இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 பிரிவு 142 ன்படி தீர்ப்பு.உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மகன் பிறர் உதவியில்லாமல் ஆன்லைன் மூலம் மனுதாக்கல் செய்து 10 நிமிடத்தில் தன் வாதத்தை எடுத்துரைத்து வெற்றி பெற்ற 19 வயது மாணவர் மருத்துவ எம்பிபிஎஸ் இட ஒதுக்கீடு கிடைக்காததால் 10 நிமிடம் வாதாடிய மாணவன்
7 நாளில் இடம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு,
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த அதர்வா சதுர்வேதி ( வயது 19), முற்பட்ட பிராமணர் வகுப்பைச் சேர்ந்த நபர் நீட் தேர்வில் 530 மதிப் பெண் பெற்றார். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரான OC யில் 20 சதவீதம் (இடபிள்யூஎஸ்) படி அவருக்கு, அந்தப் பிரிவில் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட வில்லை.
ம.பி.யில் இடபிள்யூஎஸ் பிரிவில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணை வெளியிடப்படாததே இதற்குக் காரணம். என்பதனால் அதர்வா, தந்தை பிரபல வழக்கறிஞர் மனோஜ் சதுர்வேதியின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (Special Leave Petition - SLP) ஆன்-லைனில் தாக்கல் செய்தார்.
அதர்வா சதுர்வேதி மனுவானது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 136-ன் கீழ், கீழ்மை நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களின் உத்தரவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் ஒரு சட்ட நடவடிக்கையாகும்.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது தான் வாதிட 10 நிமிடம் அவகாசத்தை மட்டுமே தந்தை கூறிய படி கோரிய அதர்வா. இடபிள்யூ எஸ் கோட்டா ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை அமல்படுத்த மன்றம் உத்தரவிடுவதற்கான காரணங்களை அதர்வா விளக்கினார்.
அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து அரசியலமைப்புச் சட்டத்தில் 142-வது பிரிவின் கீழ் தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதர்வாவுக்கு அடுத்த ஏழு நாட்களுக்குள் எம்பிபிஎஸ் சேர்க்கை வழங்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், மத்தியப் பிரதேச அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை வழக்கறிஞர் என்பதால் மகனை வாதம் செய்யவிட்டு அவர் வேடிக்கை பார்த்துள்ளார், அந்தச் சிறுவன் ஒரு சாமானிய விவசாயம் சார்ந்த குடிமகன் குழந்தை என்றால் இந்த அனுமதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.


கருத்துகள்