பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் உச்சநீதிமன்றத் தடை நீக்கம் விசாரணை மீண்டும் புதிதாகத் துவங்குகிறது
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தங்களுக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அதனால், துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமித்துக் கொள்ளலாம் எனப் பொருளல்ல. உயர்நீதிமன்றம் அவசர கால வழக்காக எடுத்து விசாரித்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
தமிழ்நாடு அரசின் சட்டங்கள் சரியா என்பது குறித்து முதலிலிருந்து மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் புதிதாக முதலிலிருந்து விசாரித்தாலும் தமிழ்நாடு அரசின் சட்டங்கள் உயிர் பெறுமா என்பது சந்தேகமே
அச்சட்டங்கள் ஆளுநரின் உரிமையில் குறுக்கிடுவதாக இருக்கிறது என்பதுதான் முக்கியமான பிரச்சனை.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஜனாதிபதி ஆளுநர் தாமதமே செய்தாலும், அவர்களின் அதிகாரத்தில் மாநில அரசுகளோ நீதிமன்றங்களோ தலையிட முடியாது என்பதை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு தெளிவாக ஏற்றுக்கொண்டு விட்டது. அது தீர்ப்பு அல்ல என்றாலும் சட்ட ரீதியான கருத்தாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும்.
இனி வரும் நீதிமன்ற தீர்ப்புகள் உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு முரணாக இருந்தால் சட்டச் சிக்கலை சந்திக்க நேரிடும்.
தமிழ்நாடு அரசின் சட்டங்களை ஏற்க விரும்பினாலும் கூட உயர்நீதிமன்றம் அப்படி தீர்ப்பு வழங்க, உசசநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதி அடங்கிய அமர்வின் கருத்து தடையாக இருக்கும்.
'சீக்கிரம் முடிவெடுங்கள்' என்று மாநில ஆளுனருக்கு மீண்டும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலாம்.
எனவே, தமிழ்நாடு அரசு தரப்பு சந்தோஷப்பட்டுக்கொள்ள இப்போதைக்கு எதுவும் இல்லை.
அரசியல் சட்டம் திருத்தப்பட்டாலன்றி, இந்தநிலை மாறாது. காரணம் UGC க்கு என மத்திய சட்டங்கள் நிலையானது அதை மாநிலச் சட்டங்கள் மீற முடியாது என்பதே இதன் கருத்து.
உச்சநீதி மன்றத்தின் தற்போதய தீர்ப்பு ஒரு பேசு பொருள் அல்லது சிறு ஆறுதல் தீர்ப்பு. அவ்வளவுதான். அது அடுத்து வரும் தீர்ப்பு அடிப்படையில் மாறலாம், பல்கலைக்கழகம் தற்போது பல இடங்களில் நிரந்தரத் துணை வேந்தர் இல்லாமல் திரிசங்கு நிலையில் உள்ளது என்பதை யாவரும் அறிவோம்.












கருத்துகள்