முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேடைப்பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு 3 ஆண்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை

திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு மூன்றேகால் ஆண்டுகள் சிறை தண்டனை

திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு3 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதித்த எழும்பூர் நீதிமன்றம் 



2023-ஆம் ஆண்டு ஆளுநர்-நடிகை குஷ்பூ பற்றி ஆபாசமாக, அவதூறாகப் பேசிய பேச்சுக்கு விசாரணை முடிவில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது .




பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு செய்வதென்றால் ஒரு மாத கால அவகாசம் என தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் மாநில ஆளுநர் குறித்து அவதூறான கருத்துத் தெரிவித்தல் உள்ளிட்ட புகாரில், திமுக தலைமைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  





சென்னை கொடுங்கையூரில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைமைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி , தமிழ்நாடு ஆளுநர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் விமர்சித்த நிலையில்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கள் பங்கேற்ற மேடை நிகழ்ச்சியில் பேசிய சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில்,



அது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜுவாலிடம் ஆளுநர் மாளிகை ராஜ் பவன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

ஆளுநரின் துணைச் செயலாளர் எஸ். பிரசன்ன ராமசாமி புகாரளித்தார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு அடங்கிய வீடியோவை இணைத்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அவதூறாகவும், இழிவாகவும், மிரட்டக்கூடிய வகையிலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இது சட்டப்பிரிவு 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடிய (குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பிரிவு) குற்றம். இந்தப் பிரிவின் கீழும் பொருந்தக்கூடிய மற்ற பிரிவுகளின் கீழும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டது,








அதேபோல், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு பாஜக முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பும் புகார் மனு அளித்திருந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார். திமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் தலைமை கழக பேச்சாளராவார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அதில் ஆபாசமாகப் பேசுவது, கலகத்தைத் துாண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். பொய்வழக்கு என அவர் தரப்பு முறையீடு

இந்த வழக்கு, சென்னை 10 ஆவது பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் பி.ரேவதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், உயர் அலுவலர்களின் அழுத்தத்தின் பேரில் பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்கவில்லை, ஆகவேதிமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூன்று ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 20,000 ரூபாய் அபராதம் பிடித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தண்டனை தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் எழும்பூர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...