சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
2026 பிப்ரவரி 1-க்குப் பின் புதிய ஃபாஸ்டாக்-ஐப் பயன்படுத்தும் கார்களுக்கு உங்கள் வாகனத்தை அறியுங்கள் (கேஒய்வி) நிறுத்தப்படுகிறது
பொது வசதியை மேம்படுத்துவதற்கும், நெடுஞ்சாலை பயனர்கள் எதிர்கொள்ளும் செயல்பாட்டுக்குப் பிந்தைய இன்னல்களைப் போக்குவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, 2026, பிப்ரவரி 1 முதல் வழங்கப்படும் அனைத்து புதிய ஃபாஸ்டாக்-ஐ பயன்படுத்தும் கார்களுக்கும் (கார்/ஜீப்/வேன் வகை ஃபாஸ்டாக்) உங்கள் வாகனத்தை அறியுங்கள் (கேஒய்வி) நடைமுறையை நிறுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
செல்லுபடியாகும் வாகன ஆவணங்கள் இருந்தபோதும், ஃபாஸ்டாக் செயல்படுத்தலுக்குப் பின் கேஒய்வி தேவைகள் காரணமாக சிரமத்தையும் தாமதத்தையும் சந்தித்த லட்சக்கணக்கான பொதுவான சாலைப் பயனர்களுக்கு இந்த சீர்திருத்தம் பெருமளவு நிவாரணத்தைத் தரும்.
ஏற்கனவே கார்களுக்கு வழங்கப்பட்ட ஃபாஸ்டாக்-களுக்கு, கேஒய்வி வழக்கமான தேவையாக அன்றி இனி கட்டாயமாக இருக்காது. ஃபாஸ்டாக்-கள் தவறவிடுதல், தவறாக வழங்கப்பட்டிருத்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்கள் பெறப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே கேஒய்வி தேவைப்படும். எந்தவொரு புகாரும் இல்லாத நிலையில், ஏற்கனவே உள்ள கார் ஃபாஸ்டாக்-களுக்கு கேஒய்வி தேவையில்லை


கருத்துகள்