அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்க அதிபர் அறிவிப்பு
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
வெனிசுலா கம்யூனிச நாடு. வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் எப்போதுமே ஆகாத நிலை. இரண்டு நாடுகளுக்குமிடையே மோதல்கள் இருந்து வந்த வண்ணமுள்ளன. வெனிசுலா மீது பல வர்த்தகத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாகவே வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்படும் என சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த முறை அதனை நடத்தியம் விட்டார். வெனிசுலா தலைநகர் கராகஸிஸ் வெடிகுண்டு சத்தமும் பயங்கர தாக்குதல் சத்தமும் கேட்பதாக தகவல்கள் வெளியாகின.
அமெரிக்க ராணுவம் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. போர் விமானங்கள் பறக்கும் சத்தங்கள் கேட்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெனிசுலா மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ராணுவ நடவடிக்கையை சுட்டிக்காட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கொலம்பியா, கியூபா, ஈரான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் செயல்பாட்டை உடனடியாகக் கைவிட வேண்டும் என கூறியிருக்கின்றன . வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களையும் அரிய வகை கனிம வளங்களையும் கைப்பற்றும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் தன்னை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டுமென தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என வெனிசுலா அதிபர் மதுரோ நீண்டகாலமாக புகார் கூறி வந்தார். இந்த நிலையில் அவர் நாடுகடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்தது.
வெள்ளை மாளிகையில் பேட்டி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நிக்கோலஸ் மதுரோவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் USS ஐவோ ஜிமா கப்பலில், கண்களில் கருப்பு துணி கட்டப்பட்டும், கைகளில் விலங்கு போடப்பட்ட நிலையில் மதுரோ பிடித்து வரப்பட்டுள்ளார்.
கரகாஸ் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து, மதுரோவைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொண்ட சில மணி நேரங்களில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது.
வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் நுழைவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த் குற்றம் சாட்டி வந்தார்.
இதில் அமெரிக்கா வெனிசுலா இடையே நீண்ட நாட்களாக மோதல் அதிகரித்து வந்த நிலையில் தான் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கியது. கரகாஸ் முழுவதும் முக்கியமான இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
காரணமாக குடியிருப்பாளர்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். உடனடியாக, அமெரிக்க சிறப்புப் படைகள் மதுரோ தங்கியிருந்த பாதுகாப்பான இடத்திற்குள் நுழைந்து அவரைக் கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது. . மதுரோவும் ஃபுளோரஸும் சில மணி நேரங்களுக்குள் வெனிசுலா மண்ணிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அடுத்து நாட்டிற்குள் புகுந்த அந்த நாட்டின் அதிபரையே கடத்தி கொண்டு வந்துள்ள சம்பவம் உலக நாடுகளை உற்று நோக்கச் செய்துள்ள நிலையில் தான் நாடு கடத்தி வரப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிட்டதில் அவர் கைகளில் விலங்கு போடப்பட்டும், கண்களில் கருப்பு துணி கொண்டு மறைக்கப்பட்டும் இருப்பது போன்ற படம் வெளியானது.
வெள்ளை மாளிகையில் பேசிய டொனால்ட் டிரம்ப் கூறியது:- "புதிய அரசு வெனிசுலாவை ஆளும் வரை அமெரிக்காவே அந்நாட்டை நிர்வகிக்கும்.. வெனிசுலாவின் எண்ணெய் உட்கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வோம். எங்கள் ராணுவ பலத்தின் முன்பு வெனிசுலாவின் ராணுவம் மண்டியிட்டது. சட்டவிரோதியான வெனிசுலா அதிபர் மதுரோவை நீதியின் முன் நிறுத்தியுள்ளோம்.
சட்டவிரோத போதைப் மருந்து பொருட்களை உலகம் கடத்துவதை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது. அமெரிக்கா தற்போது பாதுகாப்புடன் இருக்கிறது. வாஷிங்டன் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். சர்வதேச சட்டம் மதிக்கப்படவில்லை. வெனிசுலா எண்ணெய் கட்டமைப்பை அமெரிக்கா சீர் செய்யும். அமெரிக்காவை மட்டுமல்ல பிராந்தியத்தையே அச்சுறுத்தினார் மதுரோ. வெனிசுலா மீது இனி தாக்குதல் நடத்துவதற்கு அவசியமில்லை. அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நன்றி, இன்னும் வலுவான தாக்குதலுக்கு கூட தயாராகத் தான் இருக்கின்றோம். எனப் பேசினார்.
டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைக்கு கியூபா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவும் தெரிவித்தன




கருத்துகள்