றது?
பிரேமலதா (விஜயகாந்த்) பேசுவதற்கு முன்பு வாள் கொடுத்தது, கீரிடம் வைத்தது போன்ற சடங்குகளை முடித்து, விஜயகாந்த்தின் ஆவி பேசுவதாக ஒருவர் பேசினார். அவர் இனி பிரேமலதா தான் எல்லாமென்று விஜயகாந்த் சொல்வதாக பேசி முடித்தார். கூட்டத்தில் எந்தவித சலசலப்புமில்லை.
ஒட்டுமொத்த அரசியலுமே சாக்கடையானதால் தேமுதிகவும் அந்த குட்டையில் ஒன்றாகத் தானே இருக்க முடியும் விதி விலக்காக எப்படி இருக்க முடியும்? என்றும் நினைத்துப் பார்க்க்கும் சிலர் உண்டு என்பதை மறந்து போன மக்கள் இவர் நடவடிக்கையை பார்த்து விஜயகாந்த் இவரை திருமணம் செயததற்கு பதில் ராதிகாவைக் கட்டியிருக்கலாம் போல எனப் பேசுவது நம் காதிலும் விழுகிறது."அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகலான்" -என ஏசுகிருஸ்து பிறக்கும் முன்பே தோன்றி 2057 ஆண்டுகளுக்கு முன் உள்ள திருக்குறள் 30 கூறும் பாடலிது. சங்க காலத்தில், தமிழ் பற்றுக்கொண்ட, அறங்களை நிலைநாட்டும் குல மக்களாக அந்தணர்கள் இருந்தனர். பிற்காலத்தில் அவர்கள் குணம் சிறிது மாறியது பாகுபலி திரைப்படத்தில் வரும் பிங்களத்தேவரும், பல்வாள் தேவனும் வரும் காடசியில் பேசுகிற வசனம் போல இங்கு நடப்பது அரசியல் வேள்வி இதில் ராஜமாதா கையால் பாகுபலியை முடிக்க நடக்கும் வேள்வி என்பது போல அரண்மனை ரகசியம் மற்றவர்கள் அறிய முடியாது இங்கு (அரசியல் களம்) எல்லோரும் அடிமை தான் கட்டப்பா போல் எல்லோராலும் தியாகம் செயய முடியாத வாக்குகளுக்கு பணம் எதிர்பார்ப்புகள் உள்ள லஞ்ச் லாவண்யமன பெரும்பாலான மக்கள், நாட்டின் மீதும் மக்கள் மீதும் நேசமில்லாத சுயநலமிக்க அரசியல் கட்சியின் தலைவர்கள், கடந்த காலங்களில் அதிமுகவை அழிவை நோக்கி நகர்த்திச் சென்ற அக்ரஹாரக் குருமூர்த்தி போல பல சில எடடப்பாக்களும் உண்டு என்பதைத் தான் தற்போது அரசியல் களம் உறுதிபடக் கூறுகிறது. இது பாஜகவின் சதுரங்க பொம்மலாட்டம் இது அவர்கள் மட்டுமே ணர்ந்த சாணக்கியன் நீதி சத்திரியர்களைப் பிரித்து உடைக்காமல் எதிலும் வெல்ல முடிமாது என்பதே அந்த நீதி அதுதான் தற்போது நடக்கும் வேள்வி. இதில் பிங்களத்தேவர் பாத்திரம் யார் என்பதை தாங்கள் எளிதாகவே அறியலாம். தமிழ்நாடு அரசியல் களம் பாஜகவை நோக்கித் திரும்ப வைக்க நடக்கும் முயற்சி பல கட்சிகளும் அடக்கம் இந்த ஜனநாயகனும் அதில் ஒரு பாத்திரம். உயர்நீதிமன்ற ஒரு நீதியரசர் தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்தார் உயர் நீதி மன்ற தலைமை நீதியரசர் அடங்கிய அமர்வு, வழக்கு ஜனவரி மாதம் 21 ஆம் ததிக்கு தள்ளி வைத்து உத்தரவு இந்த நிலையில் உச்ச நீதிமன்ற மேல்முறையீடு நாளைக்கே விசாரணை நடத்த அரசு தரப்பு அவசரக் கோரிக்கை வைக்கிறதே கவனிக்க வேண்டிய நிகழ்வு,
நடிகர் கடசித் தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனின் ப்ரீ புக்கிங் தொடங்கி அமோகமாக நடைபெறுகிறது. இதுவரை உலகளவில் ரூபாய். 36 கோடியைத் தாண்டி வசூலாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெளியீட்டுக்கு முன்பே மாபெரும் வசூல் சாதனையை ப்ரீ புக்கிங்கிலேயே படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர், ஜனநாயகன் படத்தைப் பார்த்த முக்கிய புள்ளிகள் சிலர், நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் சிறந்த படம் இது தான் எனவும் கூறியுள்ளனர். படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும், மூன்று மணி நேரம் உள்ள இந்தத் திரைப்படம் எங்குமே போர் அடிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு ஜனநாயகன் படம் விறுவிறுப்பாக உள்ளதாக முதல் விமர்சனம் படம் வரும் முன்பே வெளியாகியுள்ளது. வருகிற 21.01.2026 -அன்று வழக்கு விசாரணைக்காக ஜனநாயகனை கொண்டு போயிருக்க அதை தற்போது முன்தேதியிடடு நாளைக்கு விசாரணைகு வருகிறது.
விஜய்யின் ஜனநாயகனுக்கு 2026 தைப்பொங்கல் இல்லையா உணடா என்பது பாஜகவை நம்பி கட்சி துவங்கிய விஜய் எதிர்காலம் இதன் மூலம் தெரிகிறது. ஜனநாயகனுக்கு மட்டும் சிக்கலில்லை. சிவகார்த்திகேயன் நடித்த பராசக்திக்கும் அதே சிக்கல் உண்டாகி பின் சரிசெய்யப்படடதாம்.
ஜனநாயகனுக்கு ஒரு இடத்தில் மட்டும்தான் மாற்றம் சொல்லப்பட்டு, அதுதான் பஞ்சாயத்தில் இருக்கிறது என்கிறார்கள்; அதே வேளையில், பராசக்திக்கு 25 இடத்தில் தணிக்கை கத்திரி வைத்துள்ளதையும், துண்டிக்கப்பட்ட துண்டுகளையும் சமூகவெளியில்; பரவலாகக் காணமுடிகிறது.
"பராசக்திக்கு கத்திரியை தாராளமாக வைக்கத்தான் ஜனநாயகனை இவ்வளவு தூரம் நகர்த்திக் கொண்டு வந்தார்களா, அதற்காகத்தான் விஜய், சத்தம் காட்டாமல் இருக்கிறாரா; சொல்லுங்கண்ணே, சொல்லுங்க" என்று இமான் ஸ்டைலில் அலைபேசி வழியில் கேட்டவனுக்கு பிறகு பதில் சொல்வது நல்லது. நாட்டு நிலை சினிமாவை மட்டுமே வைத்து அரசியல் செய்வது குறித்து மக்கள் மகிழ்ச்சி அடையவில்லை அது
குறிப்பிட்டுச் சொல்வதெனில், பராசக்தி படத்தில், "அந்த அச்சம் இருக்கிறவரை அண்ணாதுரைதான் இந்தநாட்டை ஆளுகிறார்" என்கிற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தையும்; போஸ்ட் ஆபீசில் இருக்கிற ஹிந்தி எழுத்தை சாணம் கொண்டு அழித்த காட்சியையும்; நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. இனிமேல் தேடாத மண்ணாங்கட்டிகளும் அறிஞராக ஒரு கட்சி பார்க்கும் அண்ணாதுரை யாரெனத் தேடுவார்கள்,
இன்னொரு பக்கம், தவெக தலைவர் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம், தணிக்கைக் குழுவின் பிடியிலும், நீதிமன்றப் படியிலும், ரிலீஸ் நாள் குறித்த போராட்டத்தில் இருப்பதை பலரும் கண்டித்து அறிக்கையும் கொடுத்துள்ளனர்.
சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் வரிசையில் அறிக்கை வருவதற்கு முன்பே, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிக்கைகள் அணிவகுத்தன. நாடாளமனற உறுப்பினர்கள், பிரவீன் சக்கரவர்த்தி, ஏரியூர் மாணிக்கம்தாகூர், கரூர் ஜோதிமணி, வரிசையில் திருச்சி வேலுசாமி எனப் பலரின் அறிக்கைகள் வரத்தொடங்கின. "திமுக தீயசக்தி" என தவெக தலைவர் விஜய் பேசிய போது கூட்டணி தர்மம் என காத்து (!) அமைதியாய் (நியூட்ரலாய்) மௌனித்த காங்கிரஸ் கட்சியின் கோபக்கார கீர்த்தியும், மூர்த்திகளும், ஜனநாயகன் திரைப்படம் குறித்த விஷயத்தில் கொதித்தே போய்விட்டனர்.
பிரவீன் சக்கரவர்த்திகள், மாணிக் தாகூர்கள் இதுகுறித்து பேசிய விஷயங்கள், திமுகவுக்கு சவால் விடுவது போலவும்; சீண்டுவது போலவுமே அமைந்திருந்தது. ஜோதிமணி எம்.பி.,யின் பேட்டியும், பதிவும் தான், தணிக்கைக்குழுவை கண்டித்தது. அதுபோலவே கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களின் அறிக்கையும், திமுக கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளின் அறிக்கையும் இருந்தது.
திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி முறிந்து போய்விடக்கூடாது என்ற அவர்கள் சுயநல எண்ணம் அதில் வெளிப்பட்டது, தெளிவான நிலையில்.
ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் உள்ள சிக்கல், எல்லோரையும் விட தவெக தலைவர் நடிகர் விஜய்யைத் தான் அதிகமாக பாதித்திருக்கும். இந்த விஷயத்தில் விஜய் எதைப்பேசினாலும், தயாரிப்பு நிறுவனம் தான் பெரிதாய் நஷ்டமடையும். இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி படம், 25 இடங்களில் கத்திரி வைக்கப்பட்டு தணிக்கைக்குழுவால் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த நடிகர் நடித்த 25-வது படத்தை 25 இடத்தில் துண்டுபோட்டு ரிலீஸ் செய்யப்போகிறார்கள். ஜனநாயகன் விஜய்க்காக எல்லாக் கட்சிகளும் குரல் கொடுக்கிறது, ஒரு அரசியல் கட்சித்தலைவராக விஜய் பராசக்திக்காக இப்போதுகுரல் கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும்; அதனால் ஜனநாயகன் தயாரிப்பாளர் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.
பாஜகவின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், "சென்சார் ஃபோர்டுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அதிகாரிகள் படத்தைப் பார்த்து செய்கிற முடிவுக்கு பாஜக பொறுப்பாகாது" என்கிறார். ஆனால் நடிகை கௌதமி எப்படி தணிக்கைத் துறை உறுப்பினர் ஆனார் என்பதைக் கவனிக்க வேண்டும், திரைப்படங்கள் ஜனநாயகன் மற்றும் பராசக்தி இரண்டுக்குமான பதிலாகவே இதைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது , "சிபிஐ, E.D. போன்று சென்சார் ஃபோர்டும் பாஜகவின் கைப்பாவையாக ஆகியுள்ளது" எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதையும்
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணும் நிலையில் "விருத்தாசலம் தொகுதியில் எனது அக்கா வெற்றி பெற்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, (பிரேமலதா விஜயகாந்த்) அமர்வார்" : கடலூர்
தேமுதிக பொதுக்கூட்டத்தில் L. K.சுதீஷ் பேசியது தான் இந்த ஆண்டில் சிறந்த நகைச்சுவை,
நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் கனவிலிருக்குமவர் அந்த நிலையில் அவரது ஆசை நிறைவேறா நிலையில் அக்காவுக்கு துணைமுதல்வர் பதவியாம் நல்ல வேடிக்கை, அதிமுகவின் இரத்தத்தின் ரத்தங்களுக்காக ஒரு தொண்டரின் மடல் இது:-
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மெஜாரிட்டி அன்புமணி தரப்பு இணைந்திருக்கிறது. அன்புமணி தரப்புக்கு 17 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் வழங்கப்படும் தகவல் கூறுகிறது.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திமுகவின் என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகாவின் ஜி. கே.வாசன் ஆகிய 6 உறுப்பினர்களின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைகிறது. அந்த 6 இடங்களுக்கான தேர்தல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி அறிவிக்கப்படலாம். அப்போது தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கும். அதிமுக சார்பாக 2 உறுப்பினரை ராஜ்யசபாவுக்கு அனுப்ப வேட்பாளராக நிறுத்த முடியும். அதில் ஓர் இடம் பாமக மருத்துவர் அன்புமணிக்கு போய்விட்டால், இன்னொரு இடம் தேமுதிகவுக்குப் போகும்.
2025-ஆம் ஆண்டில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற்ற போது தேமுதிக தனக்கு ஒரு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி கேட்டு அதிமுகவிடம் சண்டையிட்டது. அதனால், ’2026-ஆம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும்’ என 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி அதிமுக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி கொடுத்தது. அதன்படி இன்னொரு ராஜ்யசபா உறுப்பினர் சீட் தேமுதிகவுக்கு போய்விடும். கூட்டணி வந்தால் இதனால், ராஜ்யசபா உறுப்பினர் கனவில் அதிமுகவினர் யாராவது இருந்தால் துடைத்தெறிந்துவிட்டு, திமுக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்திற்கு ஐடியா கொடுக்கலாம்! தமிழ்நாட்டு அரசியலில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது. ஆளும் திமுக அரசு தனது நலத்திட்டங்கள் மூலமும், பொருளாதார வளர்ச்சி உத்தரவாதங்களும் கொண்டு வலுவான நிலையில் இருந்தபோதிலும், ஊழல் மக்கள் பாதிப்பு, மற்றும் மத துவேசம் காரணமாக வாக்கு வங்கி இழப்பு மற்றும் ECI( SIR) மற்றும் புதிய இளைய தலைமுறை வாக்குகள் இழப்பு மட்டுமே அதே வேளையில், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி பல்வேறு உள் நெருக்கடிகளால் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அதிமுகவின் தற்காலிகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் வி.கே. சசிகலா நடராஜன் மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தையும் கட்சியிலோ டி. டி. வி.தினகரனின் அமமுகவை கூட்டணியிலோ சேர்க்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்திருப்பது, கூட்டணியின் பலம் மற்றும் வாய்ப்புகளை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்பதே உண்மை.
முதலில், அதிமுகவின் உள்கட்சிப் பிளவுகள் மிகப் பிரபலம். ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி ஒருபோதும் முழுமையாக ஒன்றிணையவில்லை. வி. கே.சசிகலா நடராஜன் , ஓ. பன்னீர் செல்லம், டிடிவி தினகரன் போன்றவர்கள் வெளியேற்றப்பட்ட போதிலும், அவர்களின் செல்வாக்கை தக்க வைத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில், குறிப்பாக அதிகம் மக்கள் தொகை கொண்ட சமூகத்தில் இன்னுமுள்ளது. இவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், இபிஎஸ் அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இது கட்சியின் ஒற்றுமையை மேலும் சீர்குலைக்கும். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த போதிலும், பாஜக தலையீடு குறித்த அச்சம் அதிமுக தொண்டர்களிடம் உள்ளது. பாஜகவின் இந்துத்துவா கொள்கைகள் திராவிட அடிப்படையிலான அதிமுகவுக்கு எதிராகவே செயல்படும் என்ற கருத்து பிரபல்யமாகவே பரவியுள்ளது.
கூட்டணி அமைப்பதிலும் அதிமுக தடுமாறுகிறது. பாஜகவுடன் 2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் இணைந்தது, பாமக (அன்புமணி ) 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் சேர்ந்தது போன்றவை சிறிய வெற்றிகள் தான். ஆனால், சிறிய வாக்கு வங்கி உள்ள தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அல்லது ஓ.பன்னீர் செல்வம் அணி சேர்வது சந்தேகமே. எடப்பாடி கே பழனிசாமி அவர்களை நிராகரித்தது தெற்கு மாவட்டங்களில் வாக்குகள் இழப்பை ஏற்படுத்தும். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி 75 இடங்களே வென்றது; 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இரு கூட்டணிகளும் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடம் கூடப் பெறவில்லை. தற்போதைய கருத்துக்கணிப்புகளும் அதிமுக கூட்டணி திமுக கூட்டணிக்கு பின்னால் இருப்பதாகவே கருத்துத் கணிப்பு தெரிவிக்கின்றன.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) உருவாகியிருப்பது அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். டிவிகே தனித்துப் போட்டியிட்டால் 12-30 சதவீதம் முதல் 18.60 சதவீதம் வாக்குகளைப் பிரிக்கும்; இது திமுகவுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையும். டிவிகேயின் தமிழ்த் தேசியம் மற்றும் இளைஞர் ஆதரவு அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியைப் பாதிக்கும் வாய்ப்புகளே அதிகம். சீமானின் நாம் தமிழர் கட்சியும் 3 சதவீதம் வாக்குகளைப் பிரிக்கும். இத்தகைய பிளவுகளால் எதிர்க்கட்சி வாக்குகள் சிதறடிக்கப்படும்.
திமுக அரசின் சமீப செயல்பாடுகள் அதிமுக கூட்டணியை மேலும் பலவீனப்படுத்துகின்றன. மு. க ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண்களுக்கான உரிமைத்தொகை, இலவச லேப்டாப், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் குடும்ப அட்டைக்கு 3000 ரொக்கம் போன்ற நலத்திட்டங்களால் மக்கள் ஆதரவைப் பெற முயற்சி செய்கிறது. பொருளாதார வளர்ச்சி, முதலீடுகள் அதிகரித்துள்ளதாக வலுமையான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தமிழ்நாட்டில் திமுக செல்வாக்கு அதிகரிக்க அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், அதிமுகவால் இதற்கு சரியான மாற்றை முன்வைக்க முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி ஒன்றும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல அல்ல ஆனால் அவரின் பிரச்சாரம் மட்டுமே நடைபெற்று வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் திமுக மீது எதிர்கட்சிகளால் வைக்கப்பட்டாலும் கிடுகிடுக்கும் போராட்டங்களோ, மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளோ இதுவரை எடுக்கப்படவில்லை.
எடப்பாடி கே. பழனிசாமி யின் தலைமைத்துவமும் கேள்விக்குள்ளாகியுள்ளது. அவர் கட்சியை ஒருமுகப்படுத்த முயல மறுப்பதும், மூத்த தலைவர்கள் வெளியேற்றம், உட்கட்சி அதிருப்தி சவால்களை அதிகப்படுத்தியே உள்ளது. பாஜகவுடனான கூட்டணி தொண்டர்களிடம் முழு ஆதரவு பெறவில்லை. டெல்டா, மற்றும் தெற்கு மாவட்டங்களில், பிரிந்தவர்களை கட்சிக்குள் இணைக்க மறுப்பதால் செல்வாக்கு இழப்பு தவிர்க்க முடியாதது.
தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது கடினம். கட்சிக்குள் உள்பிளவுகள், கூட்டணி பலவீனம், டிவிகே போன்ற புதிய சக்திகள், திமுகவின் வலுவான பிரச்சாரம் இவை அனைத்தும் அதிமுகவை பின்னடைவுக்கு இட்டுச்செல்கின்றன. ஒற்றுமை இல்லாத எதிர்க்கட்சியான அதிமுக, திமுகவுக்கு சாதகமாகவே அமையும். 2026 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவை தோற்கடித்தாலும் வெற்றி பழனிசாமி பக்கம் வராது, தவெக வுக்கு மற்றொரு வெற்றியைத் தரும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ; அதிமுகவுக்கு இது ஒரு பெரிய தோல்வியாக அமையும் அபாயமும் உள்ளது. எடப்பாடி கே. பழனிசாமி நிதர்சனத்தை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டிய நேரமாக மாறியுள்ளது, கண்ணை மூடிக் கொண்டால் கூடடணிப் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டிச் சென்று விடும். அடுத்த பேருந்துப் பயணம் வரை காத்திருக்க வேண்டியது தான்.இதில் சாணக்கிய நீதி
என்பது...சத்திரியர்களை பிரித்து வைத்துத் தான் அந்தணர்கள் வெற்றி பெற முடியும்.
செல்வம், உயிர், உடல் இவை அனைத்தும் நிலைற்றது. தர்மம் ஒன்று நிலையானது, எப்போதும் நீடித்திருக்கக் கூடியது.
அனந்தீசுவரன் கோயில் உண்ணாழியின் மேற்குச் சுவரில் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டுப் பகுதியைக் காண்போம்.
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம் “பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)...(இவன்) றம்பி
ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர…
மேலே காணப்பெற்ற கல்வெட்டில் “பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனைக்” கொன்று “த்ரோஹிகளானவர்கள்” என்று தெளிவாகக் கூறப்பெற்றிருக்கிறது. அக்கொடும் பாதகச் செயலைச் செய்த துரோகிகள் யாவர் என்று அக்கொலையாளியின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறது. கொலையாளியின் பெயர்கள் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதைக் காட்டுகின்றன. அப்பார்ப்பனர்கள் ஏன் இந்த அழிவுச் செயலைச் செய்தார்கள் என்பது வரலாற்றாசிரியர்களுக்குப் புரியாத புதிராக இருந்து வருகிறது.சீத்தலைச் சாத்தனார் ஒரு செய்தியை மணிமேகலையில் தெரிவித்திருக்கிறார்.
“மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்தன்முன் தோன்றல் தகாதொளி நீயெனக் கன்னி யேவலின் காந்த மன்னவன் இந்நகர் காப்போன் யாரென நினைஇ…………….காவற் கணிகை தனக்காங் காதலன் இகழ்ந்தோர்க் காயினும் என்சுத லில்லான் ககந்தனா மெனக் காதலிற் கூஉய் அரசா ளுரிமை நின்பால் இன்மையின் பரசுராம னின்பால் வந்தணுகான்”
அதாவது, பரசுராமன்(மழுவாள் நெடியோன்) அரச குலத்தை(சத்திரிய குலத்தை) அழிப்பதற்காக உறுதியேற்றுக் கொண்டு புகார் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். நீ அவன் கண்ணில்படுவது தகாது, ஆதலால் நீ உன் கணிகை மகனான சுகந்தனிடம் ஆட்சியை ஒப்ப்டைத்துவிட்டு ஓடி ஒளிந்துகொள் என்று புகாரின் கன்னித்தெய்வம் “காந்தமன்” என்ற சோழ அரசினிடம் கூறியதுதான் அச்செய்தி. சோழர் சூரிய குலத்த்தைச் சார்ந்த சத்திரியர்கள் என்பதால்தான் பரசுராமன் சோழ வேந்தன் காந்த்மனைத் தாக்க வந்திருக்கிறான்.
மேலே குறிக்கப்பெற்ற இரு செய்திகளையும் அடிபடையாகக் கொண்டு ஆய்ந்து பார்ப்போமானால், சூரிய குலத்தில் தோன்றிய சோழ சத்திரிய அரசர்கள் மீது பரசுராமனுக்கும் அவரது மரபினர்க்கும் சினமும் எரிச்சலும் இருந்திருக்கிறது என்பது தெரியவரும்.







































.jpg)













.webp)










































கருத்துகள்