காங்கிரஸ் கட்சியின் முதல் சாய்ஸ் திமுக இரண்டாம் சாய்ஸ் தவெக ஆகவே தேமுதிக இலவம்பஞ்சு மரத்து கிளி நிலையில் காத்திருக்கக் காரணம் அதுவே.
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியது:
"தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 41 பேர் நேற்று கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது கருத்துக்களைத் தலைமைக்குத் தெரிவிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி 30 நிமிஷம் தமிழ்நாடு தலைவர்களுடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்குத் தேர்தல் முடிவுகள் எடுக்க ஏதுவாகக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைய விவாதங்களே எதிர்கால முடிவுகளுக்கான வழிகாட்டுதலாக அமையும்." என
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்தார் 17 ஜனவரி 2026 ல் டெல்லி இந்திரா பவனில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை க் கூட்டத்தில் பங்கேற்ற போது சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றே மாதங்கள் தான். "தி.மு.கவே கதி" என மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், செல்வம் பெருந்தகை ஒரு பக்கமும்... "ஏன் த.வெ.க வுடன் கைகோக்கக் கூடாது?" எனக் கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்பு கருதினாலும் அந்த அரங்கில் இரகசிய வாக்கெடுப்புக்கு நடத்தப்படவில்லை, கூட்டணியை முடிவு செய்து விட்டுத்தான் கூடடமே நடக்கிறதோ என எணணும் படி தான நிகழ்வுகள் இருந்ததாகப பேசப்பட இந்தக் குழப்பங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட ஐவர் குழு, "70 தொகுதிகள். ஆட்சியில் பங்கு!" என தவெகவைக் காடடி திமுகவின் முதல்வர் ஸ்டாலினிடம் தூதுவிட்டது. இதையடுத்துத்தான் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்பதற்கு அகில இந்திய தலைமை முடிவு செய்தது. அதன்படி நேற்று மாலை டெல்லி இந்திரா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொணடார்கள். அவர்கள் தரும் பதிலையடுத்து ராகுல் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுப்பார். இதற்கிடையில் த.வெ.க வுடன் செல்லும் முடிவை அகில இந்திய தலைமை எடுத்தால் தனது பதவியை மாநில தலைவர் செல்வம் பெருந்தகை ராஜினாமா செய்யக்கூடும்" என்று எதிர்பார்ப்புகள் இருத்தாலும் தேர்தல் செலவுக்கு பணமும், அதிக சீட்டுககளும் பெறும் தந்திரம் தான் நேற்று நடந்த நிகழ்வு,
இப்படியான நிலையில் காங்கிரஸ் கட்சிக் கூடாரம், பரபரப்புடனே காணப்படுகிறது. இநத நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணியைப் பற்றிய விவாதத்தை பொதுவெளியில் பேசக் கூடாது. சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட கூடாது. தலைமை எடுக்கும் முடிவுகளை மாநில காங்கிரஸ் கமிட்டி கட்டுப்பட வேண்டும்.கட்சி கொள்கையும், தமிழ்நாட்டின் மக்களின் நலனும் முன் வைத்துப், அனைத்து தலைவர்களுக்கும் ஒழுங்கு கடைபிடித்து, சமூக ஊடகங்களில் மற்றும் பொதுவெளியில் கற்பனைகள், கருத்து பரப்பல்களை தவிர்க்க வேண்டுமென்பதன் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.புதுச்சேரி தொடர்பான தேர்தல் விவகாரங்களையும் ஆலோசனை கூட்டத்தில் விவாதித்தனர். புதுச்சேரி PCC தலைவர்கள், 21ஆம் தேதி முதல் முழு புதுச்சேரி முழுவதும் பெரிய பேரணி (பயணப்பயணம்) தொடங்கவுள்ளதாக தெரிவித்தனர். அதில் தலைமைக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

















கருத்துகள்