முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்களை விற்று சித்திரம் வாங்கிய மதிமுக

மறுமலர்ச்சி திமுகவின் அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னை எழும்பூர் தலைமை நிலையமான தாயகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ்  தலைமையில் நடைபெற்றது,

பொதுச் செயலாளர் வைகோ எனும் வையாபுரி கோபால்சாமி சிறப்புரையாற்றினார், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளரும் திருச்சிராப்பள்ளி நாடாளுமனற மக்களவை உறுப்பினர் துரை வைகோ, எனும் துரை வையாபரி, துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா முருகன், தி.மு. ராஜேந்திரன், டாக்டர் ரோஹையா உள்ளிட்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் எந்த முடிவுக்கு வந்தாலும் வைகோ திமுகவுடன்,  அவரது மதிமுகவை இணைத்து விடலாம். திமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதில் அதுவே சரியான நடவடிக்கையாக இருக்கும். மு. க.ஸ்டாலினை எதிர்த்து கட்சி தொடங்கியவர், இறுதியில் மு. க.ஸ்டாலினிடமே சரணடைந்துவிட்டார்.தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களில் இதுவரை மதிமுக போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை


1996 ஆம் ஆண்டு 177தனி அணியாக

2001 -ஆம் ஆண்டு 211 தனி அணியாக,

2006 ஆம் ஆண்டு 35 அதிமுக கூட்டணி,

2011 ஆம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு

2016 -ஆம் ஆண்டு 28 மக்கள் நலக்கூட்டணி,

2021 ஆம் ஆண்டு 6 திமுக கூட்டணி,

2026 ஆம் ஆண்டு 4 ல் மூன்று திமுக ஒன்று மதிமுக திமுக கூட்டணி,                                          ம தி மு க முதன்முறையாக 1996 ஆம் ஆண்டில் சட்டமன்றத்திற்கும் நடாளுமன்றத்திற்கும் மதிமுக சிபிஎம் ஜனதா கட்சி கூட்டணியாக நின்று போட்டியிட்டது. சட்டமன்றத்தில் 177 தொகுதியில் போட்டியிட்டு  நான்கு இடத்தில் தான் டெபாசிட் வாங்கியது. ஒன்று விளாத்திகுளத்தில் வைகோவும் கோவில்பட்டியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சங்கரன்கோவிலில் முன்னால் அமைச்சர் தங்கவேலு,  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் பாலசுப்பிரமணியம் (முன்னாள் சட்டமன்றத் துணைச் சபாநாயகர்). உள்ளிட்ட மொத்தம் 178 தொகுதியில் போட்டியிடட

 பிறகு 2001 ஆம் ஆண்டில் திமுக கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு 21 சீட்டுக்கள் உறுதியான நிலையில் அதுவும் கலைஞர் மு. கருணாநிதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வைகோவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட நிலையில் திடீரென்று வைகோ அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார். இதை பெரிய மனசாக ஏற்றுக் கொள்ள வேண்டும்  என  கலைஞர் கருணாநிதி கூறிய பிறகும்  தான் வெற்றி வேண்டும் என்ற  நிலை இல்லாமல் திமுக தோற்க வேண்டும் என்ற நோக்கத்தில் 211 தொகுதியில் தனியாக நின்று ஒற்றைப்படை இரட்டைப்படை ஓட்டுகளைத் தான் மதிமுக வாங்கியது. பிறகு மக்கள் நலக் கூட்டணியை  உருவாக்கி செல்வி ஜெ.ஜெயலலிதாவிடம் விசுவாசத்தை காட்டி திமுகவின்  ஓட்டைப் பிரித்து  அதிமுகவை வெற்றி பெறச் செய்தார்.

தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம் அவரின் அரசியல் தலைமைக்கு என உழைத்தவர்களுக்கெல்லாம் பொருட்டாக நினைக்காமல் அவர்களைத் தெருவில் விட்டார்


இப்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான திமுக கூட்டணியில் ஒரு சீட்டு  ( கிடைக்கும் )உங்களின் சின்னம் , மூன்று சீட்டு திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று  கூட்டணியில்  ஒப்பந்தமாகி உள்ளது . இந்த நிலைமை வைகோவினால் தானே வந்தது.! மிகச்சிறந்த பார்லிமென்டேரியன் மிகச் சிறந்த பேச்சாளர் மிகச்சிறந்த தலைமை தாங்கும் பண்புள்ளவர் எங்கே சறுக்கினார்?

அன்றைய நாளில் வைகோவிற்கு என்ன விதமான குண மாறுபாடுகள் ஏற்பட்டது என்று அவரோடு பழகியவர்களால் கூட சொல்லத் தெரியவில்லை. என்றாலும் அறிவார்ந்த பலரை அவர் நிராகரித்ததனுடைய விளைவைத்தான் இப்போது அவர் சந்திக்கிறார். அவருக்கு உழைத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் சுயமரியாதை என்று ஒன்று இருக்கிறது அல்லவா?  ஆகவேதான் நடப்பதை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டனர். வைகோ இன்று முற்றிலும் வீணாகி ஏதோ ஒரு நிலையில் நிற்கின்றார். யோசித்துப் பார்த்தோமேயானால் அவருக்கு பிறகு வந்த நடிகர் விஜயகாந்த் மிகச்சிறப்பான முறையில் எதிர்க்கட்சித் தலைவராகவே சட்டமன்றத்தில் அமர்ந்தார். இன்றைக்கு அவர்களுக்கு கூட ஒரு நாடாளுமன்ற ராஜ்யசபா சீட் கூட்டணியில் உறுதியாகி இருக்கிறது.  வரலாறு எப்படித் திரும்புகிறது என்று பார்த்தால் இன்றைக்கு நடிகர் சீமான் நடிகர் விஜய் போன்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து விட்டார்கள். 2001 ஆம் ஆண்டில் வைகோ தன்னுடைய கேரியரில் நான் வாதாடிய படி மிகச்சிறந்த ஒரு அரசியல் முடிவை எடுத்திருந்தால் அவருக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?

எத்தனை பெரிய ஆதரவு! எத்தனை பெரிய கூட்டம்! வைகோ திமுகவை விட்டு வெளியே வந்த போது மிகப்பெரிய மாற்று அரசியல் உருவாகப் போகிறது என்று தமிழ்நாடு முழுக்க எதிர்பார்த்த ஒன்றை வைகோ எப்படி சீர்குலைத்தார். எப்படித் தன் தலையில் யானை போல மண்ணள்ளிப் போட்டுக் கொண்டார். 

தமிழ்நாட்டின் அரசியலில் நேர்மையானவர் , தூய்மையானவர் வைகோ என்ற பிம்பம் உருவானது. அனைத்து அரசியல் கட்சிகளோடும் உடன்பாடு, கூட்டணி என்று வசதிக்கேற்ப வைத்துக் கொண்டு கட்சியைக் கடலில் பெருங்காயம் போலக் கரைத்து விட்டார்.

  தி.மு.க.,வாரிசு  அரசியல் செய்கிறது என்று குற்றம் சாட்டி வெளியேறியவர் தன் மகனையே வாரிசாக அடையாளப்படுத்தி டில்லிக் கோட்டைக்கும் அனுப்பி வைத்ததன் பின்னர் இவரிடம் அரசியல் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? வெற்று ஆரவாரமும் அடுத்தவர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டு அலைவதை விட கட்சியைக் கலைத்து விடுவது வைகோ அவர்களுக்கு நல்லது. வைகோ வெளியேற்றப்பட்டபோது தீக்குளித்த தமிழர்களுக்கு இச் செய்தி சமர்பணம்.

ஆக தற்போது மூன்று தொகுதி திமுக வேட்பாளர்கள் மதிமுகவின் நபர்கள் இது கட்சி மாறி திமுக உறுப்பினர் அட்டை வாங்கினால் தான் படிவம் ஏ மற்றும் பி வழங்க முடியும் ஆக ஒரு சீட்டு இவர்கள் கட்சி வேட்பாளர் இனி இவர்கள் கட்சியை உடைத்து புதிய நபர் கட்சி மல்லை சத்யாவுக்கும் சீட்டை ஒதுக்கினால் இவர் நிலை கண்களை விற்று சித்திரம் வாஙகியவர் நிலைதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...