மதுரை நாயக்க மன்னர்களின் தலைநகரான திருச்சிராப்பள்ளியை மாற்றி முதன் முதலில் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பெருமைக்குரிய மன்னர் திருமலை நாயக்கர்.
மதுரை நகரை கலையின் வடிவமாக மாற்றினார். மதுரையில் பிரம்மாண்டமான மற்றும் பழைய பாண்டியர் அரண்மனையின் மூன்றில் ஒரு பகுதியில் ஒரு புதிய அரண்மனையை 200 தூண்களுடன் கட்டுவித்தார். அதற்காக மண் எடுக்க தோண்டிய பெரிய பள்ளத்தை கூட கலைநயத்துடன் கூடிய தெப்பக்குளமாக மாற்றினார். பின்னாட்களில் அமைச்சர் பெருமக்களும் அரச சபையினரும் திருமலை நாயக்கரின் பிறந்த நாளான தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தன்று
( அக் காலத்தில் கிரிகோரியன் காலண்டர் கிடையாது. எனவே சரியான தேதி தெரியாது ஆகவே பிறந்த மாதத்தில் வரும் பிறந்த நட்சத்திரத்தன்று பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம் ) அதே தெப்ப குளத்தில் திருமலை நாயக்கரின் ஆயுள் விருத்திக்கும் அவர் புகழினை போற்றவும் தெப்பம் விடும் திருவிழாவை துவக்கினர்.
பின்னர் அந்த கலாச்சாரம் திருமலை நாயக்கர் ஆட்சி செய்யும் அனைத்து பகுதிகளிலும் பரவி பல இடங்களில் நாயக்க மன்னரின் புகழினை போற்றும் விதமாக தெப்பம் விடும் நிகழ்வு தைப்பூசத்தன்று துவங்கப்பட்டது.
அதனை இன்றளவும் தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் நாம் காணலாம். மேலும் மதுரை தெப்பக்குளத்தில் தெப்பத்தினை வடம் பிடித்து இழுக்கும் உரிமையை அனுப்பானடி பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. இன்றளவும் அதே அனுப்பானடி மக்களே மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் வடம் பிடித்து தெப்பத்தை இழுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல பூம்பூம் மாட்டுக் காரர்கள் ஒற்றர் படையானது இவரது ஆட்சியில் தான் இவருக்கு 200 மனைவிகள் உண்டு, அதேபோல் பண்பாடு, கலாச்சாரம் கலந்த மதுரை சித்திரை தியுவிழாவை சைவ வைணவம் கலந்து உறுவாக்கியது இவர் ஆட்சி சிறப்பு அதனால இந்து மத உட்பிரிவு சண்டைகள் ஒழிந்தது. இப்படி பல உண்டு அநத ஹிந்து மறுமலர்ச்சி காணவைத்த மன்னர்களை பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் போற்றி வணங்குவோம்



















கருத்துகள்