தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த், தனித்து களம் கண்டு பின் அ.தி.மு.கவுடன் முதல் கூட்டணி அமைத்தார்.
பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க என கூட்டணிகளை மாற்றினாலும் தே.மு.தி.க தி.மு.க-வுடன் நடிகர் விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை சேரவில்லை.
இந்தச் சூழலில் வரும் தேர்தலில் பத்துக்கும் மேல் தொகுதிகளை என் டி ஏ கூட்டணியில் கேட்ட பிரேமலதா பாமக கேட்ட தொகுதியைக் கேடடார் ஆகவே கூட்டணி அமையவில்லை
ஆனால் பா.ஜ.க தரப்பு எப்படியும் தே.மு.தி.க-வை என்டிஏ அணிக்குள் கொண்டுவர முயற்சி எடுத்த நிலையில், நேற்று காலை திமுக தலைமை அலுவலகம் அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் மாநில முதல்வரைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார்
தே.மு. தி.க தரப்பில் கேட்டபோது, “இரண்டு தரப்பிலும் ஒரு ராஜ்ய சபா சீட் தர முன் வந்தனர். ஆனால் அ.தி.மு.க தரப்பில் அடுத்த ஆண்டு தான் நாடாளுமன்ற இராஜ்ய சபா இடத்தை ஒதுக்க முடியும் எனக் கூறியதால், அங்கிருந்து பின்வாங்கலாம் என முடிவெடுத்து. தே.மு.தி.க தரப்பில் வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க-விற்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
(தேமுதிகவை ஏமாற்றிய அதிமுக கடிதம்)
இந்த வேளையில், வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவைப் மேடையேற்றவும், அதற்கான அழைப்பிதழை தலைவர்கள் பிரேமலதாவை நேரில் சந்தித்துக் கொடுக்க ஏற்பாடுகள் அ.தி.மு.க மூலம் செய்யப்பட்டது.
இந்த விவரங்களை தி.மு.க தரப்பு அறிந்து அடுத்த கட்ட நகர்வை நாடாளுமன்றக் கட்சித் தலைவர் கனிமொழி மூலம் பிரேமலதாவின் வருங்கால சம்பந்தி அமைச்சர் ஏ. வா. வேலு மூலம் செய்ய ஆரம்பித்தது" என்கின்றனர் அரசியல் வடடரத்தில்.
"திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மூலம் தே.மு.தி.க தரப்பை உடனடியாக தொடர்பு கொண்டுள்ளனர். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி தி.மு.க-வை விட்டு வெளியேற சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்கும் நிலையில், கட்சிக்கு கரார் காட்ட இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த முடிவெடுத்தது தி.மு.க. தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாஉடன் 18 ஆம் தேதி இரவு பேச்சுவார்த்தை நடத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
ஏற்கெனவே இரண்டு முறை பிரேமலதாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மூலம், தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க-வை வரவழைக்க சம்மதம் பெற்று, செய்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தொகுதி எண்ணிக்கை மற்றும் பிற விஷயங்களை முதல்வரின் மருமகன் தரப்பிலா எடுத்துள்ளதால் அதன்படி தே.மு.தி.க-வுக்கு 9 தொகுதிகள் முதல் 12 தொகுதிகள் வரை வழங்க ஒப்புக்கொண்டனர். ராஜ்ய சபா சீட் வாங்கினால் பத்து தொகுதிகளைக் கொடுத்து, ஒரு ராஜ்ய சபா சீட்டை மார்ச் மாதமே வழங்க தி.மு.க தலைமை முன்வந்தது.
மற்றொருபுறம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் இரவோடு இரவாகப் பேசி, கூட்டணியை இறுதி செய்துவிட்டார்" என்கின்றனர்.எல்லாம் சரியானதும், 19-ஆம் தேதி காலை திமுக அண்ணா அறிவாலயத்திற்கு தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமதாவை வரவழைத்து கூட்டணியில் இணைத்துள்ளனர்.
ஏற்கெனவே தி.மு.க கூட்டணியில் உள்ள பல கட்சிகள் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கேட்டு வரும் நிலையில், புதிதாக தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க-விற்கு 9 முதல் 12 தொகுதிகள் என பேசிமுடித்திருப்பது, கூட்டணியிலுள்ள பிற கட்சியினரை இப்போது வைத்திருக்கிறது.
எங்களிடம் மட்டும் தொகுதியை குறைத்து தே.மு.தி.க-வுக்கு மட்டும் வழங்குவது நியாயமா? என்று புலம்புகிறார்கள். தி.மு.க-வின் மூவர் அணி தான் பேச்சுவார்த்தையை முடித்துள்ளார்கள்.
இப்போது நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு 'வடைபோசசே' கதையில் இமேஜ் தொழில் இரண்டும் டேமேஜ் ஆனது தான் மிச்சம்,அரசியல் நன்றாகவே அவருக்குப் புரிந்திருக்கும். "ஊர் ஒன்று கூட கூத்தாடி பாடு திண்டாட்டம்" எனும் பழமொழி சரியாகப் பொருந்தும். காங்கிரஸ் இல்லாத திமுக கூட்டணியில் தேமுதிக? இப்போது











கருத்துகள்