சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறந்த படைப்புகளில் சிறந்த கலைஞர்களுக்கும், சிறந்த நெடுந்தொடர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் அரசியல் காரணமாக இருந்த நிலையில், சமீப காலங்களில் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2016-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் 2014-2022 ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. 7 வருடங்களுக்கான சிறந்த திரைப்பட விருதுகளை தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது பிப்ரவரி மாதம் 13-ஆம்தேதி, துணை முதல்வர் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது
சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், மற்றும் நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூபாய்.2 லட்சமும், 2-ஆம் பரிசாக ரூபாய்.1 லட்சமும், 3 மற்றும் சிறப்புப் பரிசாக ரூபாய்.75 ஆயிரமும் வழங்கப்படும். மகளிர் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூபாய்.1.25 லட்சம் வழங்கப்படுகிறது.
இதில்
2016 - மாநகரம்,
2017 - அறம்,
2018 - பரியேறும் பெருமாள்,
2019 - அசுரன்,
2020 - கூழாங்கல்,
2021 - ஜெய்பீம்,
2022 - கார்கி
ஆகிய படங்கள் சிறந்த படங்களாகத் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவை அணைத்தும் திமுக சார்ந்த ஆதரவாளர்களின் படங்கள் மட்டுமே தேர்வானதாக அரசியல் கட்சி மற்றும் திரைப்பட நிறுவனங்கள் சார்பில் பேசப்படுகிறது,
சிறந்த நடிகர்கள் :
2016 – விஜய் சேதுபதி – புரியாத புதிர்
2017 - கார்த்தி – தீரன் அதிகாரம் ஒன்று
2018 - தனுஷ் – வட சென்னை
2019 - பார்த்திபன் - ஒத்த செருப்பு சைஸ் 7
2020 - சூர்யா – சூரரைப் போற்று
2021 - ஆர்யா – சார்பட்டா பரம்பரை
2022 - விக்ரம் பிரபு -டாணாக்காரன்
ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த நடிகைகள் :
2016 - கீர்த்தி சுரேஷ் – பாம்பு சட்டை
2017 - நயன்தாரா – அறம்
2018 - ஜோதிகா – செக்கச் சிவந்த வானம்
2019 - மஞ்சு வாரியர் – அசுரன்
2020 - அபர்ணா பாலமுரளி - சூரரைப் போற்று
2021 - லிஜோ மோல் ஜோஸ் – ஜெய்பீம்
2022 - சாய் பல்லவி – கார்கி
ஆகியோருக்கு சிறந்த நடிகைகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப்படங்கள்(சிறப்பு பரிசு) :
2016 - அருவி
2017 - தர்மதுரை
2018 - கனா
2019 - பொன் மகள் வந்தாள்
2020 - கமலி From நடுக்காவேரி
2021 - நெற்றிக்கண்
2022 - அவள் அப்படித்தான் - 2
ரோபோ சங்கருக்கு 'இரவின் நிழல்' படத்திற்காகவும், இந்திரஜா சங்கருக்கு 'விருமன்' படத்திற்காகவும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுகள் ரோபோ சங்கருக்கு வழங்கப்பட்ட கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.
சிறந்த இயக்குநர்கள்:
சிறந்த இயக்குநர்கள் விருது 2016-லோகேஷ் கனகராஜ், 2017-புஷ்கர் காயத்ரி, 2018- மாரி செல்வராஜ், 2019- பார்த்திபன், 2020- சுதா கொங்கரா, 2021- தா.செ.ஞானவேல், 2022-கவுதம் ராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த இயக்குனர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.









கருத்துகள்