கூட்டணிக் கட்சிகளை இணைக்கும் கட்சிகளும் காட்சிகளும் மீண்டும் 1972 மற்றும் 1996 திரும்புமா 2026 ல் அலசல்
தமிழ்நாடடில் தி.மு.க வில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க வின் தம்பிதுரை மற்றும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பதவிக் காலம் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி நிறைவடையும் நிலையில்.
தி.மு.க வசமுள்ள 4 இடங்களில் ஒன்றில் காங்கிரஸும், மற்றொன்றில் தே.மு.தி.க-வுக்கும் ஒதுக்கிய பின் மீதி இரண்டை திருச்சி சிவாவுக்கும், செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கும் ஒதுக்கி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்புக் கிடைத்ததன் பின்னணி குறித்துப் பார்த்தால் .
முன் ராஜ்ய எம்.பியாக பொறுப்புவகித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதில் ஆச்சரியமில்லை. ஆனால், கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கும் வாய்ப்புக் கிடைத்தது தான் ஆச்சரியம்
தே.மு.தி.க-விலிருந்து விலகி பத்தாண்டுகளாக தி.மு.க-வுக்காக மேடைகளிலும், ஊடகங்களில் பேசுகிறார். அவருக்காக கட்சி எதுவும் செய்யவில்லை இப்போது ராஜ்ய சபா சீட் கிடைத்ததாக பேசப்பட்டாலும் அதன் பின்னணியே வேறு
கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் தவெக தலைவர் நடிகர் விஜய் சார்ந்த கிறிஸ்துவ மீனவ சமூகத்தைச் சார்ந்தவர், திருவள்ளூர் துவங்கி நாகப்பட்டினம் நடுவில் தூத்துக்குடி, கன்னியகுமரி, வரை உள்ள கடற்கரைப் பகுதி உள்ள 25 சதவீதம் உள்ள தொகுதிகளில் கிருஸ்தவ மீனவ சமூக மக்கள் கணிசமாகவே வாழ்கின்றனர். ஆனால், சமீபத்திய சர்வேயில் மீனவ சங்கங்கள் மத்தியில் 'எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை' என போதாமை இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் கிருஸ்தவ மீனவ சமூகத்தினர் வாக்குகளும் நடிகர் விஜய் வந்த பின் சிதறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் வாய்ப்பு மீனவ சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கை தூத்துக்குடி பெண் அமைச்சர் ஒருவர் மூலம் நாடாளுமன்ற கட்சித் தலைவர் கனிமொழிக்குச் சென்று திமுக தலைவரான முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனம் சென்றது, அமைச்சர் கீதா ஜீவன், கன்னியாகுமரி மாவட்ட முக்கிய நிர்வாகிகள், தூத்துக்குடி நடாளுமன்ன உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் இந்தப் பரிந்துரைக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மீனவர்கள் சார்ந்த சமூக மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதால் புண்ணுக்குப் புணுகு தடவும் முயற்சி போல ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கொள்ளலாம். ஆகவே குமரி முதல் உள்ள மீனவர்கள் வாழும் தென்மாவட்டப் பிரசாரக் களத்தில் அவர் கவனம் செலுத்துவார் என்பதுடன் மாநிலங்களவை தேர்தலில் திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் வேட்பாளர் ஆனார், இவர் தேமுதிகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்.
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் தேமுதிக கூட்டணியின் சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்து நின்றவர்.
அதில் அதிமுகவின் S.R. விஜயகுமார் வெற்றி பெற திமுக வின் தயாநிதிமாறன் தோல்வியடைந்தார்.
தேமுதிக சார்பில் ரவீந்திரன் 114798 வாக்குகள் பெற்று 08 சதவீதம் வாக்குகளுடன் 03 வது இடம்
45841 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தோல்வியடைந்த நிலையில் தயாநிதி மாறன் தோல்விக்கு தேமுதிக வேட்பாளர் ரவீந்திரன் பெற்ற வாக்குகளும் ஒரு காரணம். அதோடு இந்தத் தேர்தலில் திமுக, இ.தே.காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி சி கட்சி, இ.யூ முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அ.இ.பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனித நேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 21 கட்சிகளும், தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகம் உள்ளிட்ட 22 கட்சிகள் கொண்ட மெகா கூடடணியுடன் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலை, ஆனால் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூடடணியில் ஒரு நடாளுமனற சீட்டைக் கொடுத்து, ஒட்டுமொத்த வன்னியர்களின் பாமக வாக்குகளை 2021 போல் பெற்று அதிமுகவின் பிடியை வைத்துக்கொண்டு விடுவார் சிலுவம்பாளையத்துக்காரர் எடப்பாடி கே. பழனிசாமி எனப் பெருமை பேசினாலும், திமுகவின் திருச்சி சிவாவைப் போல அதிமுக வில் மு. தம்பிதுரை தற்போது மீண்டும் உறுப்பினர் ஆகிறார் இந்த நிலையில் மூன்று உறுப்பினர் கொணட பாமகவின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மூன்றாவது முறையாக முப்பத்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக கூட்டணி ஆதரிக்கும் நிலை உள்ளதால் தற்போது அதிமுகவின் 27 உறுப்பினர்கள் பாஜகவின் நான்கு உறுப்பினர்கள் ஆதரவுடன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகிறார்,தேமுதிக சார்பாக காலஞ்சென்ற விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் கடந்து முறை அதிமுக ஏமாற்றிய நிலையில் இநத மூறை திமுக ஆதரவில் உறுப்பினர் வாய்ப்புப் பெறுகிறார். ஆகவே பிரேமலதா தற்போது தலைவர் விஜயகாந்த் மரணத்திற்குப்பின் மனைவியாக அந்த ரசிகர்கள் ஆன தொண்டர்களைத் தாங்கிப் பிடித்த கட்சி தேமுதிக தற்போது அவரது சகோதரர் ஆன சுதீஷ் நாடாளுமனறம் செல்லும் நிலை உறுவாகிறது.தற்போது விசில் சப்தம் பலமாகவே கேட்கும் நிலையில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தூக்கம் தொலைத்துத் தடுமாறும் நிலையை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது, 1972 ல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., 1996 ல் சிறப்பு நடிகர் ரஜினிகாந்த் ஊழலுக்கு எதிராக எழுப்பிய குரலே அப்போதய ஆட்சி மாற்றம் அதே நிலைதான் தற்போது 2026 ல் ஆக அதே அளவுக்கு சினிமா மாயை இப்போதும் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் கூடும் இளைஞர் படை யுவதிகள் படை கூற வைக்கிறது மு. கருணாநிதி, கே அண்ணாமலை போன்ற பேச்சுத் திறனும் நடிகர் விஜயிடம் இல்லை. காமராஜர், எம்.ஜி.ஆர். போல் மக்கள் மனதில் ஆழமாகவே பதிந்தவருமல்ல. ஆனாலும், நடிகர் விஜய்க்கு என ஒரு கூட்டம் யாருமே அழைக்காமல் திரள்வது இன்னும் பலருக்கும் புதிராகத்தான் உள்ளது.
திருவிழாக் கூட்டம் போலவும், இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் போலவும், தனது அபிமான நடிகரின் முதல் நாள் முதல் காட்சிக்காக திரளும் ரசிகர்கள் போலவும், உற்சாக அலைகளாக மக்கள் கூடுகிறார்கள். அதிலும் பெண்கள் பத்து மணி நேரம் காத்திருந்து அவரது பேச்சைக் கேட்கிறார்கள்
மற்ற அரசியல் அமைப்புகள் போல பணம் கொடுத்து, உணவும் கொடுத்து, ஆள் வைத்து, வேன் வைத்துக் கூட்டம் சேர்க்காமல், த.வெ.க. சார்பில் இயல்பாகவே இவ்வளவு பேர் கூடுவது கவனிக்க வேண்டிய விஷயம். மறுக்க முடியாது சுமார் 15 நிமிடப் பேச்சு. அதுவே. ஆனால் பேச்சு முடியும் வரை கரகோஷம் எழுட்சி வேகம் குறையவில்லை.
அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அவர்கள் முழுமையாக அரசியல் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டு கைகொட்டுகிறார்களா, அல்லது ஊழல் லஞ்ச லாவண்யம், சமாணிய மக்களுக்கு கடந்த காலங்களில் நடந்த ஏமாறறம் ஒரு மாற்றத்துக்கான ஆவலால் உற்சாகப்படுகிறார்களா? என்பது இங்கு சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட.
அவரது பேச்சில் முக்கியமாக திமுக அரசை விமர்சிப்பதே அதிகம். அதற்கு அப்பால் தனித்த அரசியல் வரைமுறை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பதும் உண்மை. இருப்பினும், திமுக அரசின் பலவீனங்களே விஜய்க்கு பலமாக மாறி வருகிறது. திமுக பதில் சொல்ல சிரமப்படும் கேள்விகளையே அவர் முன்வைக்கிறார்.
இதனால் அதிமுகவும் முழுமையாக நிம்மதியாக இருக்க முடியவில்லை, இருக்க முடியாது. திமுக எதிர்ப்பு வாக்குகள் எங்கு சென்று சேரும் என்பது பெரிய கேள்வி.
“ஒவ்வொரு குடும்பமும் திமுக ஆட்சியால் பயன் அடைந்துள்ளது” என்று திமுக கூறுகிறது. ஆனால் அது உண்மை இல்லை, அப்படியானால் நடிகர் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் திரளும் இளைஞர்கள், யுவதிகள் யார்? அவர்கள் ஏன் இவ்வளவு உற்சாகத்துடன் திமுக அரசின் மீதான விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்? இதுவும் தற்போது சிந்திக்க வேண்டிய விஷயம்.
இத்தனை சாதகமாக சூழ்நிலைகள் இருந்தாலும், நடிகர் விஜய் தவெக சார்பில் எந்த வகையான கூட்டணியை அமைக்கிறார் என்பதில் தான் அவருடைய அரசியல் எதிர்காலம் அமையும் என்கிறார்கள் அரசியல் வியாபாரிகள். ஆனால் அவர் மக்களான உங்களுடன் தான் கூட்டணி என்கிறார், கடைசிவரை தனித்துப் போட்டியிட்டால், திமுகவும் அதிமுகவும் பெரிய அச்சத்தில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அவரகளுககு பயம் காட்டி விட்டார்,
இது ஒரு அரசியல் மாற்றத்தின் தொடக்கமா? இல்லையெனில் ஒரு உணர்ச்சி அலையா? காலமே பதில் சொல்லும். மக்கள் தலைவனை காலமே தீர்மானிக்கும். இந்த நிலையில்
அஸ்ஸாம் வேட்பாளர்களின் 42 பேர் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மக்களவையில் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் கட்சியின் துணை தலைவர் கவுரவ் கோகோய் ஜோர்ஹாட்டில் இருந்து போட்டியிடுவார். திமுக கூட்டணியால் தான் வெற்றி பெற முடியும் எனக் கூறிய தமிழ்நாடு MLA களுக்கு இனி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கபடாதென AiCC தரப்புத் தகவலாக வரலாம். தற்போது அறிவார்ந்த பலரும் பேசுவது இதுவே, மூவர் பட்டியல் மூலம் ஒரு ராகுல் ஆதரவாளருக்கு அந்த வாய்ப்பு, வரலாம்.
நாடாளுமன்ற ராஜ்ய சபா ரத்து செய்யப்பட வேண்டும், தேர்தலில் போட்டியிடாமல் பலரும் பின்புறமாக ராஜ்ய சபாவிற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள்.
ராஜ்ய சபா என்பது அறிஞர்களும், சான்றோர்களும், ஒருவேளை தேர்தலில் புறக்கணிக்கப்பட்டாலோ தோல்வியடைந்தாலோ அவர்களின் அனுபவம் அறிவையும் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது சில பெரிய மனிதர்களுக்கு அது கௌரவப பதவியாக அமைய வேண்டும் என்பதற்காகவும் ராஜ்ய சபா உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று அது தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது, அரசியல் லாப நோக்கில் விலை போகிறது.
34 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் 34 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்த கட்சி அவர்கள் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அரசியல் காரடங்களால் உடன் இணைந்த கூட்டணிக் கட்சிக்கு பேரம் என்ற பெயரில் வேறு சில கட்சிகளுக்கு இந்தப் பதவியை கொடுத்து விடுகிறார்கள் இது முற்றிலும் இயற்கைக்கு அவர்கள் வாக்களித்தவர்களுக்கும் எதிரானது.
எந்தக் கட்சிக்கு வாக்களிக்கிறோமோ அந்த கட்சியின் ஒருவரைத் தான் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக ஆக்க வேண்டும் இது எழுதப்பட்டதல்ல இதுதான் நியாயம் தர்மம்.
வாக்காளர்களாகிய மக்களால் ஒரு கட்சிப் பிரதிநிதியை மக்கள் புறக்கணித்த பிறகு அவர் எப்படி இன்னொரு கட்சியின் ஆதரவுடன் ராஜ்ய சபாவுக்குள் நுழைய முடியும் இது மக்கள் கருத்துக்கு எதிரானதல்லவா? ஒருவேளை நிலை மாறினால் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் இது காலத்தின் தேவை



























கருத்துகள்