கோயம்பத்தூர் தனியார் நிறுவனத்திடம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக வரி உதவி ஆணையர் , கணவருடன் கைது
கோயம்பத்தூர் வடக்கு வணிகவரித்துறை உதவி ஆணையராகப் பணியாற்றி வந்தவர் மகேஸ்வரி வயது 48. இவர், வணிகவரித்துறை தொடர்பான ஒரு விசாரணையை முடிப்பதற்காக சிங்காநல்லூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் ரூபாய் 60,000 லஞ்சமாகத் தர வேண்டுமென்று கேட்டுள்ளார்.லஞ்சம் தர மறுத்த அந்த நிறுவனத்தினர் இதுகுறித்து கோயமுத்தூர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தனர். பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில், நிறுவனத்தினர் பினாப்தலீன் தடவிய லஞ்சப் பணத்தைத் தருவதற்கு வந்த போது மகேஸ்வரிக்காக லஞ்சப் பணத்தை வாங்க வந்த அவரது கணவர் தனசேகரன், வயது 51, ஐ ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவிக்காக லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார்.
கணவன் மனைவி இருவரையும் நேருக்கு நேராக வைத்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மகேஸ்வரியும் லஞ்சம் கேட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும்
இராமநாதபுரம் அருகில் பட்டா பெயர் மாறுதலுக்கு ரூபாய்.5000 லஞ்சம் வாங்கிய கிராமநிர்வாக அலுவலர் கைது இராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர் நிலப்பட்டா பெயர் மாறுதல் செய்ய விண்ணப்பித்திருந்தார். இதற்காக புதுமடம் கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் வயது 36, ஐ அணுகிய போது ரூபாய்.5000 லஞ்சமாகத் தருமாறு கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில் இராமநாதபுரம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை திருப்பித் தந்து அனுராஜிடம் கொடுக்கும் படி அறிவுறுத்தினர்.
அதன்படி நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து அனுராஜிடம் அந்த நபர் ரூபாய்.5000 பணத்தைக் கொடுத்த போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் ஙணகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை முடிவில் அனுராஜை நீதிமன்றத்தில் ஆஜர் படுததி சிறையில் அடைத்தனர் மேலும்
சென்னை புறநகர் ஆவடி கோவில்பதாகை பொண்ணப்பிள்ளை நகரைச் சேர்ந்த விவசாயி ராகவன் புதிதாக வீடு கட்டி வருகிறார். தன்னுடைய வீட்டிற்கு மின் இணைப்புக் கோரி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வருவாய் மேற்பார்வையாளர், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், மின் இணைப்பு வழங்க 15,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என ராகவனிடம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இராகவன், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் தந்தார்..அவர்கள் அறிவுரைப்படி, மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று பாலசுப்பிரமணியனிடம் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தைத் தந்துள்ளார்.. அவர் பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பாலசுப்பிரமணியத்தை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.மின் இணைப்புக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியரான பொறியாளரை விசாரணை முடித்து நீதிமன்றத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டு ஆஜரபடுத்தி சிறையில் அடைத்தனர்



கருத்துகள்