முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக நீதி விடுதியில் உணவுக்கு ஊறுகாய் வாங்கும் அவலம் பாமக தலைவர் கேள்வி

புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு பட்டியல் மாணவிகள் தங்கிப் பயிலும் சமூக நீதி விடுதியில் 


மாணவிகளுக்கு 3 வேளையும் பழைய சாதமும் ஊறுகாயும் தான் உணவாக வழங்கப்படுவதாகவும் . சாம்பார், ரசம், காரக் குழம்பு என எதுவுமே வழங்காமல் வெறும் ஊறுகாயை, சாதத்தில் பிசைந்து சாப்பிடும் நிலை ஏற்பட்டதைக் கண்டித்து தங்களுக்கு தட்டில் வழங்கப்பட்ட உணவுடன் மாணவிகள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றனர். அது போல் ஆதிதிராவிடர் நலத்துறையின் தனி வட்டாட்சியர் பிரவீனா மேரியும் நேரில் வந்தார்.

 மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விடுதி வார்டன் சுபேதாவிடம், வட்டாட்சியர் பிரவீனா மேரி கேட்ட போது சமைப்பதற்கு மளிகைப் பொருட்கள் வரவில்லை. அதனால் தேவையான உணவை அவர்களுக்கு வழங்க முடியவில்லை என்றதையடுத்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிரவீனா மேரி, விடுதி வார்டனைக் கடிந்து கொண்டார். "மளிகை பொருட்கள் வரவில்லை என்றால் சொல்ல மாட்டீர்களா, உங்கள் பிள்ளைகளாக இருந்தால் இப்படித்தான் ரோட்டில் உட்கார வைப்பீர்களா" என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.  ஆனால் அவர் பலமுறை தெரிவித்தும் வரவில்லை என்பதை மாணவிகள் தரப்பு கூறும் நிலை உள்ளதுபுதுக்கோட்டையில் பட்டியலின மாணவிகளுக்கு பழைய சோறுக்கு சொந்த செலவில் பச்சை மிளகாய் ஊறுகாய் வாங்கும் அவலம்! என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.



இதுகுறித்து  அறிக்கையில் கூறியதாவது: புதுக்கோட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டியல் சமூக நீதி விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவிகளுக்கு கடந்த இரு மாதங்களாக மூன்று வேளையும் பழைய சோறும், ஊறுகாயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், தங்களுக்கு குறைந்தபட்சம் உண்ணத் தகுந்த உணவு வழங்க வேண்டுமெனக் கோரி  தங்கியுள்ள மாணவிகள் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்தி வருவதாகவும் வெளிவரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் பட்டியலின மாணவிகளுக்கு உணவு வழங்குவதற்குக் கூட துப்பில்லாத நிலையில் திமுக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு நிதி வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் அரிசி, எரிவாயு சிலிண்டர் ஆகியவை மட்டுமே இருப்பதால் அதைக் கொண்டு, கடந்த இரு மாதங்களாக வெறும் சோறு வடித்து தங்களது சொந்த செலவில் ஊறுகாய் அல்லது சிப்ஸ் வாங்கி மாணவர்களுக்கு வழங்குவதாகவும் விடுதிப் பணியாளர்கள் வார்டன் குற்றஞ்சாட்டியுள்ளனர். திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இல்லை.


விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புரதச் சத்து, காய்கறிகள் என சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி மாதத்தில் நான்கு நாட்கள் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் இவை அனைத்தும் ஏட்டளவில் தான் உள்ளன. காய்கறிகள் வாங்கி பருப்புக் குழம்பு வைத்து மாணவ, மாணவியருக்கு பரிமாறுவதற்கு கூட நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால் தான் பட்டியலின மாணவிகளுக்கு வெறும் சோறு மட்டுமே வழங்கப்படும் இந்த அவலம் நிலவுகிறது.

புதுக்கோட்டை பட்டியல் சமூகநீதி விடுதியில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.    கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஒரு மாதத்திற்கு உணவு வழங்குவதற்காக ரூபாய்.1500, அதாவது தினமும் ரூபாய்.50 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதிலும் ஒரு குறிப்பிட்ட தொகை அதிகாரத்தில் இருப்பவர்களால் லஞ்சம் மூலம் சுரண்டப்படுகிறது. இந்தத் தொகை சுமாரான உணவு வழங்குவதற்கே போதுமானதல்ல எனக் கூறப்படும் நிலையில், அது கூட வழங்கப்படாவிட்டால் பட்டியலின மாணவ, மாணவியருக்கு எவ்வாறு உணவு வழங்க முடியும்? என்பதை விடியா அரசு தான் விளக்க வேண்டும். அதேபோல மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு நான்கு மாதங்களுக்கும் மேலாக உணவுப்படி வழங்கப்படவில்லை. அதனால், அதன் வார்டனாகப் பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர் மகேந்திரன் என்பவர் சொந்தக் காசை செலவழித்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வந்தார். நிலுவையில் உள்ள உணவுப்படியை வழங்கும்படி உரிய அலுவலர்களுக்கு கடிதம் எழுதியும் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்யாததாலும், தம்மை வார்டன் பணியில் இருந்து மீண்டும் ஆசிரியர் பணிக்கே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் கடந்த டிசம்பர் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பணியாற்றும் பலரும் தங்களின் சொந்தப் பணத்தை செலவழித்து விட்டு, அது மீண்டும் கிடைக்குமா? என்ற மன உளைச்சலில் தான் உள்ளனர்.அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் சகிக்க முடியாதவையாக உள்ளன. "ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்பதைப் போலத் தான் திமுக ஆட்சியும் உள்ளது. அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள். இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகள் விடுதிகளுக்கு எல்லாம் சமூகநீதி விடுதி என பெயர் மாற்றியது. பேரு வச்சியே சோறு வச்சியா என்பது போலத் தான் உள்ளது ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதி.

புதுக்கோட்டை நகரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இயங்கும் பெண்கள் சமூகநீதி விடுதியில் டிசம்பர் மாதத்திலிருந்து மூன்று வேளையும் சோறும் ரசமும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. மாணவர்கள் சொந்தக் காசில் ஊறுகாய் சிப்ஸ் பாக்கெட் வாங்கி உண்டு வந்துள்ளனர். உணவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி டிசம்பர் மாதத்தோடு காலியாகிவிட்டதாக விடுதிப் பணியாளர்கள் கூறுகிறார்கள்.

என்னதான் பெயர் சமூகநீதி விடுதி என்றிருந்தாலும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்க்கு நிதி ஆதிதிராவிட நலத்துறையில் இருந்துதான் ஒதுக்கப்படும்.  2023ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்படும் ஆதிதிராவிட பழங்குடி நல நிதிகள் குறித்த செய்திகள் வந்த வண்ணமுள்ளன. பயன்படுத்த ஆயிரம் தேவைகள் இங்குள்ள நிலையில் திருப்பி அனுப்பிக்கொண்டிருப்பது உண்மையில் ஆதிதிராவிட பழங்குடியினத் துறைகள் சரியாக செயல்படுகிறதா என பலருக்கு ஐயம் எழுகிறுது.

தொடர்ந்து ஒரே உணவைக் கொடுத்து வந்ததை கண்டித்து சில மாணவர் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி அட்டவணைப்படி உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சமூகநீதி பெயர் மாற்றிய பின்பு புதுக்கோட்டை நகரில் ஆதிதிராவிட நலத்துறை ஆண்கள் விடுதியில் துணை முதல்வர் உணவு உண்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தட்டிலிருந்த உணவுகள் எல்லாம் விடுதி வார அட்டவணையில் கூட உள்ளதா என்பதே சந்தேகம்தான் ஆனால் பழைய சாதம் ஊறுகாய் என்பது படிக்கும் மாணவ மாணவிகளை பாதிக்கும் அதை பட்டியல் சமூகத் தலைவர்கள் கண்டும் காணாமல் உள்ள நிலையில் மாணவர்கள் போராட்டம் குறித்து பாமக தலைவர் வினா எழுப்பியுள்ளது இங்கு குறிபிடத்தக்கது.     "அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்

ஏதோ நானும் இருக்கிறேன், உருப்படியா படிக்கிறேன்.

யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்

விடுதி சோறு புழுவுன்னு வீதியில கொட்டுறாங்க

நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்......". சின்னப்பொன்னு பாடிய நாட்டுப்புறப் பாடலில் சில உண்மை உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...