முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவெக தலைவர் நடிகர் விஜய் கூட்டணிக்குத் தயாராகும் அதிமுக பொதுச்செயலாளர் வி. கே.சசிகலா நடராஜன்

வஞ்சினம் உரைத்தலென்பது போருக்குச் செல்லும் முன் வேந்தரோ, படை வீரரோ, "குறிப்பிட்ட காரியத்தை எதிரிக்கு எதிராகச் சாதிப்பேன்; இல்லையேல் இன்னன் ஆவேன்"




என்று கடும் சினத்துடன் சூளுரைக்கும் அலலது சங்கல்பம் (சத்தியம்) செய்யும் பழங்கால சத்திரிய மரபு. இது வீரத்தின் அடையாளமாகவும், பகைவருக்குத் தன் வலிமையை உணர்த்தும்  நுட்பமாகவும், மன உறுதியை வெளிப்படுத்தும் செயலாகவும் இலக்கியங்களால் போற்றப்படுகிறது. புறநானூற்றில், மனனன் தலையாலங்கானத்துச் செருவென்ற பண்டியன் நெடுஞ்செழியன் தன்னை இளையவன் என இகழ்ந்த வேந்தர்களை வெல்வேன் எனப் பாடிய வஞ்சினப் பாடல் மிகச் சிறந்தது.வழக்கில் இரண்டாம் குற்றவாளி என சதியால் தீர்ப்பு வருவது அறியாமல் வி. கே.சசிகலா நடராஜன் முதல் குற்றவாளியாகவே காலமான செல்வி ஜெ.ஜெயலலிதா சமாதியில் அடித்து என்ன வஞ்சினம் உரைத்தார்.


சமாதியில் அடித்து சத்தியம் செய்வது அல்லது சபதம் எடுப்பது உண்மையில் சத்திரிய இனங்களின் குறியீடு. 

இந்த மாதிரியான குறியீடுகள் தம் பண்பாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தம் சந்ததியினருக்கு கடத்திவரும் பூர்வீக இனக்குழுக்களுக்கான தனித்துவ அடையாளங்கள்.  இது தன்னாட்சி கள்ளர் நாடுகள் 48 ல் தஞ்சாவூர் ஒரத்தநாடு துவங்கி மதுரை உசிலம்பட்டி பாப்பாநாடு வரை உள்ள மரபு ஒரு அந்தணர் குலப் பெண்ணை அரசியல் ரீதியாக எதிரிகளிடம் 40 ஆண்டுகள் பாதுகாத்த குடும்பம் நடிகை அரசியல் களத்தில் செல்வி ஜெ.ஜெயலலிதா பல எதிரிகளை எதிர் கொள்ள இந்தக் குடும்பத்தின் தலைவன் காரணம்.





இதற்கு எந்தப் பயிற்சியும் இருந்ததில்லை...

இறந்தால் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவது, ஒப்பாரி வைப்பது, ஆராத்தி எடுத்து வீட்டுக்கு வெளியில் ஊற்றுவது, பெண்கள் பூர்ப்பு எய்தினால் குழவைச் சத்தம் எழுப்புவது, மண்ணை வாரி தூற்றுவது எல்லாம் தமிழ் குடியின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு..

இதில் உணர்ச்சி என்ற மனித இயல்பு தான் பண்பாட்டு அடையாளங்களை மூடநம்பிக்கையிலிருந்து வேறுபடுத்துகின்றன.




இந்த அடையாளங்கள் சில சமயம் எல்லா இனக்குழுக்களுக்கும் பொதுவாய் அமைவதுண்டு.

உதாரணமாய் திருமணம்.

இது உலகின் எல்லா இனக்குழுக்களுக்கும் பொதுவாய் இருப்பது அதன் தொன்மையைக் கணக்கிட உதவுகிறது.

இன்று வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்று எண்ணுகின்ற, மேற்கத்திய மேல்தட்டு சமூக இயக்கத்தை நோக்கிப் பயணம் செய்கின்ற தலைமுறைக்கு இந்தக் குறியீடுகள் புரியாமல் இருக்கலாம். அல்லது சொல்லிக் கொடுக்காமல் வளர்க்கப்படலம் 

ஆனால் அந்தக் குறியீடு தமிழ் சத்திரிய இனத்துக்கு எதிரான கூட்டத்திற்கு நன்றாகவே புரிகிறது.

இந்த அடையாளங்களை அழிக்கும் போரில் ஒரு சிறு முன்னேற்றத்தை எதிரியான அந்தண ஆரியம் அடையும் போதும்கூட அதில் தோற்கும் ஒரு சாமானியனும் தம் அடையாளத்தை தூக்கிப் பிடிப்பதே மடாதிபதிகள் சார்ந்த இந்தக் குருமூர்த்திகளை, சேஷாத்திரிகளை,   அவர்கள் சார்ந்தவர்களை வெறுப்படையச் செய்துள்ளது.




உண்மையில் இதை ஒரு போராய் பண்பாட்டு ரீதியில் நம் மீது அந்தணர்களின் ஆரியம் நடத்தி வருகிறது என சசிகலா நடராஜன் அதை வெளியில் கூறாத கோபம் கொண்டு செய்த சத்தியம் தான் வெஞ்சினம் கூறல்.

ஆனால் இதை சிலர் மீம்ஸ் போட்டு கேலியும் கினடலும் செய்து பேசிக் கொண்டிருக்கிறோம்.

அரசியல், பண்பாட்டு புரிதல் இல்லாமல் ஒரு படித்த தலைமுறை இருக்குமேயானால், நம் அடையாளத்தை நம்மை அறியாமலே நாம் இழப்போம். எனபதே மூத்தோர் வாக்கு.

என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஒவ்வொருத்தரையும் இதே நிலைக்கு நான் ஆளாக்குவேன் என்று உறுதியடுத்ததே இந்த வஞ்சினம் உரைத்தல் . இது நடந்த சில ஆண்டுக்குப் பினனர் 

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு இன்னும் தீர்வாகாத நிலையில் வி. கே. சசிகலா நடராஜன் பங்கேற்கும் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, பசும்பொன் அருகில் கோட்டைமேடு பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு கால்கோள் விழா நடத்தப்பட்டது

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் வி. கே.சசிகலா நடராஜன் சார்பில் மாலை மரியாதை செலுத்தப்பட்டது செல்வி ஜெ.ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் வி. கே.சசிகலா நடராஜன் நான்காண்டுகள் சிறையிலிருந்து வந்த பின்னர் ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆண்டுதோறும் வழங்குகிறார்.

அதன்படி காலமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திடலில் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று செல்வி ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவுள்ளார்.




                  (
தமறாக்கி சின்னத்தம்பி)

செல்வி ஜெ.ஜெயலலிதா பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஏராளமான பிரிந்து போன பல இடங்களில் உள்ள அஇஅதிமுக ஆதரவற்ற பல தொண்டர்கள்,  நிர்வாகிகள் , மகளிரணியினர் பங்கேற்றனர்

24 ஆம் தேதி நடைபெறவுள்ள செல்வி ஜெ. ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் வி. கே.சசிகலா நடராஜன் உரையைக் கேட்பதற்காக  தமிழ்நாட்டு அரசியல் அறிந்த முக்குலத்தோர் மக்களும், அஇஅதிமுக தொண்டர்களுக்கும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அவரது இல்லத்தில்  ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவைச் சேர்ந்த  பாலசுப்பிரமணியம்  ஏ பி ஜே குரூப்ஸ் எனும் மகளிர் மேம்பாட்டு திட்டம் எனும் என் ஜி ஓ அமைப்பினர் மற்றும் சில சமூக நடவடிக்கைகளை நடத்தி எந்த இயக்கமும் சாராமல் ஊரிலுள்ள எட்டிமங்கலம் ஸ்டாலின் போல சில வழக்கறிஞர்கள் வி.கே.சசிகலா நடராஜன் இயக்கத்தில் இணைத்துள்ளார் 

இந்த மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் 11 மாவட்டங்கள் 2364 மகளிர் குழுக்கள் பல கட்சியைச் சார்ந்த மகளிர் உள்ளனர் இந்தக் குழுக்களில் மொத்தம் 252000 உறுப்பினர்கள் உள்ளனர். 






APJ GROUPS மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் பயனாளிகள், இவர்கள் அரசியல் மகளிர் அல்வர்,  சிறையில் இருந்து அவர் வந்தபோது இருந்த வரவேற்பு இப்போது இருககுமா என்றால் இல்லை என்றே தான் கூறவேண்டும், காரணம் ஆண்டுகள் பல கடந்து விட்டது உடைந்த கண்ணாடிகள் போல (பழனிசாமி, பன்னீர் செல்வம், தினகரன், தீபா, திவாகரன் ) போல ஒட்டாது எப்படிச் சேர்துதாலும் விரிசல் தெரியும் எல்லோரும் உறுவானது செல்வி ஜெ.ஜெயலலிதாவால் அல்ல இந்த சசிக்கலா நடராஜனால் தான், ஆனால் தினகரன் மட்டுமே அவரது சகோதரி வனிதா மணி மகன் முன்னர் சுதாகரனை செல்வி ஜெ.ஜெயலலிதா சுவீகாரம் எடுத்து தனது அண்ணன் மகளான ஜெ.தீபாவுக்கு திருமணம் முடிக்கும் திட்டம் நிறைவேறியிருந்தால் இன்று அதிமுக இவர் வசமே இருந்திருக்கும், அன்று நாரதராகப் பார்க்கப்பட்ட துக்ளக் சோ  செல்வி ஜெ. ஜெயலலிதா குடும்ப விவகாரத்தில் உட்புகாமல் இருந்திருந்தால் அந்த அந்தணர் ஜெ.ஜெயலலிதா வாரிசாக சத்திரியர் வாரிசு சுதாகரன் ஆவதை ஒரு அநதணர் மடம் ஏற்கவில்லை அதன் பின் நடந்தவை தான் தமிழ்நாட்டு அரசியலை மாற்றிச் சீர் குழைத்தது, டி. டி. வி தினகரனை வைத்து உறுவாக்கிய அதிமுகவின் இரண்டாம் குழுவான அமமுக கட்டுப்பாடு தற்போது சசிகலா நடராஜன் கைக்கு திரும்ப வரவில்லை, சிலுவம்பாளையம் கே.பழனிசாமியை முதல்வராக்கிய பின் நடந்த நிகழ்வுகள் முழுவதும் அரசியல் துரோகம், சரி பீகார் காரனிடம் உள்ள பணமும், தமிழ் தேசிய நிர்வாகி தரப்பிலிருந்த பணமும் முடங்கிய நிலையில் கடந்த நான்கு வருடங்களாக வி.கே.சசிகலா நடராஜன் அரசியல் முடக்கமானார் அப்போது தான் சில அரசியல் விசுவாசிகளை மட்டும் அடையாளம் கண்டார்,










அவர்களுக்காகவே தற்போது களம் காண்கிறார், முக்குலத்தோர் சமூகத்திற்கு சசிகலா நடராஜன் இதுவரை ஜாதி சார்ந்த நபர் என்பதைத் தவிர வேறு எதுவும் நல்லது செயயவில்லை, தேவர் நினைவுநாள் விழா தவிர அதுவும் அரசியல் நோக்கில் அதனால் அச் சமூகம் நன்மை அடையவில்லை, இதை நாம் அவரிடமே நேரில் விவாதிக்கத் தயார், இந்த நிலையில் ஜாதி வாக்குகள் வி.கே. சசிகலா நடராஜன் தரப்பில் வருமா என்பது எழுவினா?, இந்த நிலையில், முன்னால் அதிமுக அமைச்சர்கள் திருமங்கலம் உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பல முன்னாள் மந்திரிகள், பலர் தற்போது 

 " என்டிஏ கூட்டணி ஆட்சியெலாம் நமக்கு தோது படாதுப்பா, நீ வேற கம்பெனியப் பாரு" என்றுதான் எல்லா காலகட்டத்திலும்,  எல்லோரிடமும் சுதி மாறாமல்; உறுதிபடச் சொல்கிறார்கள். அது பாஜகவினரை மறைமுகமாகச் சாடுவது கட்சியின் பொதுச் செயலாளரான இருவரில் சின்னமும், கொடியுமுள்ள எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் இதுவரை சில பதவி அனுபவிக்காத விசுவாசிகள் வி. கே.சசிக்கலா நடராஜன் பக்கமிருக்க எல்லாம் அவரால் அனுபவித்த முன்னால் அமைச்சர்கள் எடப்பாடி 








கே.பழனிசாமியைக் கேட்டுத்தான் சொல்வோம் என்பதே இந்த விஷயத்தில் கிடையாது.  சீட்டு கிடைக்கவில்லை எனில்  உடனே வெளியே வருவார்கள் அவரது புகழிடம் வி. கே.சசிகலா நடராஜன்  அதுவே அவரது திட்டம்.

நான்கரை ஆண்டுகாலத்துக்கும் மேலாக திமுக கூட்டணியில் பயணிக்கும் காங்கிரஸ் கட்சி , ஓரிரு மாதங்களாகவே

 'பங்கு கேட்பு'  விஷயத்தை படு ஸ்திரமாக பிடித்துக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் அழைப்பின் எதிரொலியாகக் கூட இப்படி ரியாக்ட் செய்திருக்கலாம், இருக்கட்டும். 

அதிகபட்சம் 40 நாள்களில் கோட் ஆஃப் கான்டாக்ட்டுக்குள் தமிழ்நாடு வந்துவிடப் போகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டது.   

சமூக வலைதளங்களில் இன்னும் திமுகவை காங்கிரஸ் கட்சியில் சீண்டுவதும், திமுக பதிலடி கொடுப்பதுமாக இருந்தால் தேர்தல் நடந்தே முடிந்துவிடும்.

மாநில வாரியாக காங்கிரஸ் கட்சி தற்போது மாற்றப்படட மாவட்டத் தலைவர்கள் கூட்டம், டில்லியில் நடந்ததில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்ந்த மாவட்டத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.





அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வம் பெருந்தகையின் ஆதரவாளரும், அமைப்புச் செயலாளருமான ராம்மோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலில், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் எனக் கூற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். ஆனால், அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தலைவர்கள், 'தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், ஆட்சியில் பங்கு தர வேண்டும்; ஆறு அமைச்சர் பதவிகளைப் பெற வேண்டும்; 41 தொகுதிகளுக்கு குறையக்கூடாது' எனப் பேசியுள்ளனர்.இந்தக் கோரிக்கையை தி.மு.க.வால் , ஏற்க முன்வரவில்லை என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம்' என்றும் கூறியிருக்கின்றனர். இந்தத் தகவல் தெரியவந்ததும், தலைவர் கார்கேயால் முன்னால் அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவில் பதவி பெற்ற செல்வம் பெருந்தகையும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். செல்வம் பெருந்தகைக்கு  அக் கட்சியில் சிலர் ஐந்து கட்சி அமாவாசை என்கிற பெயர் நல்லா இல்லை எனவும் . திமுகவில் சேர்ந்து 6 கட்சி அமாவாசை எனப் பெயர் மாற்றிக்கொள்ளுங்கள் எனவம் பேசுகின்ற நிலை தான் நாம் பல இடங்களில் பார்த்த வரை உள்ளது,  ஒருகாலத்தில் DPI துவங்கிய ராஜேந்திரன் என்ற திருமாவளவன், செல்வம் என்ற செல்வம் பெருந்தகை  வன்னியரசு மூவரும் ஒரே கட்சியில் ஒன்றாகவே இதற்கு முன்பாகப் பயணித்தவர்கள். காங்கிரஸ் கட்சியில் புரசைவாக்கம் ரெங்கநாதனினிடமிருந்து கடைசியாக காங்கிரஸ் கடசிக்கு வந்து தற்போது தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மூலம் பதவி பெற்றவர் 

செல்வத்திற்கு பயந்து விசிகவை கலைத்தவர் திருமாவளவன் 

அப்பவே பலநூறு கோடிகள் அடித்தவர் செல்வம் எனவும், காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் அவ்வளவு தகுதி செல்வம் பெருந்தகைக்கு இல்லை என்பதை பலரும் அறிவர் என க் கட்சியினர் டெல்லி வரை தகவல் தந்த நிலை ”

காங்கிரஸ் கட்சியில் நிறைய குளறுபடிகள், முரண்பாடுகள், கோஷ்டிப் பிரச்சனைகள் உள்ளன

அவர் சார்ந்த கட்சிப் பிரச்சனையையே செல்வம் பெருந்தகையால் தீர்க்க முயன்றால் கட்சிக்கு நல்லது

செல்வம் பெருந்தகையின் பேச்சில் நல்ல நோக்கமில்லை என்பது அக் கட்சியில் தற்போது பலரது நம்பிக்கை

பட்டியல் சமூகத்தினர் மீது தாக்குதல் நடந்தபோது செவ்வம் பெருந்தகை போராட்டம் நடத்தியுள்ளாரா? ஆம்ஸ்ராங் கொலை விவகாரம் இங்கு கவனிக்க வேண்டும்,

எதையும் செய்யாமல் இப்போது பேசுவது விளம்பர, ஸ்டண்ட் அரசியல்

செல்வம் பெருந்தகைக்கு ஏன் இந்த மீடியேட்டர் வேலை? என காங்கிரஸ் கட்சி

சார்ந்த  நீண்ட காலம் பயணிக்கும் பலர் கருத்து.

திருமாவளவனுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு செல்வம் பெருந்தகை வளரவில்லை‘ என்பது விசிகவினர் கருத்து.

விசிக, பாமக பிரச்னையைப் பேசினால் தீரும் என்ற செல்வம் பெருந்தகை கருத்துக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பதிலடி கொடுக்கும் நிலை, அதிமுக 2 ஆன அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அதிமுக உடைந்து முதல் கட்சி அதிமுக எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து அரசியல் செய்வேன் என்று அதிமுகவை மீட்பேன் என்று வி. கே.சசிக்கலா நடராஜன் ஆதரவில் தொடங்கியது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கிட்டத்தட்ட அடமானம் வைத்துவிட்டார், ன ஒரு தரப்பு பேசுகிறது இதுவரை அதிமுகவில் இருந்த முக்குலத்தோரின் அடையாளமாக அய்யா டாக்டர் ராமகிருஷ்ணன்,  பொன். பரமகுரு, டாக்டர் என். சேதுராமன், சீனிச்சாமித் தேவர் போல மற்றவர்கள் தற்போது களத்தில் இல்லை மற்றும் இதில் மான ரோசத்தை அடமானம் வைத்து விட்டார் என்பதும் தவறு இவர் முக்குலத்தோர் அடையாளமல்ல எடப்பாடி கே பழனிச்சாமியை எதிர்த்து இனி டி. டி.வி தினகரன் எக்காலத்திலும் அரசியல் செய்ய மாட்டார் அதே வேலையில் அதிமுகவில் உள்ளே புகுந்து ஊடறுத்து அந்தக் கட்சியை கைப்பற்றுவோம் என்ற அவநம்பிக்கையில் டி. டி.வி தினகரன் அங்கே கூட்டணிக்கு அவரது வழக்கிலிருந்து தப்பிக்கவும் பல பிரச்சினைகளுக்காகவும் சூழ்நிலையில் ராஜதந்திரமாக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.       தினகரன் ஒரு ரகம் எனில் அடுத்த ரகமாக வி. கே.சசிகலா நடராஜன் இவர் பெரிதும் நம்பி இருக்கிற முக்குலத்தோர் சமுதாயம் இவர்களை இன்றைக்கு ஏன் ஆதரிக்க வேண்டுமென மனம் தளார்ந்த நிலையில் இருக்கிறது காரணம் டி. டி. வி.தினகரன் அவர்கள் குடும்பம் சார்ந்த அரசியலை மற்றும் தினகரனை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது தாய் மாமன் திவாகரன் எடுத்த முடிவு தான் அண்ணா திராவிடர் கழகம் என்ற ஒரு கட்சியை தமிழ்நாட்டிற்குள் ஒரு கட்சியாகக் கொண்டு வர வேண்டும் என்ற  அடிப்படையில் அவர் செயல்படுகிறார் அதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அண்ணா திராவிட கழகம் எனும் கட்சிக் கொள்கை சித்தாந்தங்களையும் தொலைநோக்கு கொள்கை சித்தாந்தங்களையும் மையப்படுத்தி தமிழ்நாடு முழுவதுமாக அரங்கக் கூட்டம், பொதுக்கூட்டம் என்று போட்டு அப்படி அவர்கள் கட்சியை வளர்த்துக் கொண்டு வந்து தேர்தல் களத்திலே போட்டியிட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு இவர்களால் என்ன நன்மை என ஏற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வாக்களைப் பெறலாம்  தற்போது ஆளே இல்லாத அந்துலே கட்சி கூட பத்து சீட் தரும்படி கேட்கும் அவல நிலை அரசியல் உள்ளது, சகோதரர் திவாகரன் வைத்திருக்கும் கட்சியை அக்கா வி. கே சசிகலா நடராஜனை வைத்து வளர்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பதை ஒரு காலமும் பெரிய அளவுக்கு தமிழ்நாட்டு மக்களோ அல்லது இவர்கள் நினைக்கும் சமுதாய மக்களோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் காரணம் ஒரு கட்சி தொடங்கி அந்தக் கட்சியினுடைய கொள்கை சித்தாந்தங்களினுடைய பரப்புரை மற்றும் செயல்பாடு உள்ளூர் நிலவரம் மூலம் தான் அந்தக் கட்சி வளர வேண்டும்


உதாரணத்திற்கு நடிகர் விஜய்  தொடங்கிய தவெக கட்சியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொள்கைகளை வளைத்து இதுதான் என்னுடைய சித்தாந்தம் இதுதான் என்னுடைய கொள்கை என்று அரசியலை நடிகர் விஜய் செய்வதினால் அரசியலில் ஓட்டு வங்கியைப் பெறலாம் ஆனால் முழு வெற்றி பெற சில கூட்டணி வேண்டும் ஒரு பிரபல நடிகருக்கே அப்படி ஒரு பிரச்சனை இருக்கும் போது திவாகரன் இதுவரை வீட்டில் இருந்து வியாபார அரசியல் நடத்திவிடடு அண்ணா திராவிட கழகம் என்ற கட்சிக்கு எந்த நிலைமை ஏற்படும் திவாகரன் வி. கே.சசிகலா நடராஜன், டிடிவி தினகரன் இவர்கள் எவரும் எடப்பாடி கே.பழனிச்சாமியை ஒரு காலமும் எதிர்க்கப் போவதில்லை அப்படி எதிர்க்காமல் அரசியல் செய்தால் இவர்களுக்கு ஓட்டு வாங்கி கிடைக்கப் போவதில்லை. முதலமைச்சர் பதவியை எடப்பாடி கே.பழனிச்சாமி இடம் கொடுத்து விட்டுப் போனேன் இதோ பாருங்கள் கட்சி இந்த நிலைமைக்கு இருக்கிறது 10 தோல்வி அடைந்து விட்டது இன்னும் தோல்வியடையப் போகிறது கட்சியை அழிக்க பார்க்கிறார் நீங்களே இதற்கு ஒரு தீர்வை சொல்லுங்கள் என்று மக்கள் மன்றத்திலே இதுவரை வி. கே.சசிகலா நடராஜன் பேசவில்லை இப்படிப் பேசாததன் காரணமாக கிச்சன் அரசியல் செய்வதின் காரணமாக செலவி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா நடராஜன் மீது பொய்யான அவதூறுகள் பரப்பிய பலர் அவர்கள் மீது இருந்த நம்பிக்கை போவதற்கான காரணம் எடப்பாடி கே.பழனிச்சாமி உடன் நான் கூட்டணி வைத்துக் கொண்டால் தூக்கில் தொங்குவதற்கு சமம் என்று சொன்ன டி. டி. வி.தினகரன் எடப்பாடி பழனிச்சாமி உடன் கூட்டணி வைத்ததன் அடிப்படையில் டி. டி.வி.தினகரன் மீது இருந்த நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிருப்தி முக்குலத்தோர் மக்களுக்கு ஏற்பட்டது அதேபோல வி. கே. சசிகலா நடராஜனும்  2026 சட்டமன்றத் தேர்தலில் நான் ஒரு அணி அமைப்பேன் என்று திமுகவை மட்டும் எதிர்ப்பதற்காகவே அவர் தேர்தல் களத்தில் குதித்தால் அதை முக்குலத்தோர் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எடப்பாடி கே.பழனிச்சாமியை எதிர்த்து வி. கே.சசிகலா நடராஜன் பிரச்சாரக் களத்தில் பிரச்சாரம் செய்கிற போது அரசியல் சூடு பிடிக்கும் அதற்கு அவர் சில உண்மைகளை மக்கள் மன்றத்தில் பேசியாகவேண்டும் பேசுவரா? தெரியவில்லை பேசினால் ஓட்டு விழும் குறிப்பிட்ட தொகுதிகளைப் பிடிக்கலாம் மாறாக திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று பரப்புரை செய்து ஓட்டுக் கேட்டால் ஏன்மா எடப்பாடி கே.பழனிச்சாமிக்காக வேண்டித் தான் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்தோம் எடப்பாடி கே.பழனிச்சாமியை ஜென்ம விரோதியாக நாங்கள் நினைத்தோம் ஆனால் நீங்கள் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு மறைமுக ஆதரவளிக்கிற வகையில் செயல்படுகிறீர்களே என்ற சந்தேகம் முக்குலத்தோர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும் என்பதை வி. கே.சசிகலா நடராஜன் சிந்திப்பார் ஆகவே அவர்  நடிகர் வஜய் தலைவராக உள்ள தவெகவில் இணைவார்      ஆனால் டி.டி. வி.தினகரன் பின்பாக இருக்கும் சிலர் பக்கா துரோக குணம் கொண்ட நபர்கள் அதில் முனனால் எம்எல்ஏ ஒருவர் என்பது அவருக்கு தேர்தல் முடிவுக்கு பின்னர் தெரியவரும்.           
அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வி. கே சசிகலா நடராஜன் புதிய கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர், எடப்பாடி தன்னை அவைத்தலைவர் பதவியோடு முடக்க நினைப்பதையும் தேர்தல் வரை பேச்சுவார்த்தையை இழுத்தடித்து ஏமாற்றத் திட்டமிட்டிருப்பதையும் உணர்ந்த சசிகலா நடராஜன் வரும் தேர்தலில் குறைந்தது 50 தொகுதிகளில் போட்டியிட்டு அவரது வெற்றியைப் பறிப்பதே தனது இலக்காகக் கொண்டுள்ளார்.

வயதானதால் வி.கே.சசிகலா நடராஜன் இனி அரசியல் செய்ய முடியாது என நினைக்கும் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது, இத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்பதன் மூலம் கட்சியை எடப்பாடி பழனிச்சாமியின் பிடியிலிருந்து மீட்டு அடுத்த தேர்தலில் அனைவரையும் ஒருங்கிணைக்கலாம் என்பது அவரது வியூகம்  அதை உறுதிப்படுத்தும்  செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று சசிகலா நடராஜன் தனது அரசியல் நிலைப்பாட்டை முறையாக அறிவிப்பார். ஆனால் இவர் நிறுத்தும் வேட்பாளர்கள் பின்னர் குதிரை பேரத்தில் விலையாகாமல் இருபபார்களா? நாம் என்பதன் அடையாளம் வேறு, அரசிபல் வேறு  எனபதில் எப்பொழுதுமே ஒரு தெளிவு வேண்டும், உலகில் எதிர் கோட்பாடு பல தலைமையை உறுவாக்கியுள்ளது,  வி. கே. சசிகலா தனது கணவர் முனைவர் ம.நடராஜனிடம் அரசியல் கற்றவர் அதை செல்வி ஜெ.ஜெயலலிதா மூலம் நிரூபித்தவர்.

அரிஸ்டாட்டில் எழும்பினால் அதை முறியடிக்க சாணக்கியனை இயற்கை உருவாக்கியது

அலெக்ஸாண்டர் எழும்பினால் அது சந்திரகுப்தனை உருவாக்கியது

புத்தன் எனும் சித்தார்த் எழும்பினால் அது ஆதிசங்கரரை உருவாக்கியது

சமணரும் பௌத்தரும் சாத்வீகமாக எழும்பினால் அது ஞானசம்பந்தரையும், திருநாவுக்கரசரான அப்பர் சுவாமிகளையும் உருவாக்கியது

முகலாயக் கொடுங்கோலன் ஒளரங்கசீப் வாளோடு எழும்பினால் அது வீரசிவாஜியை உருவாக்கியது

கிறிஸ்தவ போதகர்கள் பலர் மதம் சார்ந்து உறுவாகவே அது சுவாமி விவேகானந்தரை உருவாக்கியது 

எதிரிக் கயவர்கள் எவ்வழியோ அவ்வழியில் தனக்குரிய காவலர்களை சங்கல்பம் உருவாக்கும் அது எப்போழுதேனும் நடந்தே தீரும் அந்த வகையில் வஞ்சினம் கூறல் முடிவுக்கு வருகிறது.     

"வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்".. 563


அதாவது 
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும்கொடுங்கோல் அரசனானால்,அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.அச்சமில்லாமல் அஞ்சக் கூடிய கேடுகளை குடிமக்களுக்கு எந்த அரசன் செய்கிறானோஅவன் நிச்சயம் அழிந்தே போவான்! இது நியதி                         திட்டமிட்டு பிச்சை எடுக்க முடியாது, உழைக்காமல் முன்னேற்றமடைய முடியாது. இது விதுர நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...