திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் செங்கோன்மை அதிகாரத்தில் "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்". (543) “கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை; வடமொழி வாசகம் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். (560)
நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.
சங்க நூல்களில் ஒன்றான மணிமேகலையில் திருக்குறள் பாக்களுள் ஒன்று அப்படியே எடுத்தாளப்பட்டதைக் காண்க:
"தெய்வங் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை". (குறள்-55)
இதை மணிமேகலையில்,
"தெய்வங் தொழாஅன் கொழுகற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய்’ ’
(சிறைசெய் காதை, வரி 59-61) கூறப்பட்டது. வள்ளுவம் என்பது வெறுமனே இலக்கியமாக மட்டுமன்றி, தமிழ் மக்களின் பண்பாடு, ஆன்மீக அரசியல் அறம் சார்ந்த வாழ்வியல் ஆகியவற்றின் ஆதாரமாகிறது. “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” எனப் பிரதமர் நரேந்திர மோடி!
திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சியாக
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் நாளையொட்டி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்த தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று தைப்பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கலை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் தெய்வப் புலவராம் திருவள்ளுவரை நினைவுகூரும் வகையில் இன்று (ஜனவரி 16) திருவள்ளுவர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதில், “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். எனத் தெரிவித்துளள நிலையில். திருவள்ளுவருக்கு மூன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலை உள்ளது அதில் உண்மையான நாளெது. ஒரு பார்வை நமக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து தைப் பொங்கல் பண்டிகையை ஜனவரி மாதம் 14 ஆம் தேதியில் தான் பெரும்பாலும் கொண்டாடினோம். ஆனால் கடந்த சில வருடங்களாகவும், இனி பின் வரும் வருடங்களிலும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி தான் பொங்கல் விழா கொண்டாடப் போகிறோம்,
இந்த தேதி மாற்றத்திற்கு பின் சில விஞ்ஞானப் பூர்வமான காரணமும் உள்ளது.
இந்த ஆண்டு தைப் பொங்கல் விழா ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை.
ஏன் 14ஆம் தேதி இல்லை என்கிற கேள்வி பலருக்குமே எழலாம். இந்த தேதியை மாற்றியது அல்லது அடுத்த நாளுக்கு முன்னோக்கி தள்ளிய காரணி எது?
இதைப் புரிந்துக் கொள்ள ஒரு சிறிய காலக் கணக்கீட்டு செயல்முறையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக தைப் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதியன்று தான் கடைப்பிடித்தோம்.
உண்மையில் 1935 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதியன்று தை முதல்நாள் பொங்கல் திருநாள் கொண்டாடி இருக்கிறோம். ( 2007 முதல் 2024 வரையில் அதிக அகலமான ஆண்டாக ஜனவரி 14 ல் வந்தது காரணம் லீப் வருட மாற்றம் ) அதற்கு முன்பு 1862 ஆம் ஆண்டு மற்றும் 1934 ஆம் ஆண்டுக்கிடையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதியில் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி தான். இது 2080 ஆம் ஆண்டு வரை இந்த பொங்கல் விழா நடக்கும். அதன் பிறகு 2081 ஆம் ஆண்டு முதல், அடுத்து வரும் 72 ஆண்டுகளுக்கு, அதாவது 2153 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 16ஆம் தேதியில் தைப் பொங்கல் விழா கொண்டாடப்படும்.
இந்தியத் திருநாட்டின் பஞ்சாங்கத்தின் காலக் கணக்கீட்டின் படி, ஆங்கில நேரம் அல்லது உலக நேரத்தைக் காட்டிலும் சூரிய பகவான் ஒவ்வொரு ஆண்டும் 20 நிமிடங்கள் தாமதமாக தனுஷ் ராசியிலிருந்து மகர ராசிக்கு நுழைகிறது. அதுவே திருமாளின் மகரசங்கராந்தி அல்லது அருவடைத் திருநாள் தைப்பொங்கல்
இவ்வாறு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சூரியன் ஒரு மணி நேரம் தாமதமாக மகர ராசியில் நுழைகிறது. அதாவது 72 வருடங்களின் ஒவ்வொரு சுழற்சியிலும் சூரியன் ஒரு நாள் தாமதமாக மகர ராசியில் நுழைகிறது இது பஞ்சாங்கம் துல்லியமாக கணித்த நிலை
சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம் தை மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஐப்பசி துலாம் மாதம் போல,
சூரிய பகவானின் தேர் பாதை தெற்கு திசையிலிருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம் அதுவே தெட்சினாயணமும், உத்ராயணமும். சித்திரை துவங்கும் நமது வருடப்பிறப்பு
மகாபாரதத்தில் பீஷ்மர் தை மாதம் உயிர்விட அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். இதில் தேவர்கள், ரிஷிகளின் உதயகாலம் தை மாதம் ஆகவே வழக்கம் இங்கு அணைத்து நிகழ்வும் பஞ்சாங்கம் கணிக்கிறது. ஏசுகிருஸ்து ஆண்டை விட திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடியது உதாரணமாக பொது ஆண்டு 2026 கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது, தி.பி. 2057 ஆம் ஆண்டு எனப்படும். சுமார் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருமயிலை எனும் மைலாப்பூர் திரு வள்ளுவர் கோயிலில். வள்ளுவர் அவதார நாளாக வைகாசி மாதம் வரும் அனுஷ நட்சத்திரமே, திருவள்ளுவர் ஜனன நாளாகும், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் திருநாள் தைப்பொங்கல், மகர சங்கராந்தி என்பதால், அன்றே திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படவேண்டும் என்ற கருத்தை முதலில் சொன்னவர் தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிளைள. இதை முன்மொழிந்தது 1954 ஆம் ஆண்டில், அவர் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்துக்கும் கா.பொ.இரத்தினத்துக்கும் எழுதிய கடிதத்துக்கு, கா.பொ.இரத்தினம் கடுமையான கண்டனம் தெரிவித்தார். வைகாசி அனுஷம் ஆண்டுக்காண்டு மாறுபடலாம் என்பதால் 1966 ஆம் ஆண்டில், ஜூன் மாதம் இரண்டாம் தேதியை, ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடுவதற்கான அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. மது மாமிசக் கடைகளும் மூடப்படும் ஆனால் இது 1971 ஆம் ஆண்டுமுதல் தை முதலாம் தேதிக்கு மாற்றப்பட்டது. இபபோது நடப்பது வள்ளுவருக்கு மூன்று பிறந்நநாள் கொண்டாடாப்படுவது இங்கு தான் தமிழறிஞர்கள் எனக் கூறும் நபர்கள் மிகப்பெரிய விஞ்ஞானிகள், வள்ளுவப் பண்டாரங்கள் இன்றும் குறி சொல்வது ஜாதகம் பார்ப்பது கொண்ட செட்டியூல் வகுப்பில் ஒரு பிரிவினர், புலால் உண்ணாதவர்கள் குறிப்பாக மாடடு மாமிசம் அறியாதவர்கள். அந்த வழியில் வந்ந திருவள்ளூர் அந்தக்காலத்தில் அந்தணர்கள் குறித்து பாடியுள்ளார், புலால் உணணாமை குறித்தும் பாடியுளளார், வரலாறு தெரியாத இந்த தலைமுறையை அரசியலுக்காக சிலர் இன்னும் ஏமாற்றுவதை தடுக்க வேண்டியது மத்திய வரலாற்று ஆய்வாளர்களின் கடமை









கருத்துகள்