உணவகங்கள் வரிக்காக வருமானத்தைக் குறைத்துக் காட்டுகின்றனவா? என நாடு முழுதும் வருமான வரித்துறை சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறித்த அறிக்கை.
உணவு மற்றும் பதப்படுத்துதல் துறையில் வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறை 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விசாரணை மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல உணவகங்கள் அவர்களது கணக்கியல் மென்பொருளில் விற்பனைத் தகவல்களை நீக்குவது உள்ளிட்ட பல மாற்றங்களைச் செய்து உண்மையான விற்பனை அளவைக் குறைத்துக் காட்டியிருப்பது கண்டறியப்பட்டது.
சுமார் 1.77 லட்சம் உணவகங்களின் பரிவர்த்தனைத் தரவுகளை ஏ.ஐ. அடிப்படையிலான பகுப்பாய்வு மென்பொருட்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்ட தரவுகள் அவர்கள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கைகளில் (Income Tax Returns) காட்டிய வருமானத்துடன் ஒப்பிடப்பட்டதில் பெருமளவில் வருமானம் குறைவாகக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. சில சந்தர்ப்பங்களில், பதிவு செய்யப்பட்ட விற்பனைகள் முழுமையாக கணக்குகளில் அல்லது வரி தாக்கல்களில் முழுமையாக பிரதிபலிக்கவில்லை; மேலும் சில பரிவர்த்தனைகள் அறிக்கைகளிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டிருந்தன.
அதைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி அன்று, 22 மாநிலங்களில் உள்ள 46 நகரங்களில் அமைந்துள்ள 62 உணவகங்களில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், சுமார் ₹ 408 கோடி மதிப்பிலான விற்பனை மறைவு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
விதி மீறலில் ஈடுபட்டோர் தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ள உதவ SAKSHAM NUDGE எனப்படும் வழிகாட்டும் நடைமுறையின் கீழ், வருமான வரி சட்டம், பிரிவு 139(8A) படி புதுப்பிக்கப்பட்ட வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது
முதல் கட்டமாக, அடையாளம் காணப்பட்ட 63,000 உணவகங்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். அவர்கள் 31 மார்ச் 2026 ஆம் தேதிக்குள் தங்களின் வருமான வரி அறிக்கைகளை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவர். எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுஉணவகங்களில் வருமான வரித்துறை நாடு தழுவிய ஆய்வு: ரூ.408 கோடி விற்பனை மறைப்பு கண்டுபிடிப்பு
உணவு மற்றும் பானங்கள் துறையில் நடைபெறும் வரி ஏய்ப்பு முறைகள் குறித்து வருமான வரித்துறை ஆய்வு நடத்தியது. இதில், பல உணவகங்கள் தங்களது உண்மையான விற்பனையை மறைப்பதற்காக, மொத்த பில்களை நீக்குதல் மற்றும் கணக்குகளில் மாற்றங்களைச் செய்தது கண்டறியப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 1.77 லட்சம் உணவகங்களின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்தத் தரவுகள், அந்த உணவகங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளுடன் ஒப்பிடப்பட்டபோது, பெரிய அளவிலான வருமானக் குறைப்பு வெளிச்சத்திற்கு வந்தது. சில வழக்குகளில், உண்மையான விற்பனை நிதி கணக்குகளிலோ அல்லது வரித் தாக்கல் ஆவணங்களிலோ முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, 2026 மார்ச் 8 அன்று 22 மாநிலங்களில் உள்ள 46 நகரங்களில் 62 உணவகங்களில் நாடு தழுவிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சுமார் ரூ.408 கோடி மதிப்பிலான விற்பனை மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த மேல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வரி செலுத்துவோர் தாங்களாகவே முன்வந்து சரியான தகவல்களைத் தெரிவிப்பதை ஊக்குவிக்கும் வகையில், 'சக்ஷம் நட்ஜ்' என்ற பிரச்சாரத்தை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. தவறுகளைத் திருத்திக் கொள்ள விரும்புவோர், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(8ஏ)-இன் கீழ் புதுப்பிக்கப்பட்ட கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். முதற்கட்டமாக, கண்டறியப்பட்ட 63,000 உணவகங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு, வரும் மார்ச் 31-க்குள் கணக்குகளைப் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மக்களிடம் கொள்ளை அடித்த பணம் வரி கட்ட முடியவில்லை பின்புலம் தெளிலாகவே தெரிகிறது, வருமானவரிக்கு பயந்து . உணவுக்கே மக்களிடம் வரி வாங்கி மோசடி செய்யும் ஹோட்டல்களின் சங்கங்களின் GAS பற்றாக்குறை எனும் நாடகம் நடக்கிறது மக்களை முட்டாளாக நினைக்க வைத்து நடக்கும் ஒரு தேர்தல் நேர நாடகமாகவே காணலாம். சமீபத்தில் அமைச்சர் KN நேரு செய்த ஊழல் தொடர்பாக ED எழுதிய கடிதத்தில், திமுக ஆட்சியில் டெண்டர் fixing இல் ஈடுபட்டுள்ளதாக பல நபர்களின் பெயர் வெளிவந்தது.
அதில் ஒருவர் தான் இந்தக் கடிதத்தை எழுதிய வசந்த பவன் ரவி



கருத்துகள்