தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் நாடாளுமன்ற 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 16 ஆம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2026 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் அதற்கு முன்பாக நாடாளுமன்ற இராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி சிவா, கனிமொழி சோமு, ஜி.கே.வாசன் உள்ளிட்ட நாடாளுமன்ற 6 உறுப்பினரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதையொட்டி, நாடாளுமன்ற 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது
ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற 6 தமிழ்நாடு உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள காலியாகும் 37 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில்
வேட்புமனு தாக்கல் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் மாதம் 5 ஆம் தேதி. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் மாதம் 6 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் மார்ச் மாதம் 9 ஆம் தேதி. போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் மாதம் 16 ஆம் தேதி . அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜிகே வாசன் பதவிக் காலம் அதில் அடங்கும்.




கருத்துகள்