முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறகுகள் விரித்துக் குதிரை பறக்கிறது, எதிர்முகாம் நோக்கி நகர்வின் காரணம் யார்?

"நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை,  நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்…” நம்முடையது 

மஹாகவி - சுப்பிரமணிய பாரதியின் எழுச்சி வரிகள்நாம் அதி முக்கியமான சிக்கலை பலர் இங்கு கவனிக்கவில்லை.

நமது பிள்ளைகள் போதையிலும், குறுங்காட்சிகளிலும் மூழ்கியுள்ளனர்.

வடநாட்டவர் பசிக்கும் வாழ்விற்கும் இங்கு வேலைக்கு வருகிறார்கள்.




அவர்களால் நமக்கு சிக்கல் எழுகிறது. உரிமை பறிபோகிறது. மொழி வீழ்கிறது.



கவனிக்க வேண்டியது நமது பிள்ளைகளை. தற்போது சிபிஎஸ்ஸி கேள்வித்தாள் கடிணமாவதில் தான் பல உண்மை மக்களுக்கு புரிய வேண்டும் பிளளைகளில் கற்பூரப்புத்தி கொண்ட பிள்ளைக்கு தேர்வு எளிது, அது அசைவம் உண்ணாது, ஆனால் பெட்ரொமாக்ஸ் லைட் புத்தி, டியூப் லைட் புத்தி கொண்ட அசைவம் உண்ணும் பிள்ளைகளிடம் கணக்கு தேர்வு குறித்து கேளுங்களேன் அப்புறம் உண்மை தெரியும், இது யார் தவறு இதற்கு யார் காரணம்,


ஆகவே சில படிநிலை மக்கள் பரிதவிப்பின் ஆழம் தெரிகிறது.ஜெயலலிதா மரணத்திற்கு பின் அதிமுகவை உடைத்து சிதைத்தவர்கள் பாஜகவா? திமுகவாஎ என தற்போது விவாதம் எழுகிறது. காரணம் நாம் கடந்த பத்து வருட அரசியல் களத்தை கூர்ந்து கவனித்தால் இது நன்றாகப் பரியும் திமுக உயர்மட்டத்தில் துவங்கி அடித்தள அலுவலகம் வரை நாள்தோறும் நடத்தும் ஊழல் தான் நமக்கு எதிரி!  ஆனால் எதையும் கண்டுகொள்ளாத மத்திய பாஜகவுக்கு ஊழல் எதிரியேயில்லை அவர்களின் கொள்கைகு மட்டுமே மக்கள் எதிரி!, சாமானிய மனிதர்கள் வாழ்வியலை ஒழித்து விடுவது தான் தமிழ்நாட்டில் மட்டும் பாஜக வளராத காரணம்  மற்ற மாநில மடையர்கள் போல தமிழர்கள் இல்லை இது புரியாமல் அதிமுக எனும் அவர்கள் ஊடைந்த கண்ணாடியை அவர்களே ஒட்டுவது போல அவர்கள் நடத்தும் நாடகம் இப்போது ஒரு முடிவுக்கு வந்தது




மயிலாப்பூர் ஆடிட்டர் குமபலுக்கு ஆளுமையான ஜெயலலிதாவை தலைவியாக உறுவாக்கிய மன்னார்குடி சசிக்கலாவையும் அவரது கணவர் முனைவர் நடராஜனையும் பிடிக்காமல் இருக்கலாம்  அவர்களையும் அரசியல் ரீதியாக பாஜக ஒழித்திருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 97  சதவீதம் உள்ள மக்களை மற்றும் பதவி பறித்த அண்ணாமலைகளை அதன் மக்களை அல்லவா பிடிக்கவில்லை வேதனை மூன்று முறை முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தை எதிர் திசையில் நகர்த்துகிறது.. இவருக்கு அரசியல் சாவா, வாழ்வா, என்பதவ்ல இப்போது நிலை, இவரது எதிரிகளின் வீழ்வா   அரசியல் மாற்றம் ன நினைத்தாலே மலைப்பாக உள்ளது!


அரசியலில் அடங்க மறுக்கும் ஆளுமையாக வலம் வந்த செல்வி ஜெ.ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் வீழ்ந்த பிறகு அவரது நிலை குறித்து யாரும் எதுவும் தெரிந்து கொள்ள முடியாத ஒரு சூழல் உருவாக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையும், அதைத் தொடர்ந்த நடந்த மரணமும் சசிகலா மீது அபண்டமாக பலிச்சொல் கூறி வதந்தி பரப்பிய வன்மம், யார் என்பதை நாமும் நாடும் நன்கறியும் ஆனால், வதந்தியை நம்பும் விபரம் தெரியாத சாமானியனுக்கு அது இன்னும் மர்மமாகவே உள்ளது!

அதற்காக உருவாக்கப்பட்ட ஓய்வு நீதிபதி ஆறுமுகச்சாமி கமிஷன் தன் வரம்புக்கு உட்பட்ட வகையில் நேர்மையாகவே விசாரணை செய்தது. ஆனால் அது அப்போலோ மீதும், சசிகலா மீதும் சில குற்றச்சாட்டுகளை வைத்தது. 


அதே சமயம் இதில் மத்திய பாஜக அரசு உள்ளே மறைந்திருந்து முழு  எபிசோட்டையும் நடத்தி முடித்தது என்பதையும், அதன் பின்னணியில் அன்றைய சுகாதாரத் துறையில் செயலாளர், அப்போலோ நிர்வாகமும், ஜெ.ராதாகிருஷ்ணனும், முன்னால் முதல்வரான ஒ.பன்னீர் செல்வமும் இருந்தார்கள் என்பது பல சாட்சிகளின் வழியாக வெளிப்பட்டதை ஏனோ குறிப்பிடவில்லை. 

இதை பா.பாலமுருகன் ஐ.ஆர்.எஸ் ஓய்வு அழகாக அம்பலப்படுத்தி உள்ளார்.. 


"ஜெயலலிதா மரணத்திலும், அதைத் தொடர்ந்த அரசியல் நிகழ்வுகளிலும் பாஜக தலைமை இங்கு பலரை பதுமைகளாக ஆட்டுவித்தது என்பதை இன்றைய அரசியலோடு இணைத்து பார்க்கும் போது இன்னும் பல புரிதல்கள், வெளிச்சங்கள் ஏற்படும்."   சில உண்மைகள்  ஊமைகளாக தூங்குகிறது,ஓ. பன்னீர் செல்லம் பற்றி இன்று திடீரென அதிமுக மற்றும் பாஜக கவலைப்படுவது போல நடிப்பது அரசியல் அல்ல; அது வெறும் நாடகம் தான்.

எடபபடி கே.பழனிசாமி அணியினரே, உண்மையை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்:

அவரிம் இணையாக இருந்து இரட்டை தலைமை கட்சிக் கொடியை சின்னத்தை பறித்தது யார்? 


அவர் கரைவேட்டி கட்டக் கூடாது என்று பழாப்பழத்தில் நிற்க வைத்து நீதிமன்றம் வரை ஓடியது யார்?

கட்சியிலிருந்து வெளியேற்றியது யார்.

“எங்களுக்கு சம்பந்தமே இல்லை” என்று அறிவித்ததும் யார்?.

“எந்த நிபந்தனையும் இல்லாமல் வருகிறேன்” என ஏற்கும் படி தன்மானம் விட்டு கேடட போதும் கதவை மூடியது யார்?

இவ்வளவு செய்து முடித்த பிறகு இன்று ஏன் இந்தக் கூச்சல்?

அரசியல் தோல்வியின் அச்சமா?

அதிகாரம் கையில் இருந்தபோது அகந்தையா;

இன்று அது குலையத் தொடங்கியதும் பதட்டம் இதுதான் இன்றைய கதறல் உண்மை.

நேற்று தள்ளியவரை இன்று தேடுவது அரசியல் நேர்மை அல்ல;

அது மக்கள் முன்னே நம்பிக்கை இழந்தவர்களின் திணறும் குரல்.

கட்சி என்பது ஒருவரின் சொத்தல்ல; எம்ஜிஆர் உறுவாக்கி பலர் வளர்த்தது நீங்கள் அதில் பாஜக தயவில் குடி வந்தவர் 

தொண்டர்களின் வியர்வையாலும், மக்களின் நம்பிக்கையாலும் உருவான இயக்கம்.அந்த நம்பிக்கையை உடைத்தவர்கள் இன்று பயத்தில் பேசுகிறார்கள்.

அதனால்,சத்தம் போடுவதால் உண்மை மாறாது. அரசியல் மேடையில் நடிப்பதால் வரலாறு அழியாது.

மக்களின் தீர்ப்பு தாமதமாகலாம்

ஆனால் தவறுபவர்களை ஒருநாள் கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு அல்ல, மக்களின் மனசாட்சிக்கே முன்னால் நிறுத்தும்.

அந்த நாளை நினைத்து தான் இன்றைய பதட்டம். அவர்கள் அந்தப் பயம் போதும்.

மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


இது ஜனநாயக தேசம்.இதை எம் ஜி ஆர் மற்றும் ஜெ ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து இச் செய்தி பதிவிட்ட நிலையில் வெளியிடப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...