முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குளித்தலை அருகில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடவம்பாடியில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது . 


  கரூர் மாவட்டம் குளித்தலை வடடம் பாப்பையம்பாடி கிராம  விவசாயி சின்னத்துரை தனது விவசாய நிலத்தின் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக இணையவழி விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் அரவக்குறிச்சி பகுதி வடுவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார்  பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக 10,000  
ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சின்னத்துரை கரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அரசு சாட்சி முனனிலையில் சிவக்குமாரிடம்   வழங்கிய போது


மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான குழுவினர் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரை பணம் பெற்ற கையுடன் கைது செய்து விசாரணை நடத்தினர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்  .இந்த நிலையில்  ஒரு கிராம நிர்வாக அலுவலரான அரசு பணியாளர் “ கடமையைச் செய்யாவிட்டால் அவருக்கு அபராதம்!” என உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம்  
வழக்கு எண்: W.P.No.33528 of 2023 தீர்ப்பு நாள்: 30.11.2023 நீதியரசர் : P. வேல்முருகன் வழங்கியது 

ஒரு நிலம் தொடர்பாக மனுதாரர் பட்டா திருத்தம் கோரி மனு அளித்தார். விற்பனைப் பத்திரத்தில் உள்ள விவரங்களுக்கும் பட்டாவில் உள்ள விவரங்களுக்கும் வேறுபாடு இருந்தது. 27.01.2022 அன்று முதலில் மனு கொடுக்கப்பட்டது. அதன்படி உட்பிரிவு நில அளவை கூட நடத்தப்பட்டது.

ஆனால்பட்டாவில் உள்ள பிழையை சரியாகத் திருத்தப்படவில்லை. மீண்டும் 18.04.2023 அன்று மனு கொடுக்கப்பட்டது.   அதன்பின் தாசில்தார், 20.05.2023 அன்று கிராம நிர்வாக அலுவலருக்கு: விசாரணை நடத்தவும் தேவையான ஆவணங்களுடன் அறிக்கை தரவும் என உத்தரவிட்டார்.     ஆனால் கிராம நிர்வாக அலுவலர் அந்த உத்தரவைச் செயல்படுத்தவில்லை.

இந்த நிலையில் மனுதாரர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article 226 ன்படி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதை விசாரணை செய்த நீதிமன்றம் 

விற்பனைப் பத்திரமும் பட்டாவும் பொருந்தவில்லை.

தாசில்தார் உத்தரவு இருந்தும் கிராம நிர்வாக அலுவலர் விசாரணை நடத்தவில்லை. இது நிர்வாக அலட்சியம்.

அரசு அலுவலர் மற்றும் அதிகாரி அவரது  மேல் அலுவலர் அல்லது மேலதிகாரி உத்தரவை பின்பற்றுவது கட்டாயமான கடமை. அதைச் செய்யாமல் இருப்பது சட்டபூர்வமான தவறு.

நீதிமன்ற உத்தரவு 20.05.2023 அன்று போடப்பட்டதை ஒரு வாரத்திற்குள் செயல்படுத்த வேண்டும் எனவும், மனுதாரருக்கு ரூபாய் 25,000 செலவுத்தொகையாக வழங்க வேண்டும்.

அந்தத் தொகை கிராம நிர்வாக அலுவலர் வாங்கும் தனிப்பட்ட சம்பளத்திலிருந்து வழங்கப்பட வேண்டும். என்று கூறுகிறது.

அரசு அலுவலர் அல்லது அதிகாரி அலட்சியம் செய்தால், அவருக்கு தனிப்பட்ட அபராதம் விதிக்கலாம்.

பொதுமக்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி தங்களது உரிமையைக் கேட்கலாம்.

Mandamus Writ மூலம் அலுவலர் அல்லது அதிகாரிகளை கடமையை செய்யும்படி மக்கள் கட்டாயப்படுத்தலாம்.

பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் மனு கொடுத்து நீண்ட நாட்களாக பதில் வரவில்லையா? கவலை வேண்டாம் 

நீங்கள் மௌனம் காக்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றத்தை அணுகும் உரிமை உங்களுக்கு உள்ளது.

இந்தத் தீர்ப்பு ஒரு தெளிவான செய்தியைக் கூறும்

“அரசு அலுவலர் அல்லது அதிகாரி கடமையைச் செய்யாவிட்டால், நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். என்பதே அதுவாகும்.  இதனால் ஊழல் ஒழியும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...