புதுக்கோட்டையில் இராமேஸ்வரம் திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள இரண்டு ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வையாபுரி எனும் துரை வைகோ தலைமையில் நடந்தது, நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு மிக அவசியத் தேவையான 15 வருடக் கோரிக்கை புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் (L.C.NO: 376), புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் (L.C.NO: 372) ஆகிய இரண்டு பகுதிகளில் பகல் நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த இரண்டு இரயில்வே கேட்டைக் கடந்து செல்லும்போது, உரிய நேரத்தில் தமது நிறுவனங்களுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும், இந்தப் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் கட்ட வேண்டுமென்றும், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் இரயில்வே துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உயர் அலுவலர்கள் (NHAI), மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்களிடம் இதுகுறித்து பலமுறை வலியுறுத்தி இந்த மேம்பாலப் பணிகளைத் துரிதப்படுத்தவும், தாமதங்களைத் தவிர்க்கவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28.01.2026 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் திருமதி அருணா அவர்கள் முன்னிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அலுவலர்கள், இரயில்வே துறை அலுவலர்கள், மாநில நெடுஞ்சாலைத்தறை உயர் அலுவலர்கள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் வருவாய் நில நிர்வாகத் துறை அலுவலர்கள் அடங்கிய கூட்டுக் குழுக் கூட்டம்
காலை 10.30 மணிக்குத் தொடங்கி, பகல் 12.45 மணி வரை நடந்ததில் மத்திய ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத் துறை என பல துறைகளின் ஒத்துழைப்பில் தான் இந்தப் பணிகள் முடிவடைய வேண்டும். ஆகவே, இனியும் தாமதமில்லாமல் நடக்கும் நிலை வேண்டும் புதுக்கோட்டை மக்கள் 15 வருடங்களாக இந்த போக்குவரத்து நெருக்கடியை அனுபவிக்கின்றனர். ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு கோப்புகள் நகர்வதில் காலதாமதம் பிரச்சனை இருந்தால் தெரிவியுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும், இந்த இரு மேம்பாலப் பணிகளையும் விரைவில் தொடங்கி முடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர்,
திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியைப் பொறுத்தவரை, நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கான 4(1) நோட்டீஸ் மற்றும் பணி நடைமுறை இரண்டு மாதங்களில் முடிந்து விடுமென்றும். அதன்பின் ரயில்வே துறை பணிகளை மேற்கொண்டு 16 மாதங்களில் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவுற்று, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் எனவும்
கருவேப்பிலான் ரயில்வே கேட் பொறுத்தவரை, தற்சமயம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திருச்சிராப்பள்ளியில் இருந்து - காரைக்குடி வரை செல்லும் சாலையை ரூபாய்.2000 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு முடிவெடுத்துள்ள இந்தத் திட்டத்துடன் கருவேப்பிலான் ரயில்வே கேட் மேம்பாலம் திட்டம் சேர்க்கப்பட்டு, பாலம் அமைத்தல் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கான முழுமையான செலவினத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமே ஏற்றிருக்கிறது.
திருச்சிராப்பள்ளி - காரைக்குடி நான்கு வழிச்சாலை பணிகளுக்கு தேசிய திட்டமிடல் குழுவின் ஒப்புதல் (NATIONAL PLANNING GROUP) 2026 ஜனவரி மாதம் துவக்கத்தில் கிடைக்கக்கூடய நிலையில் வடிவமைப்பு ஒப்புதலும் (DESIGN APPROVAL) கிடைத்தது. நிலம் கையகப்படுத்திடுவதற்கு முன்பு எந்தந்த நிலங்கள் என்பன குறித்த அறிக்கையை, பிப்ரவரி மாதத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பார்கள். 18 மாதங்களில் நிலம் கையகப்படுத்திடும் பணிகள் மற்றும் பிற பணிகள் நிறைவுற்று அரசாணை (G.O) வெளியிடப்படும். அதன்பின்னர் கருவேப்பிலான் கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தொடங்கி, மூன்று வருட காலத்திற்குள் மக்களிடம் அர்ப்பணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது
இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினருடன் புதுக்கோட்டை மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தியும் பங்கேற்றார்,




கருத்துகள்