ஸ்ரீதர் வேம்பு மனைவி விவாகரத்து வழக்கு.. ரூபாய்.15,288 கோடிக்கு 'பாண்ட்' செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.
ஜோஹோ கார்ப்பரேஷனின் தொலைநோக்கு நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, பில்லியனர் அந்தஸ்து இருந்த போதிலும், பணிவு மற்றும் அடிப்படையான வாழ்க்கைக்கு ஒரு அரிய உதாரணமாகவே திகழ்கிறார். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறு கிராமத்தில் பிறந்தவர், வெளிநாட்டில் அதிக சம்பளம் வாங்கும் வேலையின் வசதியிலிருந்து விலகி, இந்தியாவுக்குத் திரும்பி ஒரு பெரிய பணியைத் தொடர - கிராமப்புற மண்ணிலிருந்து உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கினார். அவரது பயணம் செல்வத்தைப் பற்றியல்ல, ஆனால் நோக்கம், புதுமை மற்றும் சமூகங்களை மேம்படுத்துவது பற்றியது.
ஜோஹோ மூலம், ஸ்ரீ தர் வேம்பு தென்காசி போன்ற சிறிய நகரங்களை தொழில்நுட்ப மையங்களாக மாற்றியுள்ளதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, ஜோஹோ பள்ளிகள் மூலம் இளம் சிறார்களின் திறமைகளை வளர்ப்பது மற்றும் சிறந்து விளங்குவது பெருநகரங்களிலிருந்து மட்டுமே வரத் தேவையில்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது. பளிச்சிடும் கார்களுக்குப் பதிலாக சைக்கிள் ஓட்டுவதற்கும், கிராம மக்கள் மத்தியில் எளிமையாக வாழ்வதற்கும் பெயர் பெற்ற அவரது வாழ்க்கை முறை நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கியதன் மதிப்புகளை பிரதிபலிக்கிறது. வெளிப்புற நிதியுதவியை மறுப்பதன் மூலமும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதன் மூலமும், உலக அரங்கில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள மென்பொருள் தலைவராக ஜோஹோவை வழிநடத்தினார்.
2021 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதர் வேம்பு ஒரு வெற்றிகரமான தொழில் முனைவோரை விட அதிகம் - அவரது சமூகப் பொறுப்பு, கிராமப்புற அதிகாரமளித்தல் மற்றும் அணுகக்கூடிய தொழில்நுட்பத்தின் சின்னம். எளிமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் சமூகத்திற்கான சேவை ஆகியவற்றுடன் வெற்றியை மறுவரையறை செய்ய அவரது முன் வரலாறு தொழில்முனைவோரைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
அமெரிக்கா வாஷிங்டன் - ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் ஆகியோரின் விவாகரத்து வழக்கு அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூபாய்.15,288 கோடிக்கு(1.7 பில்லியன் டாலர்) 'பாண்ட்டை' தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணி :-
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ செயல்படுகிறது. இந்த நிறுவனம் நம் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. நிறுவனத்தின் CEO வாக செயல்பட்டார். தற்போது ஜோஹோ நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியாகச் செயல்பட்டு வருகிறார்.
ஸ்ரீதர் வேம்பு இந்தியா வருவதற்கு முன்பு அமெரிக்காவில் வசித்து வந்தார். அவரது மனைவி பெயர் பிரமிளா சீனிவாசன். இவர்களது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இதற்கிடையே தான் 2020 ஆம் ஆண்டில் இந்தியா வந்த ஸ்ரீதர் வேம்பு, 2021ஆம் ஆண்டில் மனைவி பிரமிளா சீனிவாசனை பிரிவதாக அறிவித்தார்.
ஸ்ரீதர் வேம்பு - பிரமிளா சீனிவாசன் தொடர்பான விவாகரத்து வழக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீதிமன்றத்தில் நடந்தது. இதற்கிடையே தான் பிரமிளா சீனிவாசன், ஸ்ரீதர் வேம்பு மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னையும், தனது மகனையும் 2020 ஆம் ஆண்டு நிர்கதியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவர்கள் பராமரிப்புச் செலவுக்கு பணம் வழங்கவில்லை. அதுமட்டுமின்றி ஜோஹோ நிறுவனத்தில் அவரது மனைவி பெயரிலிருந்த பங்குகள் மற்றும் பிற சொத்துகளை அவரது சகோதரி, மற்றும் சகோதரி கணவர் பெயரில் மாற்றிவிட்டார். விவாகரத்துக்கு பிறகு சொத்தில் சரிபாதியை எங்களுக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்படி செய்துள்ளார் எனவும் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஸ்ரீதர் வேம்பு முற்றிலுமாகவே மறுத்தார்.
2024 ஆம் ஆண்டில் பிரமிளா நீதிமன்றத்தில் எதிர்தரப்பில் ஆஜரில்லாத ex-parte application தாக்கல் செய்தார். அதில் அமெரிக்காவில் வருவாய் ஈட்டும் ஒரு கூட்டுசொத்தை வெளிநபருக்கு மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது. அதனை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் ஸ்ரீதர் வேம்பு - பிரமிளாவின் விவாகரத்து வழக்கு கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் விவாகரத்து வழக்கில் ஸ்ரீதர் வேம்பு அவரது மனைவி பிரமிளாவின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். இதற்காக 1.7 பில்லியன் அமெரிக்க டாலரை பிணைத்தொகை பத்திரமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இன்றைய டாலர் மதிப்பில் 15,288 கோடியாகும்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது கலிபோர்னியா குடும்ப சட்டத்தின் படி, கணவன்-மனைவி திருமண உறவில் இருக்கும்போது அவர்கள் சேர்க்கும் சொத்துகள் அவர்களுக்கான சொத்துகளாகும். அந்த சொத்துகள் கணவன் - மனைவி ஆகியோர் சமமாக பிரித்து கொள்ள வேண்டும். ஆனால் கணவன் - மனைவியாக இருந்தபோது சொத்துகளை பிரிப்பது, பிறகு நடந்த சொத்து பரிமாற்றங்கள் குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
இந்த வழக்கில் திருமண உறவில் கணவன் - மனைவி சொத்துகளுக்கான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது மனைவிக்கு நியாயமான முறையில் சொத்துகளை பிரித்தளிப்பதை நீதிமன்றத்தின் வழியாக தடுக்கும் வகையில் உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி இந்த வழக்கின்போது ஸ்ரீதர் வேம்பு சார்பில் தெரிவிக்கப்பட்ட சில விளக்கங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள்