அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரைக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நீதிமன்றம் ஆணை.
அதிமுகவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரைக்குச் சொந்தமான செயின்ட் பீட்டர்ஸ் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகில் கோனம்பேடு கிராமத்திலூள்ள இந்தக் கல்வி நிறுவனம் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விடுதிகள், துணை மின் நிலையம், தனியார் பாதைகள் அமைத்துள்ளதாக கிராம பொதுநல சங்கம் சார்பில் 2021 செப்டம்பரில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோலவே காடடாங்குளத்தூர் ஏரியை எஸ் ஆர் எம் கல்வி நிறுவனம் பாரி வேந்தரான பச்சைமுத்து உடையாரும், ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி போரூர் ஏரியிலும் ஆக்கிரமித்த ராமசாமி உடையாரருப் போலவே தற்போது தம்பிதுரை ஆக்கிரமிப்பும் உள்ளது,
வழக்கில், கோனம்பேடு கிராமத்திற்கு அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால், மீட்கப்படும் நிலங்களை அந்தப் பள்ளிக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன் பிப்ரவரி மாதம் 10 தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, அரசு தாக்கல் செய்த நில அளவையர்கள் ஊழல் செய்து வழங்கிய நில அளவீட்டு அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் அளவீடு செய்து இரு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
விசாரணை மீண்டும் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் 61.18 செண்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் 12 வாரங்களுக்குள் (சுமார் 3 மாதங்கள்) சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு வெளியான அதே நாளில், தான் அதிமுக சார்பில் 6-வது முறையாக நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக மு.தம்பிதுரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோனம்பேடு கிராம மக்கள் நீண்டகாலமாக இந்த ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அரசு நிலங்கள் மீட்கப்பட்டால், அவை பொதுமக்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் கோணாம்பேடு, நாராயணபுரம் கிராமங்களில், மு. தம்நிதுரை பள்ளி மற்றும் கல்லுாரிகளைக் கட்டி உள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி நிறுவனம், செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளிகள், பொறியியல் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளன. அதிமுக, எம்.பி, தம்பிதுரையின் குடும்ப உறுப்பினர்கள், செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
வருவாய்துறை ஆவணங்களில் நீர்நிலை நீர்ப்பிடிப்பு, கல்லாங்குத்து என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, மாணவ- மாணவியருக்கான கல்லுாரி விடுதிகள், பயிலகம், துணைமின் நிலையம், கல்லுாரி பஸ்களை நிறுத்த தனி சாலை போன்றவற்றை அமைத்து உள்ளனர். 2001-ஆம் ஆண்டு முதல், பொது நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் , கோட்டாட்சியர் உள்ளிட்டோர் நிலங்களை உரிய நில அத்துமால் செய்து அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்டம் கோணாம்பேடு கிராம பொது நல சங்கத் தலைவர் ஜி. கருணாநிதி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்.பி. மு.தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க மூன்று மாதத்தில் நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சுமார் 2,476 சதுர மீட்டர் நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவரின் கல்வி நிறுவனம் மீதான ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை அரசு எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதை பல கல்வி நிறுவனங்கள் அரசியல் போர்வையில் ஆக்கிரமிப்பு செய்த நிலையில் விழிமபு நிலை மக்கள் சிறிய இடம் ஆக்கிமிப்பு செயதால் மட்டுமே அரசின் இரும்புக் கரம் நீளுகிறது ஆனால் ஊழல் அலுவலய்கள் மற்றும் ஆட்சியாளர்கள் இருக்கும் வரை பல பெருச்சாளிகள் நாட்டைப் பள்ளம் தோண்டி விடடனர் நீதிமன்றம் தான் தீர்வு எனும் நிலை பொறுத்திருந்து பார்க்கலாம். இது தமிழ்நாட்டின் நில ஆக்கிரமிப்புப் பிரச்னைகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்மாதிரியாக அமைகிறதா அல்லது இந்த ஊழலுக்கு குடை பிடிக்கிறதா என்பது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் பின் தான் தெரியும், பாமர மக்கள் முயற்சி பலனளித்தால் மகிழ்ச்சி




கருத்துகள்