பிரஷாந்த் கிஷோர் நடத்தும் IPAC நிறுவனத்தில் கொல்கத்தாவில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.
மேற்குவங்காள மாநிலத்தில் IPAC நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் பிரதீக் ஜெயின் ஆகியோருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.
IPAC நிறுவனம் தான் மேற்கு வங்காளத்தில் ஆளும் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக IPAC நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சோதனையின் போது அமலாக்கத்துறை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடர்பான பல்வேறு ரகசிய மற்றும் முக்கியத் ஆவணங்களையும், டேட்டாக்களையும், தேர்தல் வியூகங்களையும் அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றிருப்பதாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சோதனையைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக பதறி அடித்துக் கொண்டு முதல்வர் மமதா பானர்ஜியை IPAC அலுவலகத்திற்கு நேரில் சென்று அமலாக்க துறையின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
IPAC நிறுவனம் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.







கருத்துகள்