சிங்க மராட்டியர் பவர் செக்டரான அஜீத் பவார், ஓடாமல் நின்று போனது அந்தக் கடிகாரம். மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்தார்.
அந்தச் சிறு விமானம், பாரமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையை விட்டு விலகித் தீப்பிடித்தது.
அஜித் பவார், அவரது பாதுகாப்பு அலுவலர், (PSO) உதவியாளர் மற்றும் இரு விமானிகளென ஐவரும் உயிரிழந்தனர்.
அஜித் பவார் பயணித்த லியர்ஜெட் 45 'சூப்பர்-லைட்' (Super-light) ரக ஜெட் சொகுசு விமானம்.
கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதன் விலை சுமார் ரூபாய்.100 கோடி முதல் 130 கோடி வரை!
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரக விமான உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. பம்பார்டியர் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் பெரிய ரக விமானங்களை மட்டுமே தற்போது தயாரிக்கிறது.
ஆனால் விபத்துக்குள்ளாகி இருக்கும் லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானம் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. Federal Aviation Administration தரச் சான்றிதழும் பெறப்பட்டது.
Honeywell Primus 1000 எனும் நவீன ஏவியோனிக்ஸ் சிஸ்டம் உள்ளது. வானிலை மற்றும் இதர விமானங்களைக் கண்டறியும் சென்சார்கள் (TCAS) பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் விபத்து ஏற்பட்டது
இதே ரக விமானம் முன்பு விபத்துக்குள்ளானது.22008-ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டின் உள்துறை அமைச்சர் ஜுவான் காமிலோ மொரினோ பயணித்த லியர்ஜெட் 45 விமானம், (இதைப் போலவே) மெக்சிகோ நகர விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் அமைச்சர் உட்பட அனைவருமே பலியாகினர்.
இரண்டு வருடங்களுக்கு முன், இதே ரக விமானம் மும்பை விமான நிலையத்தில் மழை காரணமாகச் சறுக்கி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவுமில்லை.
இந்தியாவில் வாடகை விமான நிறுவனங்கள்
சுமார் 120-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சார்ட்டர் நிறுவனங்கள் உள்ளன. VSR Ventures மற்றும் Karnavati Aviation ஆகியவை அதிகப்படியான சார்ட்டர் விமானங்களை (தலா 11-12 விமானங்கள்) வைத்துள்ளன.
நேற்று விபத்துக்குள்ளான லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு சுமார் ரூபாய்.4.5 லட்சம் முதல் .5.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவில் குளோபல் 6000 (Global 6000) மற்றும் கல்ப்ஸ்ட்ரீம் G650 ஆகிய பிரைவேட் விமானங்களுக்குத்தான் மிகவும் அதிக வாடகை கொண்டவை.
ஒரு மணிநேரத்திற்கு ரூபாய்.12 லட்சம் முதல் 18 லட்சம் வரை. ஒரு நாள் என்றால், குறைந்தது இரண்டு கோடி ரூபாய் ஆகலாம்.
இந்தியாவில்
முகேஸ் அம்பானி, கௌதம் அதானி, கலாநிதி மாறன் ஆகியோர் சொந்தமாக விமானம் வைத்துள்ளனர்.
நடிகர் ரஜினி, நயன்தாரா ஆகியோரும் சொந்த விமானம் வைத்திருப்பதாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் அது, உறுதிப்படுத்தப்படவில்லை.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் பிரச்சாரங்களுக்கும், தனிப் பயணங்களுக்கும் வாடகை விமானங்களை எடுக்கிறார்.
இன்று விபத்துக்கு உள்ளான விமானத்தை வாடகைக்கு விட்ட, பம்பார்டியர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திலும் வாடகைக்கு எடுத்திருக்கிறார்.
ஆனால், பெரும்பாலும் GMR Aviation என்ற நிறுவனத்திடமிருந்து Embraer 135BJ Legacy 600 ரக விமானங்களையே வாடகைக்கு எடுப்பார்.
சமீபத்தில் சி.பி.ஐ. விசாரணைக்காக டில்லி சென்ற போதும் இந்த விமானத்தைத்தான் பயன்படுத்தினார்.
இது ஒரு 'ட்வின்-டர்போபிராப்' (Twin-Turboprop) வகை விமானம். அதாவது இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும். கூடுதல் பாதுகாப்பானது.
தவிர, இந்த விமானத்தில் அலுவலக அறை, உணவருந்தும் அறை, சமையலறை, படுக்கை அறை உண்டு. 13 பேர் வரை பயணிக்கலாம். மணிக்கு சுமார் 830 கி.மீ. வேகத்தில் பறப்பது.
ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை வாடகைக் கட்டணம் எனத் தெரிகிறது. ஜனவரி 11 அன்று சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்ட விஜய், ஜனவரி 13 அன்று சென்னை திரும்பினார். கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய் வரை வாடகை செலுத்தி இருப்பார்
இந்த வகை விமானங்கள் இதுவரை விபத்துக்கு ள்ளானதில்லை. விதிவிலக்காக இரு சம்பவங்களே உண்டு.
2023 ஆகஸ்ட் 23 அன்று, ரஸ்யாவில், தனியார் ராணுவப் படையை நடத்தி வந்த யெவ்ஜெனி பிரிகோஜின் பயணித்த இதே எம்பிரேயர் லெகஸி 600 விமானத்தில் பறந்த நடுவானில் வெடித்துச் சிதறியது. பிரிகோஜின் உட்பட விமானத்திலிருந்த 10 பேரும் உயிரிழந்தனர்.
ஆனால், "இது தொழில்நுட்பக் கோளாறால் நடந்த விபத்தல்ல. ஏவுகணைத் தாக்குதல் காரணமாகவே இது நடந்திருக்கலாம்" என்று சர்வதேச அளவில் நம்பப்படுகிறது.
அதேபோல், 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி நடந்தது. பிரேசிலில் நாட்டு வான்வெளியில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இதே Embraer Legacy 600 ஜெட் விமானம்.
எதிரே வந்த Boeing 737 பயணிகள் விமானத்துடன் நடுவானில் மோதியது.
மிகப்பெரிய போயிங் விமானமான அது அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கியதில் பயணித்த 154 பேரும் உயிரிழந்தனர்.
ஆனால், எம்பிரேயர் விமானத்தின் இடதுபக்க சிறகில் மட்டுமே சிறு சேதம். விமானிகள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, அருகிலிருந்த ஒரு ராணுவ விமானத் தளத்தில் அதைத் தரையிறக்கினர். அதிலிருந்த 7 பேரும் எந்தக் காயமுமின்றி உயிர் பிழைத்தனர்.ஆனால் இப்போது விபத்தில் மறைந்த தலைவர் அஜீத் பவார் அசாதாரண புத்திசாலி, முன்னால் முதல்வர் மற்றும் இந்திய ராணுவ மற்றும் விவசாய அமைச்ர் சரத்பவாரின் ரத்த உறவு, மராட்டியத்தின் தனித்த சிங்கம் இலர் சிவசேனா பால் தாக்கரேவுக்கு எதிர்மாறான தலைவர், அடங்காத கடந்த தலைமுறையிலிருந்து அதிகார விரும்பியானவர். அஜித்பவார்.
தற்போது விமான விபத்தில் அஜித்பவார் உள்ளிட்ட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர். பாரத ஜனாதிபதி, பிரதமர் எனத் தொடங்கி அனைத்து பிரபலங்களும் ’ஆகா, ஒகோ..’ என்று அஜித்பவாரை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.. என்றால், இது தான் இன்றைய சூதுவாது நிறைந்த பவர் பாலிடிக்ஸின் நிதர்சனம்!
தற்போது பாஜகவின் முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்தவர் மீது அதி பயங்கர ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. பாஜக கூட்டணிக்கே இதை எப்படிச் சமாளிப்பது ? எனப் பெரும் தர்ம சங்கடத்தைத் தந்தது! பாஜக கூட்டணியில் தனக்கு ’பாதுகாப்பற்ற நிலை’ என்றதும், மீண்டும் சரத்பவாரிடம் சரணடைந்தார் அஜித்பவார்!
அவரது இறப்பில் பல சந்தேகங்கள் என மேற்கு வங்காள தலைவர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
அணைத்தும் அரசியல் காரணமாகவே
உண்மையில் இவரை ‘POWER’ ரை இடைவிடாது பற்றிக் கொண்டிருந்த பவார் அல்லது பவர் எனலாம்!
மாறி மாறி, கூட்டணி தாவும் சந்தர்ப்பவாத
கூச்ச நாச்சமற்ற ஊழல்வாதியும் ஆகும், மறுபக்கம்
மானரோஷமற்ற அதிகார விரும்பி.,
துரோகத்தின் தலைமகன்,
கொள்கை கோட்பாடில்லாத அரசியலின் இலக்கணம்
என அஜித்பவாரைச் சொல்லலாம்.
நான்கு முறை மகாராஷ்டிராவின் துணை முதல்வாரான போதும், கடைசி வரை முதல்வராகவே முடியவில்லை.
அரசியலில் அடி எடுத்து வைத்தது தொடங்கி எப்போதும் அதிகாரப் பதவிக்கென்றே ஆலாய் பறந்தார்.
முதன்முதலில் புனே நகரக் கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த போதே 'கோல்மால்களின் தலைவர்' எனப் பெயரெடுத்தவர்!
இவர் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த காலம் துவங்கி மகார்ச்ஷ்டிராவின் 'விதர்பா'வில் விவசாயிகளின் தற்கொலை ஆரம்பித்தது!
மின்துறை அமைச்சராகி மக்களுக்கெல்லாம் மின் கட்டண உயர்வவெனும் அதிர்ச்சி வைத்தியம் தந்தார்.
மண்வளப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது மண் வளத்தை அதாவது புவியியல் சுரங்கம் கனிமம் சூறையாடினார். மூத்த தலைவர் சரத்பவார்
சொந்த சித்தப்பாவையே, ''நீ செத்தப்பா'' என்று இவர் பேசிய துரோகச் சம்பவங்கள் ஏராளம்.
2019-ஆம் ஆண்டில் காங்கிரஸ், என்.சி.பி, சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிடப்படுகிறது. அந்தச் சூழலில் இரவோடு இரவாக கட்சி தாவி, அதிகாலையில் பாஜக வின் அமைச்சரவையில் துணை முதல்வரானதோடு, என்.சி.பியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னையே ஆதரிப்பதாகச் சொல்லி சரத்பவாரின் தே வா காங்கிரஸ் கட்சியை உடைத்து முதுகில் குத்தியவர் தான் அஜித்பவார்.
அப்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டது. போதுமான சட்டமன்ற உறுப்பினர்களை உஷார்படுத்தி தற்காப்பு செய்ய குதிரை பேர அரசியல் செய்ய முடியாததால், அஜித்பவார் மீண்டும் சரத்பவாரிடம் சரணடைந்தார்! உடனே, மகனைக் கட்டித் தழுவி அரவணைத்து, சிவசேனா அமைச்சரவையில் துணை முதல்வராக்கி அழகு பார்த்தது, பவர் செக்டாராக 75 ஆண்டு இருக்கும் சரத்பவாரின் குடும்ப அரசியல்!
நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது தெருவில் உள்ள குப்பைத் தொட்டியை நோக்கிய ஓடும் என்பது போல மீண்டும் சித்தப்பாவிற்கு துரோகம் இழைத்து 29 சட்டமன்ற உறுப்பினர்களைத் தூக்கிக் கொண்டு ஓடியவர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆட்சியில் துணை முதல்வரானார். மனைவி அணியில் இருந்த
மருத்துவர்
ராமதாஸ் துனைவி ணி தாவ துரோகம் செய்த ஜிகே. மணி செயலால் மருத்துவர் அன்புமணியிடம் கட்சியையும், சின்னத்தையும் பறிகொடுத்தது போல மூத்தவர் சர்த்பவாரும் தான் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் பெயரையும், கட்சியின் கடிகாரம் சின்னத்தையும் அஜித்பவாரிடம் இழந்தார்.
இப்படித் தன் நலம் சார்ந்து ஓயாத அதிகார துஸ்பிரயோக துரோக ஆட்டம் ஆடிய பவர் செகடராக விளங்கிய அஜித்பவாரை காலம் கபளிகரம் செய்து விட்டது.. அவரது கடிகார முள் நேற்றுடன் நின்றது என்பதா? அல்லது வினைப் பயனால் வந்த விதி என்பதா? அரசியல் எதிரி
இடத்தில் சேர்ந்து கேடாக பல காரியங்களை நிகழ்த்தியவர் மரணத்தில் மர்மம் உள்ளது என்ற பேச்சு பலமாகவே எழுந்துள்ளது. ராஜ பரிபாலன அதிகார யுத்தத்தில் கொலை என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றே அரசியல் என்கிறது,. மக்கள் ஜனநாயக யுகத்திலும் அது ராஜசேகரரெட்டி நடிகை சௌந்தர்யா என கோலோச்சவே செய்கிறதோ..?
யார் கண்டது..? மேலுலகத்தில் ஒரு அதிகார யுத்தம் வருமென்றால், அந்த ஆண்டவனையே கவிழ்த்துவிட்டு, அவன் ஆசனத்தை அபகரிக்கத் தயங்காதவர் தான் அஜித்பவார்! பவர் என்பது பவார் என்பது இனி மராட்டியத்தில் மாறும். அதற்கு மஹாகவி பாரதி பாடிய சிங்க மராட்டியர் தம் உறவு கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளித்த கதை தஞ்சாவூர் மராட்டியர் நாயக்க மன்னர்கள் கால யுத்த கதை தான் தற்போது ஏகோசி வெங்கோசி, சிவாஜி கதை போல நடக்கிறது.





























கருத்துகள்