தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பெற்ற ஓய்வு பெறும் கடைசி மாதத்தில் பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாகவே வழங்கப்படும்.
50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு பணியாளர்களின் 10 சதவீதம் பங்களிப்பு பணம் பிடித்தம் செய்து பணிக்காலத்தில் எடுக்கப்படும்.
ஓய்வூதியதாரர் திடீரென இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில், 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவிப்பு ஓய்வூதியம்
அரசு பணியாளர்களுக்கு 22 வருடம் முடிந்து, இந்த ஆட்சியில் கடைசி மூன்று மாதங்கள் உள்ள நிலையில் வந்த அறிவிப்பு இது, காப்பா!இல்லை முழுமையான ஆப்பா! என்பது குறித்து ஒரு விரிவான பார்வை
பணியாளர்களின் மாதாந்திர சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெறும் போது பென்ஷன் எனும் ஓய்வூதியம்
CPS ஊழியர்,
பணி ஓய்வு பெறும் போது அவர்களின் பிடித்தம் செய்து செலுத்திய 10 சதவீதம் அரசு செலுத்திய 10 சதவீதம் இதற்கு வட்டி 8 சதவீதம் எல்லாம் சேர்த்து, சுமாராக ரூபாய் ஒரு கோடி கையில் வாங்கிக் கொண்டு போகலாம் என்ற நிலை இனிமேல் இல்லை.
தமிழ்நாடு அரசு சிறப்பு பென்ஷன் திட்டத்தின் படி ,60 வயதில் ஓய்வு பெற்ற ஒருவர் 61ஆம் வயதில் இறந்தால் அந்த ஓராண்டில் சுமாராக 6 லட்சம் (மாதம் 1 லட்சம் என வைத்துக் கொண்டால்) பென்ஷன் வாங்கி இருப்பார்.
பழைய CPS திட்டத்தில் நீடித்திருந்தால் ஒரு கோடி ரூபாய் கையில் வைத்திருக்கலாம்.
பணியானர் சங்கம் எல்லாம் ஏமாற்றுவது மிகவும் எளிது. ஒருவர் பனிக்காலத்தில் அவருடைய சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே பிடித்தால் அரசு பங்களிப்பு + வட்டியுடன் ஒரு கோடி ரூபாய் வரும். ஒரு கோடி ரூபாய் அரசு வைத்துக் கொண்டு எனக்கு மாதம் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் பாதியை பென்ஷனாகத் தரும். இது விபூதி அடிக்கும் வேலை என சிலர் கூறும் நிலை.
ஒவ்வொரு ஊழியரும் CPS Account slip ஐ வைத்து இவ்வளவு பணம் சேர்ந்துருக்கு, அவ்வளவு பணம் சேர்ந்துருக்கிறது. ஓய்வு பெறும் போது மொத்தமாகக் கிடைக்கும் என்று இனிமேல் கூற முடியாது .
60 ஆம் வயதில் ஓய்வு பெற்று, பெரும்பாலானவர்கள், அடுத்த 10 ஆண்டுகளில் காலமாகி விடுவார்கள். எனவே அரசுக்கு இது நல்ல லாபம் இது IAS படித்த நிருவாகப் பணியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இப்போதும், CPS போதும்; அரசு தரும் பென்ஷன் வேண்டாம் என்று முடிவு எடுக்க ஒரு ஆப்ஷன் கொடுத்தால் CPS - ஐ தேர்ந்தெடுப்பவர்கள் தான் புத்திசாலி.
இன்று வரை ஊழியர்கள் CPS க்கு கட்டிய சந்தா தொகையை, அப்படியே GPF அக்கவுண்டில் மாற்றி விடுகிறேன். அதற்குரிய வட்டியும் கணக்கில் சேர்த்து விடுகிறேன். அரசாங்கம் போட்ட காண்ட்ரிபியூஷனை அரசாங்கமே எடுத்துக் கொள்ளும். என்று சொல்லி, இதே பென்சன் ஸ்கீம் அறிவித்திருந்தால், ஜாகடோ ஜியோ சங்கங்கள் கூட்டமைப்பு ஜெயித்ததாக அர்த்தம்.
இப்போது உங்களுக்கு நேந்திரம் வாழைப்பழத்தை உப்பு தடவிக் கொடுத்திருக்கும் நிலை தான் நமது ஆடிட்டர் கூறும் தகவல்
உங்களது பணத்தை அரசாங்கம் தன் கணக்குக்கு மாற்றி விடும். அதிலிருந்து மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து போன்றவைக்கு அந்தப்பணம் செலவிடப்படும்.
100 சதவீதம் ரிசல்ட், ஆவரேஜ் மார்க் பிக்கப், இல்லம் தேடி கல்வி, திறன்... இப்படி புதுசு புதுசா 10 ஸ்கீம் கொண்டு வந்து பிரஷர் ஏத்தினம்னா சர்வீஸ்லயே பாதிப்பேர் செத்துப் போயிருவான். பென்ஷன் தரத் தேவை இல்லை. நேரடியாக ஃபேமிலி பென்ஷனை கொடுத்து விடலாம். அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம்.
எலிப் பொறியில் வைத்த மசால் வடை எனும் ஆபத்தை அறியாமல் எலி வந்து தற்போது பழைய பென்சன் ன நினைத்து புதிய பருப்பு வடையைக் கடித்துள்ளது இனி ஊர்ல இருக்கும் எல்லோரம் 'இவருக்கென்னப்பா பென்ஷன் வந்துருச்சு' என்று வயிறு எரிஞ்சு பேசுவார்கள் வரவிருந்த ஒரு கோடியை விட்டுட்டு, கடைசியா வாங்குன Basic pay ல, பாதியை அதாவது பென்ஷன்கற பெயரில் வாங்கனும். பணி ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் அசல் கிடைக்கும்.
ரூபாய் ஒரு கோடியை வங்கியில் டெபாசிட் செய்தாலே ஆண்டுக்கு 9 லட்சம் வருமானம். வாங்கப் போற பென்ஷன் என்பது வட்டி மட்டுமே. அசல்?.
அரசு ஊழியரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு, அதற்கு மாதம் ஒரு 50,000 ரூபாய் வட்டி அரசு தரும். அந்த அரசு ஊழியர் இறந்த பிறகு அவருடைய மனைவிக்கு அதில் 60 சதவீதம் தரும். அவருடைய மனைவியும் இறந்த பிறகு அரசு அப்படியே அந்த ஒரு கோடி ரூபாயை அரசு கணக்கில் போட்டுவிடும். அரசு ஊழியரின் மனைவி அரசு ஊழியருக்கு முன்பே இறந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம்.
இதுதான் புதிய பென்சன் திட்டத்தின் சிறப்பு இது திருநெல்வேலி அல்வாவா அல்லது திருப்பதி லட்டா,. இல்லை, அதில் உதிர்ந்த பூந்தியா இதற்காகத்தான், அரசுக்கு ஆதரவாக, அரசின் வருமானத்தை உயர்த்த, ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட சங்கங்கள் இதுநாள் வரை நடத்திய நாடகம். இப்போது அதிருப்தியில் இருந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு ஆதரவாக திருப்பியதற்கான சன்மானத்தோடு, நன்றி அறிவிப்பு கூட்டங்கள் இனி இனிதே நடக்கும்.
சங்கங்களை நம்பிய ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இன்று பெட்டியில் அடைத்த நிலையை காணலாம் அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் இன்றைய தினம் உழைப்பு என்ற சிவப்புக்குப் பின்பாக கருப்பு ஒளிந்திருக்கும் நிலையைக் காணலாம்
CPS ஊழியர், பணி ஓய்வு பெறும் போது.. நாம் செலுத்திய 10 சதவீதம் அரசு செலுத்திய 10 சதவீதம் இதற்கு வட்டி 8 சதவீதம் எல்லாம் சேர்த்து, சுமாரா ரூபாய் ஒரு கோடியளவில் கையில் வாங்கிக் கொண்டு போகலாம் என்ற நிலை இனி இல்லை.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த, "உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் TAPS-க்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்பு திட்டமிட்டபடி ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவோமென்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நகலாகத் தான் உள்ளது. மத்திய அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் அத்திட்டத்தினை ஏற்கவில்லை என்பது தான் இன்றைய நிலை. பழைய ஓய்வூதியம் என்பது அரசு ஊழியரின் பங்களிப்பில்லாமல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமையாக இருந்தது. ஆனால், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் மீண்டும் ஊழியர்களிடம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலாவது அரசு பங்குத் தொகை 10 சதவீதமென இருந்தது. தற்போது ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் அரசே ஏற்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்: தமிழ்நாடு முதல்வர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிப்பார் என ஆவலுடன் காத்திருந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பேரிடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2.0-ஐ அதாவது தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நகலாகத் தான் உள்ளது. மத்திய அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் அத்திட்டத்தினை ஏற்கவில்லை என்பது தான் இன்றைய நிலை. பழைய ஓய்வூதியம் என்பது அரசு ஊழியரின் பங்களிப்பில்லாமல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமையாக இருந்தது. ஆனால், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் மீண்டும் ஊழியர்களிடம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலாவது அரசு பங்குத் தொகை 10 சதவீதம் என இருந்தது. தற்போது ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஓய்வூதியப் பலன்களை முறையாக வழங்காத அரசின் இந்த அறிவிப்பு இப்பட்டியலில் அரசு ஊழியர், ஆசிரியர்களையும் சேர்க்க முயற்சிப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம்.
இத்திட்டத்தில் பணியாளர் பங்களிப்புத் தொகை திரும்ப வழங்குவது (lum-sum) குறித்து எந்த ஒரு தகவலும் குறிப்பிடப்படவில்லை. இது ஓய்வு பெறும் நாளில் ஒரு பணியாளருக்கு மிகுந்த ஏமாற்றத்தை தரும். ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது அவருக்கு மருத்துவச் செலவுகள்,பிள்ளைகளின் கல்வி, திருமணம், வீடு கட்டுதல், கடன் திரும்பச் செலுத்துதல் போன்ற பல முக்கிய கடமைகள் இருக்கும். இவை அனைத்தையும் ஈடுகட்ட அவரது பங்களிப்பு சேமிப்பிலிருந்து திரும்ப வழங்குவது குறித்து இத்திட்டத்தில் உறுதி செய்யப்படவில்லை. அதற்கு மாற்றாக பணிக்கொடை வழங்க உள்ளோம் என அரசு தெரிவித்துள்ளது. உண்மையில் சொல்லவென்றால் கடந்த 23 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த அரசால் பணிக்கொடை வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வந்தனர். ஓய்வூதியச் சட்டம் வேறு, பணிக்கொடை சட்டம் என்பது வேறு.
தேர்தலை மனதில் வைத்து ஊழியர்களைத் திருப்திப்படுத்துகிறோம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டமானது "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதை போல" இருப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். 20 ஆண்டு காலப் போராட்டம், முதல்வர் அறிவித்து விட்டார், பெற்றுக் கொண்டு பாராட்டுவதை விட்டு விட்டு விமர்சிக்கிறீர்களே என கேட்கலாம். உண்மையில் அரசு தன் கடமையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நழுவிக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
சிவப்புக் கொடி ஏந்தி ஊழியர் நலனுக்காகப் போராடி வந்தவர்கள் எல்லாம், வெள்ளைக் கொடியோடு கோட்டை, கொத்தளத்தில் நிற்பதால் தான் உழைப்பாளி மக்களும், பாட்டாளிகளும், ஏன் படித்த அரசு ஊழியர், ஆசிரியர்களும் இன்று வீதியில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளோம்.
போராட்டத்தில் உணர்வோடு களத்தில் நிற்பவர்களின் வெற்றி என்பது சர்வநிச்சயம் என்று எங்களுக்கு தொழிற் சங்க இலக்கணம் கற்பித்த ஆசான்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
சங்கத்தலைவர்கள் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பின் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்கால வாழ்வை சவப்பெட்டிக்குள் அடைத்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் எனவே முதல்வரின் இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் 2025 ஜனவரி 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஊழியர் சந்திப்பு பிரச்சார இயக்கத்தையும், 31-ஆம் தேதி சென்னை வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டையும், 10.02.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தையும் அறிவித்திருந்தோம். ஆனால் பேரமைப்புகள் என்று தங்களைஅறிவித்துக் கொண்ட அமைப்புகள் எல்லாம் ஜனவரி-மாதம் 6-ஆம் தேதியில் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், ஊழியர் நலன் கருதி எங்களது போராட்டத்தை ஜனவரி-மாதம் 6-ஆம் தேதிக்கு அறிவித்தோம்.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அறிவித்த முக்கியமான போராட்டங்களை எல்லாம் ஒத்தி வைத்த ஜாக்டோ-ஜியோ இன்றும் அதே நிலையை எடுத்திருப்பது எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. வாக்களித்தவாறு அரசு பழைய ஓய்வூதியத்தை அறிவிக்கவில்லை. சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர், காசநோய் பிரிவுஊழியர், தூய்மைப்பணியாளர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் கோரிக்கைகள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் ஐய்யோ இவருக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என கவலைப்படும் அளவில் எனது ஆட்சி அமையும் என தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையில் திமுக ஆட்சி அமைய கடுமையாக உழைத்து வாக்களித்ததோடு, தெருத்தெருவாக வாக்குப் பிச்சை எடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்த, வாக்களித்த அரசு ஊழியர், ஆசிரியர்களே ஏன்டா இவர்களுக்கு வாக்களித்தோம் என வேதனைப்படும் அளவில் தான் இவர்களின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை வேதனையுடன் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
"படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான், போவான் ஐயோவென்று போவான்" என்றும், அதே போல் "பாதகம் செய்வோரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி, மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா" என்று எங்கள் பாட்டன் பாரதி எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான். எனவே திட்டமிட்டபடி நாங்கள் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ஜனவரி 6 முதல் தொடங்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசு ஊழியர்களின் உண்மை மனநிலையைப் புரிந்து கொண்டு பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிலுவைக்ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிலுவைக் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பாக கிராம உதவியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். எனத் தெரிவித்துள்ளனர்.






கருத்துகள்